ராணி முகர்ஜி
ராணி முகர்ஜி (Rani Mukerji) (மார்ச் 21, 1978) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இவர் 1996 இல் இவரது தனது தந்தை ராம் முகர்ஜி இயக்கிய பயர் பூட் என்ற வங்காள மொழித் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் ராஜா கி ஆயேகி பராத் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். குச் குச் ஹோத்தா ஹை, மர்தானி, பிளாக் மற்றும் நோ ஒன் கில்ட் ஜெசிகா ஆகிய படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.[2]
ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்
தொகுமுகர்ஜி பெங்காலி திரைக்குடும்பத்திலிருந்து வந்தவர். இவரின் தந்தை ராம் முகர்ஜி, இயக்குநர் மற்றும் பிலிம்மாலயை ஸ்டுடியோவின்[3] ஒரு பங்குதாரரும் ஆவார், இவரின் தாயார் ஒரு பின்னணிப் பாடகி ஆவார். இவரின் சகோதரர் ஒரு படத் தயாரிப்பாளர், தற்போது இயக்குநராக மாறியுள்ளார். இவரது அத்தை, தேபாஷ்ரே ராய், தேசிய விருதுபெற்ற ஒரு பெங்காலி நடிகை. மேலும் இவரின் ஒன்றுவிட்ட சகோதரி, கஜோல், ஒரு பிரபல பாலிவுட் நடிகை ஆவார். அவரின் மற்றொரு சகோதரர் அயன் முகர்ஜி எழுத்தாளரும் இயக்குநரும் ஆவார்.
ராணி முகர்ஜி ஒடிசி நாட்டியத்தைப் பயின்றவர்.[4] இந்த நாட்டியத்தை, இவர் தனது பத்தாம் வயதிலிருந்து பழகத் தொடங்கினார். ஜுகுவில் உள்ள மனேக்ஜி கூப்பர் மேல்நிலைப் பள்ளியில் முகர்ஜி பயின்றார், பின்னர், மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் சேர்ந்தார்.
திரைத்தொழில்
தொகு1992 இல் ப்யார் பூல் என்ற இவரது தந்தையின் பெங்காலி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றிய பிறகு, ராணி முகர்ஜி தனது நடிப்பை ஐந்து வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்தார். ராஜா கி ஆயாகி பாரத் (1997) என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிறகு இவர் மீண்டும் கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தார்.[5] 1998 இல் வெளியான குலாம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேட்பாய் பெற்றது.[6] ஆத்தி க்யா கன்டாலா பாடல் முகர்ஜியை பிரபலமாக்கியது, மேலும் இவருக்கு கன்டாலா பெண் என்ற புனைப் பெயரை பெற்றார். அந்த வருடத்தில் தொடர்ந்து கரன் ஜோகர் முதலாவதாக இயக்கி வெளிவந்த வந்த, குச் குச் ஹோத்தா ஹே என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் கஜோல் உடன் நடித்தார். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றிபெற்றதின் மூலம் சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார். .[6] 2000 இல் வெளியான பதல் அந்த ஆண்டிற்கான சிறந்த படமாக திகழ்ந்தது.[7][8]
2001 இல், ராணி முகர்ஜி அப்பாஸ் முஸ்தானின் சோரி சோரி சுப்கே சுப்கே என்ற திரைப்படத்தில் சல்மான் கான் மற்றும் பிரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் ஓராண்டு தாமதத்திற்குப் பிறகு வெளிவந்தது.[9][10]
2002 இல், குனால் கோஹிலியின் காதல் படமான முஜ்சே தோஸ்தி கரோகே என்ற திரைப்படத்தில் ரித்திக் ரோஷன், கரீனா கபூர் ஆகியோருடன் இணைந்து முக்கிய கதைப்பாத்திரத்தில் நடித்தார். இந்தியாவில் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும்,[11] வெளிநாடுகளி்ல் நல்ல வணிக இலாபத்தை ஈட்டியது.[12] மேலும் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் இவரை நுழைய வழிவகுத்தது.[13]
சொந்த வாழ்க்கை
