பொன் விலங்கு (திரைப்படம்)

பொன் விலங்கு 1993 ஆம் ஆண்டு ரகுமான், ரஞ்சித், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் நடிப்பில், இளையராஜா இசையில், அறிமுக இயக்குனர் கே. எஸ். ராஜ்குமார் இயக்கத்தில், கே. ராஜரத்தினம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2]

பொன் விலங்கு
இயக்கம்கே. எஸ். ராஜ்குமார்
தயாரிப்புகே. ராஜரத்தினம்
கதைஈ. இராமதாஸ் (வசனம்)
திரைக்கதைகே. எஸ். ராஜ்குமார்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். சந்திரமௌலி
படத்தொகுப்புவி. உதயசங்கரன்
கலையகம்ஆர்.கே. புரொடக்சன்ஸ்
வெளியீடுஏப்ரல் 9, 1993 (1993-04-09)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

முத்து (ரஞ்சித்) தன் சகோதரி மல்லிகாவுக்காக (சிவரஞ்சனி) வாழ்பவன். முன்கோபக்காரனான முத்து தவறு செய்தவர்களை அடித்துவிடுவான். மேலும் காவலர்களைக் கண்டாலே வெறுப்பவன். முத்துவை நேசிக்கும் ராணி (ரம்யா கிருஷ்ணன்) முத்துவைக் கவர பல வழிகளில் முயற்சித்துக் கொண்டே இருப்பவள்.

நேர்மையான காவல் ஆய்வாளர் ரகு (ரகுமான்) மீது மல்லிகா காதல் கொள்கிறாள். இருவரும் காதலிப்பதை அறியும் முத்து தன் தங்கையை அடித்துவிடுகிறான். ராணி குறுக்கே வந்து முத்துவைத் தடுத்து அழைத்துச் செல்கிறாள். அவளிடம் தான் காவலர்களை வெறுப்பதற்கான காரணத்தைச் சொல்கிறான்.

முத்து சிறுவனாக இருந்தபோது ஏழையான அவன் அப்பா தொழில் செய்வதற்காக ஒரு மிதிவண்டியை முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் குறைவான விலையில் வாங்கி வீட்டுக்குக் கொண்டுவருகிறார். அடுத்த நாள் அவர்கள் வீட்டுக்கு வரும் காவலர்கள் மாவட்ட ஆட்சியர் வீட்டிலிருந்து மிதிவண்டியைத் திருடிவந்து வைத்திருப்பதாக முத்துவின் தந்தையைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். தன் கணவனைப் பார்க்கவரும் முத்துவின் தாயை காவலர்கள் கற்பழித்துக் கொன்றுவிடுகின்றனர். அவமானம் தாங்காமல் அவன் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். இதன் காரணமாக முத்து அப்போது முதல் காவலர்களை வெறுக்கிறான். இந்த விபரங்களை அறியாத கைகுழந்தையாக இருந்த மல்லிகாவை அதன்பின் முத்துவே கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளான்.

முத்துவைப் புரிந்துகொள்ளும் மல்லிகா தான் ரகுவை மறந்துவிடுவதாக உறுதியளிக்கிறாள். ராணியின் வேண்டுகோளுக்கிணங்க ரகு-மல்லிகா திருமணத்திற்கு சம்மதிக்கும் முத்து அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறான். திருமணத்திற்கு முன் ரகு வேலையை விட்டு விலக வேண்டும். இதற்கு ரகு சம்மதித்தானா? திருமணம் நடந்ததா? என்பதே முடிவு.

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் வாலி, முத்துலிங்கம் மற்றும் காமகோடியன்.[3]

பாடல் வரிசை
வ. எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 ஒரு கோலக்கிளி காமகோடியன் ஜெயச்சந்திரன், சுனந்தா 5:07
2 சந்தன கும்பா முத்துலிங்கம் மனோ, உமா ரமணன் 6:07
3 கொடுத்துவச்ச வாலி மலேசியா வாசுதேவன், சுனந்தா 5:05
4 இந்த பச்சைக்கிளி வாலி ஜெயச்சந்திரன் 5:01
5 ஊட்டி மலை வாலி மலேசியா வாசுதேவன், சுனந்தா 5:05

மேற்கோள்கள் தொகு

  1. "பொன்விலங்கு". Archived from the original on 2004-12-22. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "பொன்விலங்கு". Archived from the original on 2010-06-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "பாடல்கள்".