கிருஷ்ணகுமார் குன்னத்

கிருஷ்ணகுமார் குன்னத் (Krishnakumar Kunnath) (பிறப்பு: 23, ஆகத்து 1970) என அறியப்படும் இவர் பொதுவாக கேகே என்றும் அறியப்படுகிறார். இந்தியாவைச் சேர்ந்த பாடகரான இவர் இந்தி, தெலுகு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிப் பாடல்களைப் பாடியுள்ளார்.[1] இவர் பின்னணி இசைப் பாடகராகவும், பாப் மற்றும் ராக் இசைப் பாடகராகவும் அறியப்படுகிறார்.

இளமையும் கல்வியும்தொகு

இந்து மலையாளக் குடும்பத்தில் தில்லியில் பிறந்தவர் இவர். பெற்றோர் சி. எஸ். நாயர் மற்றும் குன்னத் கனகவல்லி ஆவார்.[2] இந்தித் திரைப்படங்களில் பாடுவதற்கு முன்னர் 3500 சிற்றிசைகளில் (jingles) பாடியுள்ளார். இவரது பள்ளிப் படிப்பை ‘’மவுண்ட் செயிண்ட் மேரிஸ் பள்ளி’’யிலும் ( Mount St Mary's School), பட்டப்படிப்பினை தில்லி பல்கலைக்கழகதிலும் படித்தார்.[3] 1999 உலகக்கோப்பைப் போட்டிக்காக இந்திய அணிக்காக ‘’ஜோஸ் ஆஃப் இஃதியா’’ எனும் உற்சாகமூட்டும் பாடலைப் பாடினார்.[4]

குடும்ப வாழ்க்கைதொகு

இவர் இவரது குழந்தைக்காலத் தோழியான ‘’ஜோதி’’யை 1991 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.[5] இவர்களுக்கு ‘’நகுல் கிருஷ்ணா குன்னத்’’ (Nakul Krishna Kunnath) எனும் மகனும் ‘’தாமரா குன்னத்’’ (Tamara Kunnath) எனும் மகளும் உள்ளனர். மகன் பாடகராகவும் மகள் பியானோ இசைக் கலைஞராகவும் அறியப்படுகின்றனர்.[6]

திரையிசைப் பாடகர்தொகு

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் சில மாதங்கள் விடுதி நிர்வாகியாகவும்(Hotel Management) இருந்தார். கேகே தனது பாடும் முறைகளில் பாடகர் ‘’கிஷோர்குமார்’’ மற்றும் இசையமைப்பாளர் ஆர். டி. பர்மன், ‘’மைக்கேல் ஜாக்சன், பில்லி ஜோயல், ப்ரையன் ஆடம்ஸ்’’ ஆகியோரின் சாயலைக் கொண்டுள்ளார். மேலும் இவர் எவரிடமும் இசையைக் கற்றுக் கொள்ளவில்லை.

இசைத் தொகுப்புகள்தொகு

1999 ஆம் ஆண்டின் புதியப் பாடகராக சோனி நிறுவனம்  இவரைத் தேர்வு செய்தது.  இவரது இசைத் தொகுப்பான பால்(Pal ) தேர்வு செய்யப்பட்டது.[7] இதன் இசைச் சேர்க்கையை லீஸ் லூயிஸ் அமைந்திருந்தார். பாடல் வரிகளை மெகபூப் எழுதியிருந்தார். சிறந்த பாடகருக்கான விருது இந்த இசைத் தொகுப்பின் மூலம் இவருக்குக் கிடைத்தது. ஹூம்சபஃர் எனும் இரண்டாவது இசைத் தொகுப்பினை எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 22 ஜனவரி 2008 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.[8]ஜஸ்ட் மொகப்பத், சகாலகா பூம்பூம், குச் ஜுகி சி பால்கிய்ன், ஹிப் ஹிப் ஹுர்ரே, காவ்யாஞ்சலி, ஜஸ்ட் டேன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்காகவும் பாடல்கள் பாடியுள்ளார். 2010 ஆம் ஆண்டின் ஸ்டார் பரிவார் விருதுகள் நிகழ்ச்சிக்காக ஸ்ரேயா கோஷலுடன் பாடல்கள் பாடியுள்ளார். 29 ஆகத்து 2015 அன்று இளம் பாடகர்களின் திறமையினை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வளரும் பாடகர்களை ஊக்குவிப்பதற்காக பாடினார். பத்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார்.[9] மேலும் பாகிஸ்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தன்கா சாலா எனத் தொடங்கும் பாடலை ஃபரூக் அபித் இசையமைப்பில் பாடினார். 2013 ஆம் ஆண்டில் ரைஸ் அப் - கலர்ஸ் ஆப் பீஸ் (Rise Up – Colors of Peace) எனும் சர்வதேச இசைத்தொகுப்பு ஒன்றில் பாடல்களைப் பாடினார். இந்த இசைத்தொகுப்பினில் 12 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கு பெற்றிருந்தனர்.  இதன் பாடல்களை துருக்கி நாட்டு பாடலாசிரியர் பெட்டுலா குலன் (Fetullah Gulen) எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. http://www.screenindia.com/old/fullstory.php?content_id=4688
  2. Lasrado, Richie (25 November 2006). "A Kandid Konversation with KK". Daijiworld.com. மூல முகவரியிலிருந்து 23 ஆகஸ்ட் 2017 அன்று பரணிடப்பட்டது.
  3. "KK sang 3,500 jingles before Bollywood break". Sify movies (28 April 2009).
  4. "KK Profile". In.com. மூல முகவரியிலிருந்து 11 May 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 August 2009.
  5. "Sensational Singer KK to Perform Live in City on Nov 23". Daijiworld.com (22 November 2006).[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Music runs in the family". BombayTimes. http://www.bombaytimes.com/music-runs-in-the-family/articleshow/61602864.cms. 
  7. "8th Annual Star Screen Awards 1999". Screen India. மூல முகவரியிலிருந்து 24 June 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 September 2011.
  8. http://www.screenindia.com/story.php?id=269294&pg=-1%7Ctitle=
  9. "Composing music is an extension of my being:KK". Sify movies. (24 February 2008).