வழுவூர் என்பது இந்தியா, தமிழ் நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் தாலூக்காவிலுள்ள ஊராகும்[2][3].

வழுவூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாவட்டம் நாகப்பட்டினம்
ஊராட்சி தலைவர் செந்தில்நாதன்[1]
மக்களவைத் தொகுதி வழுவூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


அமைவிடம் தொகு

மயிலாடுதுறை, திருப்பனந்தாள், திருவிடைமருதூர், செம்பொன்னார் கோயில் என்பவை அருகிலுள்ள தாலுக்காக்கள்.
சீர்காழி, தரங்கம்பாடி, காரைக்கால், திருவாரூர், தேரழுந்தூர், திருமணஞ்சேரி ஆகியவை அண்மையிலுள்ள ஊர்களாகும்.
இலந்தங்குடி, திருநாள்கொண்டசேரி, பூவளை, மாதா கோயில் என்பவை வழுவூரிலுள்ள சிற்றூர்களாகும்.

அடையும் வழி தொகு

வழுவூரை அடைய தொடர்வண்டியில் செல்பவர்கள் குத்தாலம் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம். விரைவு வண்டியில் செல்வதாயின் 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மயிலாடுதுறை நிலையத்தில் இறங்கிச் செல்லவேண்டும்.

தலங்கள் தொகு

  • வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) கோவில் (1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.)[4]
  • வீரட்டானேசுவரர் கோயில் - மூலவர் பெயர்: கஜசம்ஹாரமூர்த்தி

பிரசித்தி தொகு

வழுவூர், பரதநாட்டியத்தில் வழுவூர் பாணி என்பதன் மூலம் பிரசித்தி பெற்ற ஊராகும். வழுவூர் இராமையா பிள்ளை மிகப் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியராவார்.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tnsec.tn.nic.in/results/result%202011/Result_VPP/VPP%20NGP%20Kuthalam.pdf
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  4. அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுவூர்&oldid=3696853" இலிருந்து மீள்விக்கப்பட்டது