தொகுபல வருடங்களுக்கு முன்னால் ராணி அவரின் குடும்பப் பெயரை முகர்ஜீ என்ற தனது பெயரை முகர்ஜியாக மாற்றம் செய்தார். அந்நேரத்தில், இவர் நியூமராலஜிப்படியே பெயரை மாற்றிவைத்ததாக கூறப்பட்டது. 2006 இல், நியூமராலஜி ஒரு காரணமில்லை என்று அறிக்கைவிட்டார். மும்பையில் முகர்ஜிக்கு, குழந்தப் பருவ வீடு உட்பட மூன்று வீடுகள் இருந்தன. இவருக்காகவும் இவரது பெற்றோருக்காகவும் ஜுகுவில் 2005 இல் ஒரு பங்களா வாங்கினார்.[14]
திரைப்பட விவரங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | பிற குறிப்புகள் |
---|---|---|---|
1997 | ராஜா கி ஆயேகி பாரத் | மாலா | |
1998 | குலாம் | அலிஷா | |
குச் குச் ஹோதா ஹே | டீனா மல்ஹோத்ரா | வெற்றியாளர் , ஃப்லிம்ஃபேர் சிறந்த துணை நடிகை விருது | |
மெஹந்தி | பூஜா | ||
1999 | மன் | காலி நாகின் கே பாடலில் சிறப்புத் தோற்றம் | |
ஹலோ ப்ரதர் | ராணி | ||
2000 | பாதல் | ராணி | |
ஹேராம் | அபர்னா ராம் | தமிழ் படம் அதேநேரத்தில் இந்தியிலும் ஹேராம் உருவானது | |
ஹாத் கர் தி ஆப்னே | அஞ்சலி கண்ணா | ||
பிச்சு | கிரன் பாலி | ||
ஹர் தில் ஜோ ப்யார் கரேகா | பூஜை ஓபராய் | பரிந்துரைப்பு, பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகை விருது | |
கஹின் ப்யார் நா ஹோ ஜாயே | ப்ரியா ஷர்மா | ||
2001 | சோரி சோரி சுப்கே சுப்கே | ப்ரியா மல்ஹோத்ரா | |
பஸ் இத்னா சா க்வாப் ஹே | பூஜா ஸ்ரீவஸ்தவ் | ||
நாயக்: தி ரியல் ஹீரோ | மன்ஜார் | ||
கபி குஷி கபி ஹம் | நாய்னா கபூர் | துணைநடிகை | |
2002 | ப்யார் தீவானா ஹோத்தா ஹே | பாயல் குரன்னா | |
முஜ்ஸே தோஸ்தி கரோகே | பூஜா சஹானி | ||
சாத்யா | டாக். சுஹானி ஷர்மா/Sehgal | வெற்றியாளர் , சிறந்த நடிப்பிற்கான ஃப்லிம்ஃபோர் க்ரிடிக்ஸ் விருது பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். | |
சலோ இஷ்க் லடாயே | சப்னா | ||
2003 | சல்தே சல்தே | ப்ரியா சோப்ரா | பரிந்துரைக்கப்பட்டது, பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது |
சோரி சோரி | குஷி மல்ஹோத்ரா | ||
கல்கத்தா மெயில் | ரீமா/புல்புல் | ||
கல் ஹோ னா ஹோ | மாஹி வே பாடலில் சிறப்புத் தோற்றம் | ||
லாக் கார்கில் | ஹேமா | ||
2004 | யுவா | சஷி பிஸ்வாஷ் | வெற்றியாளர் , பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகர் விருது |
ஹம் தும் | ரியா ப்ரகாஷ் | வெற்றியாளர் , பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது | |
வீர்-ஜாரா | சாமியா சித்திகுய் | பரிந்துரைக்கப்பட்டது, பிலிம்-போர் சிறந்த துணை நடிகைக்கான விருது | |
2005 | ப்ளாக் | மைக்கேல் மெக்னால்லி | இரண்டு-வெற்றி , பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது & சிறந்த நடிப்புக்கான பிலிம்ஃப்ர் க்ரிடிக்ஸ் விருது |
பன்டி ஆர் பப்லி | விம்மி சலுஜா (பப்லி) | பரிந்துரைக்கப்பட்டது, பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது | |
பெஹ்லே | லாச்சி பான்வர்லால் | ||
Mangal Pandey: The Rising | ஹீரா | ||
2006 | கபி அல்விதா நா கெஹ்னா | மாயா தல்வார் | பரிந்துரைக்கப்பட்டது, பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது |
பாபுல் | மாலவிகா "மில்லி" தல்வார்/கபூர் | ||
2007 | தா ரா ரம் பம் | ராதிகா ஷேகர் ராய் பேனர்ஜி (ஷோனா) |
|
லாகா சுனாரி மெயின் டாக் | விபவரி (பட்கி)/ நடாஷா |
பரிந்துரைக்கப்பட்டது, பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது | |
சாவர்யா | குலாப்ஜி | பரிந்துரைக்கப்பட்டது, பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகைக்கான விருது | |
ஓம் சாந்தி ஓம் | அவராகவே | தீவாங்கி தீவாங்கி பாடலில் சிறப்புத் தோற்றம் | |
