சேது (திரைப்படம்)

பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சேது (Sethu) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அபிதா,சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சேது
இயக்கம்பாலா
கதைபாலா
இசைஇளையராஜா
நடிப்புவிக்ரம்
அபிதா
சிவகுமார்
ஸ்ரீமான்
மோகன் வைத்யா
பாரதி
வெளியீடு1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

காதல்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கல்லூரியில் காடையர்கள் தலைவனாக இருக்கும் சேது (விக்ரம்) என்ற பட்டத்தையுடைய மாணவர் அங்கு புதிதாகக் கல்வி பயில வரும் மாணவியான அபிதாவைக் காதலிக்கின்றார். அவள் மீதிருந்த காதலை வெளிப்படுத்திப் பலமுறை தெரிவிக்கின்றார். இருப்பினும் அபிதா பயத்துடன் காணப்படுகின்றாள். இதனைப் பார்த்த சேதுவும் அபிதாவைக் கடத்திச் சென்று காதலிக்காவிடில் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டுகின்றார். இதன்பின்னர் சேதுவைக் காதலிக்கின்றார் அபிதா. இதற்கிடையில் சேதுவின் எதிரிகளினால் சேது தாக்கப்பட்டு மனநோயாளியாகின்றார். பின்னர் மனநோயாளிகள் காப்பகத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றார். சேதுவிற்காக ஏங்கியிருக்கும் அபிதாவிற்கு அவர் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இச்சமயம் மனநோயாளிகள் காப்பகத்திலிருந்த சேதுவிற்கு நோய் சிறிதாகக் குறைந்தது. ஆகவே விழித்துக்கொண்ட சேது இரவோடு இரவாக அக்காப்பகத்திலிருந்து தப்பி ஓடுகின்றான். அபிதாவின் வீட்டை நோக்கி ஓடிச் செல்லும் பொழுது அங்கு அபிதா தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் நொந்து போகின்றான்.

விருதுகள் தொகு

2000 தேசிய விருது (இந்தியா)

  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த வட்டாரமொழித் திரைப்படம் (தமிழ்) - சேது - பாலா

பாடல்கள் தொகு

துணுக்குகள் தொகு

  • இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டில் ஹிந்தியில் மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டது. தேரே நாம்
  • கன்னடத்திலும்,தெலுங்கு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேது_(திரைப்படம்)&oldid=3715683" இருந்து மீள்விக்கப்பட்டது