திகம்பர சாமியார்
திகம்பர சாமியார் (Thigambara Samiar) 1950 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் தயாரித்து, இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், டி. பாலசுப்பிரமணியம், பி. வி. நரசிம்ம பாரதி ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]
திகம்பர சாமியார் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | மாடர்ன் தியேட்டர்ஸ் |
மூலக்கதை | நாவல் திகம்பர சாமியார் படைத்தவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் |
இசை | ஜி. ராமநாதன் எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | எம். என். நம்பியார் பி. வி. நரசிம்ம பாரதி டி. பாலசுப்பிரமணியம் வி. கே. ராமசாமி எம். எஸ். திரௌபதி |
ஒளிப்பதிவு | ஜி. ஆர். நாதன் டி. எஸ். கோட்னிஸ் |
படத்தொகுப்பு | எல். பாலு |
வெளியீடு | செப்டம்பர் 22, 1950 |
ஓட்டம் | 173 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரைக்கதை
தொகுகும்பகோணத்தைச் சேர்ந்த நேர்மையற்ற ஒரு வழக்கறிஞரான சட்டநாதன் வடிவாம்பாள் என்ற பெண்ணைத் தன் உதவாக்கரைத் தம்பி மாசிலாமணிக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் வடிவாம்பாள் கண்ணப்பன் என்ற அழகான இளைஞனை விரும்புகிறாள். திகம்பர சாமியார் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் சாமியார் உடையணிந்த ஒருவன் வழக்கறிஞரின் திருகுதாளங்களை அம்பலப் படுத்த முயற்சி செய்கிறான். கதையில் பல திருப்பங்கள் வருகின்றன. அவன் பல தடவைகள் தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறான். இறுதியில் தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுகிறான்.
ஒருவரை 3, 4 நாட்கள் தூங்க விடாமற் செய்தால் தன் மனதில் ஒளித்து வைத்திருக்கும் இரகசியங்களை வெளியில் சொல்லிவிடுவான் என்ற கருத்து இந்தக் கதையில் வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கறிஞர் தூங்காமல் இருப்பதற்காக, திரைப்படத்தில் லலிதா, பத்மினி, குமாரி கமலா ஆகியோரின் நடனங்கள் இடம் பெற்றுள்ளன.[2]
நடிகர்கள்
தொகு
|
|
தயாரிப்புக் குழு
தொகு- இயக்குநர் = டி. ஆர். சுந்தரம்
- ஒளிப்பதிவு = ஜி. ஆர். நாதன்
டி. எஸ். கோட்னிஸ் - ஒலிப்பதிவு = எஸ். பத்மநாபன்
டி. எஸ். ராஜு - நடனப்பயிற்சி = வழுவூர் பி. இராமையா பிள்ளை, மாதவன், ஆர். டி. கிருஷ்ணமூர்த்தி
- கலையகம் = மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம்
வரவேற்பு
தொகுபல்வேறு வேடங்களில் வரும் எம். என். நம்பியாரின் நடிப்புக்காகவும், பிரபலமான பாடல்களுக்காகவும் இத்திரைப்படம் நினைவில் நிறைந்திருக்கும் என திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை எழுதியுள்ளார்.[2]
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள்: ஜி. ராமநாதன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோர். பாடல்களை கா. மு. ஷெரீப், ஏ. மருதகாசி, கே. பி. காமாட்சிசுந்தரம், கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் இயற்றினர். பின்னணி பாடியோர்:கே. வி. ஜானகி, யு. ஆர். சந்திரா, கே. பி. கோமளம், டி. ஆர். கஜலட்சுமி, பி. லீலா, மாஸ்டர் சுப்பையா ஆகியோர்.[2]
வரிசை எண் |
பாடல் | பாடியவர் | பாடலாசிரியர் | கால அளவு(m:ss) |
---|---|---|---|---|
1 | மாப்பிள்ளை பார் அசல் | 04:41 | ||
2 | நாதர் முடி மேலிருக்கும் | பி. லீலா | 08:10 | |
3 | வாழ்வில் தானே யாவும் | 03:15 | ||
4 | அண்ணா ஒரு பைத்தியமாய் | டி. ஆர். கஜலட்சுமி | 02:27 | |
5 | காக்க வேண்டும் கடவுளே | 06:59 | ||
6 | எப்போதும் இந்த கேலிப் பேச்சு | யு. ஆர். சந்திரா | 02:00 | |
7 | சன்மார்க்கன் தியாகம் | 03:11 | ||
8 | வாழப் பிறந்தவர் நாமே | 02:52 | ||
9 | ஊசிப் பட்டாசே | 02:16 | ||
10 | பாருடப்பா பாருடப்பா | 02:59 | ||
11 | போடி போயேண்டி சீக்கிரம் எடுத்துவா | |||
12 | ஏன் இந்தப் பெண் ஜென்மம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "அந்தக் காலத்திலேயே 11 வேடங்கள்; உளவியல் கதை; துப்பறியும் கதை! ஹீரோவாக அசத்திய நம்பியார்; 'திகம்பர சாமியார்' வெளியாகி 70 ஆண்டுகள்". "இந்து தமிழ்". 22 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 Randor Guy (2008-10-31). "Digambara Saamiyar 1950". "தி இந்து". Archived from the original on 30 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-30.
- ↑ "an uncelebrated versatile actor". asokan63. Archived from the original on 3 February 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-02-03.