ஆட்டோ ராஜா
ஆட்டோராஜா 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகாந்த், பாம்பே காயத்ரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஆட்டோ ராஜா | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | என். வி. ஆர். ராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஜெய்சங்கர் விஜயகாந்த் பாம்பே காயத்ரி தேங்காய் சீனிவாசன் வி. கே. ராமசாமி பி. ஆர். வரலட்சுமி வனிதா |
ஒளிப்பதிவு | ரங்கன் |
படத்தொகுப்பு | தேவன் |
வெளியீடு | மார்ச்சு 27, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்தப் படம் முதலில் 1982 ஜனவரி 14 பொங்கல் பண்டிகையன்று வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் சில காரணங்களுக்காக 1982 மார்ச் 27 அன்றுதான் வெளியிடப்பட்டது.
சங்கர்- கணேஷ் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சங்கத்தில் என்கிற ஒரு பாடலை மட்டும் இளையராஜாவின் இசையில் ஹிட்டாகி இருந்த மலையாளப் படம் ஓலங்கள் படத்தில் இருந்து இந்த இனிய ட்யூனை அப்படியே தமிழ் இசையில் தருமாறு சங்கர் கணேஷ் அன்புடன் கேட்டுக் கொண்டதால் நட்புக்காக இளையராஜா இசையமைத்து ஜானகியம்மாவுடன் இணைந்து பாடிக் கொடுத்தார்.