வழுவூர் பி. இராமையா பிள்ளை
வழுவூரார் என சிறப்புடன் அழைக்கப்பட்ட வழுவூர் பி. இராமையா பிள்ளை (Vazhuvoor P. Ramaiyah Pillai, 1910 - 1979) தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர்.
வழுவூர் பி. இராமையா பிள்ளை | |
---|---|
பிறப்பு | வழுவூர் |
ஆரம்ப வாழ்க்கைதொகு
பெற்றோர்: பார்த்திபன் - பாக்யத்தம்மாள். நட்டுவாங்கம், பரதநாட்டியக் கலைகளை தனது தாய் மாமன் மாணிக்க நட்டுவாங்கனாரிடம் இராமையா பிள்ளை கற்றார்.
கலை வாழ்க்கைதொகு
பரதநாட்டியத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டதற்காக இவர் பாராட்டப்படுகிறார். இராம நாடக கிருதிகள், தியாகராய சுவாமிகளின் கிருதிகள், பாரதியார் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி, அருணாச்சலக் கவிராயர் பாடல்கள், ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யரின் பாடல்கள் என்பனவற்றை பரதநாட்டியத்தில் இடம்பெறச் செய்தார். ஆங்கிலேய அரசாங்கம் பாரதியாரின் பாடல்களை தடை செய்திருந்த காலத்தில், தனது மாணவர்களை அப்பாடல்களுக்கான நாட்டியத்தை மேடைகளில் நிகழ்த்தும்படி செய்தார்.
இசைச் சந்ததியினர்தொகு
இவரின் மூத்த மகன் சாம்ராஜ் ஆவார். இளைய மகன் மாணிக்க விநாயகம் ஆவார்.
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்தொகு
- பத்மினி
- லலிதா
- வைஜயந்திமாலா
- ஈ. வி. சரோஜா
- பத்மா சுப்ரமணியம்
- எல். விஜயலட்சுமி
- குமாரி கமலா
- கமலா இலக்சுமணன்
- கனகா சிறீனிவாசன்
- நடனக் கல்வியாளர் சுஜாதா விஜயராகவன்
- சித்ரா விசுவேசுவரன்
- ரமணத்திலகம் (இவர், கவிஞர் வாலியின் மனைவியாவார்)
திரைத்துறைக்கான பங்களிப்புதொகு
மீரா திரைப்படத்தில் இடம்பெற்ற நடனக் காட்சிகளை இவர் அமைத்திருந்தார்.
பெற்ற விருதுகள்தொகு
- இசைப்பேரறிஞர் விருது, 1961. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1]
- சங்கீத நாடக அகாதமி விருது, 1966. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[2]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1979
- பத்மசிறீ
- கலைமாமணி விருது
- நாட்டிய கலா கேசரி
மேற்கோள்கள்தொகு
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (23 டிசம்பர் 2018). பார்த்த நாள் 23 டிசம்பர் 2018.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018. http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.