2008 | தோடா ப்யார் தோடா மேஜிக் | கீதா | |
ரப் தே பனாதே ஜோடி | ஃபிர் மிலேங்கே சல்தே சல்தே பாடலில் சிறப்புத் தோற்றம் | ||
2009 | லக் பை சான்ய் | அவராகவே | சிறப்புத் தோற்றம் |
தில் போலே ஹடிப்பா! | வீரா கோர்/வீர் ப்ரதாப் சிங் | ||
2010 | குச்சி குச்சி ஹோதா ஹே | டினா | |
2011 | நோ வன் கில்ட் ஜெசிகா | மீரா கெய்ட்டி | வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது |
2012 | ஐய்யா | மீனாக்ஷி தேஷ்பான்டே | |
தலாஷ்: தி ஆன்சர் லைஸ் விதின் | ரோஷ்னி சேகாவத் | பரிந்துரைக்கப்பட்டது, பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகைக்கான விருது | |
2013 | பாம்பே டாக்கீஸ் | காயத்ரி | அஜீப் தஸ்தான் ஹை யே பகுதியில் மட்டும், கரண் ஜோஹரின் இயக்கம். |
2014 | மர்தாணி | ஷிவானி சிவாஜி ராய் | பரிந்துரைக்கப்பட்டது, பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gangadhar, V. (5 February 2005). "Superstars". The Tribune. Retrieved 11 February 2008.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ inshorts.com https://inshorts.com/en/news/rani-mukerji-made-acting-debut-in-her-fathers-bengali-film-1490095583971. Retrieved 2025-03-16.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ "First-time fumblings". Rediff.com. 14 November 2007. Retrieved 23 December 2007.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ Karishma Upadhyay (11 September 2002). "Did you know Rani's an Odissi dancer?". Times of India. Retrieved 13 January 2010.
- ↑ Singh, Asha (11 October 2001). "Her talent speaks for itself". The Tribune, India. Retrieved 16 July 2005.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ 6.0 6.1 "Box Office 1998". BoxOfficeIndia.com. Archived from the original on 29 June 2012. Retrieved 8 January 2008.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ "Box Office 2000". BoxOfficeIndia.com. Archived from the original on 7 July 2012. Retrieved 8 January 2008.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ Verma, Suparn (2 January 2001). "Rewind... flash forward". Rediff. Retrieved 27 January 2008.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ Adarsh, Taran (8 March 2001). "Chori Chori Chupke Chupke: Movie Review". Indiafm.com. Retrieved 25 January 2008.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ Verma, Sukanya (9 March 2001). "Preity Trite". Rediff.com. Retrieved 25 January 2008.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ "Box Office 2002". BoxOfficeIndia.com. Archived from the original on 8 July 2012. Retrieved 8 January 2008.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ "Overseas Earnings (Figures in Ind Rs)". BoxOfficeIndia.com. Archived from the original on 4 December 2012. Retrieved 8 January 2008.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ Gajjar, Manish (20 December 2002). "Saathiya". BBC. Retrieved 25 January 2008.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ TNN (25 December 2007). "Priyanka is happy!". The Times of India. Retrieved 25 December 2007.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help)