ஒடிசி (நடனம்)
ஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப்படும் ஒரு நடனம்.[1][2][3] இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர்.[1][4]
![]() ஒடிசி நடன மாது | |
பூர்வீக பெயர் | ଓଡ଼ିଶୀ (Odia) |
---|---|
வகை | இந்தியப் பாரம்பரிய நடனம் |
தோற்றம் | ஒடிசா, இந்தியா |
வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. ராணி கும்பா குகைகளில் காணப்படும் சிற்பங்களின் ஒடிசி நடனமாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்திலேயே ஆடப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாகும். சில அறிஞர்கள் ஒடிசி நடனமாவது, பரத நாட்டியத்திற்கும் முந்தயது என்று கருதுகிறார்கள்.
ஒடிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசையில் கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை மட்டுமல்லாது ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் பார்க்கலாம். பக்கவாத்தியங்கள் மத்தளம், தபலா, புல்லாங்குழல், மிருதங்கம், மஞ்சீரா, சித்தார் மற்றும் தம்பூரா ஆகியவை அடங்கும்.
நடன முறை
தொகுஒடிசி நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஜெகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான 'மங்களசரண்' என்னும் நடனத்துடன் தொடங்கும். பின்னர் குரு வந்தனம் நிகழும். அடுத்தது, தாளக்கட்டிற்கு ஏற்றவாறு 'பல்லவி' நடனமும், கை முத்திரைகளும், முக பாவனைகளும் கூடிய 'அபிநயம்' நடனமும் ஆடப்படுகின்றன. 'மோக்சம்' என்னும் நடனம் இதன்பின் ஆடப்படுகிறது. பின்னர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் 'தசாவதாரம்' மற்றும் சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் 'பாட் நிருத்யம்' ஆகியவை ஆடப்படுகின்றன.
ஒடிசி நடனத்தின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணமாக விளங்கியவர் கேளுச்சரண மகோபாத்திரா. உலக அளவில் இந்த நடனம் பேசப்பட இவரும், இவரது மாணவரான சஞ்சுக்தா பாணிகிரகியும் காரணமானவர்கள். மேலும் குரு பங்கஜ் சரண்தாஸ், குரு மாயாதர் ரவுத், குரு தேவபிரசாத் தாசு ஆகியோரும் ஒடிசி இன்று உலக அளவில் பேசப்படக் காரணமானவர்கள்.
மேலும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 Odissi Encyclopædia Britannica (2013)
- ↑ Williams 2004, ப. 83–84, the other major classical Indian dances are: Bharatanatyam, Kathak, Kuchipudi, Kathakali, Manipuri, Chhau, Satriya, Yaksagana and Bhagavata Mela.
- ↑ "Guidelines for Sangeet Natak Akademi Ratna and Akademi Puraskar". Archived from the original on 14 October 2013. Retrieved 6 November 2013.
- ↑ Peter J. Claus; Sarah Diamond; Margaret Ann Mills (2003). South Asian Folklore: An Encyclopedia. Routledge. p. 136. ISBN 978-0-415-93919-5.
நூல் பட்டியல்
தொகு- Odissi : What, Why and How… Evolution, Revival and Technique, by Madhumita Raut. Published by B. R. Rhythms, Delhi, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88827-10-X.
- Odissi Yaatra: The Journey of Guru Mayadhar Raut, by Aadya Kaktikar (ed. Madhumita Raut). Published by B. R. Rhythms, Delhi, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-88827-21-3.
- Odissi Dance, by Dhirendranath Patnaik. Published by Odisha Sangeet Natak Akademi, 1971.
- Odissi – The Dance Divine, by Ranjana Gauhar and Dushyant Parasher. Published by Niyogi Books, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89738-17-8.
- Odissi, Indian Classical Dance Art: Odisi Nritya, by Sunil Kothari, Avinash Pasricha. Marg Publications, 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85026-13-0.
- Perspectives on Odissi Theatre, by Ramesh Prasad Panigrahi, Odisha Sangeet Natak Akademi. Published by Odisha Sangeet Natak Akademi, 1998.
- Abhinaya-chandrika and Odissi dance, by Maheshwar Mahapatra, Alekha Chandra Sarangi, Sushama Kulshreshthaa, Maya Das. Published by Eastern Book Linkers, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7854-010-X.
- Rethinking Odissi, by Dinanath Pathy. Published by Harman Pub. House, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86622-88-8.
- Natalia Lidova (2014). Natyashastra. Oxford University Press. doi:10.1093/obo/9780195399318-0071.
- Natalia Lidova (1994). Drama and Ritual of Early Hinduism. Motilal Banarsidass. ISBN 978-81-208-1234-5.
- Ragini Devi (1990). Dance Dialects of India. Motilal Banarsidass. ISBN 978-81-208-0674-0.
- Williams, Drid (2004). "In the Shadow of Hollywood Orientalism: Authentic East Indian Dancing". Visual Anthropology (Routledge) 17 (1): 69–98. doi:10.1080/08949460490274013. http://jashm.press.illinois.edu/12.3/12-3IntheShadow_Williams78-99.pdf. பார்த்த நாள்: 2022-11-20.
- Tarla Mehta (1995). Sanskrit Play Production in Ancient India. Motilal Banarsidass. ISBN 978-81-208-1057-0.
- Fergusson, James (1880). The Caves Temples of India. W. H. Allen. Retrieved 2 April 2016.
- Michell, George l (15 October 2014). Temple Architecture and Art of the Early Chalukyas: Badami, Mahakuta, Aihole, Pattadakal. Niyogi Books. ISBN 978-93-83098-33-0.
- Reginald Massey (2004). India's Dances: Their History, Technique, and Repertoire. Abhinav Publications. ISBN 978-81-7017-434-9.
- Emmie Te Nijenhuis (1974). Indian Music: History and Structure. BRILL Academic. ISBN 90-04-03978-3.
- Kapila Vatsyayan (2001). Bharata, the Nāṭyaśāstra. Sahitya Akademi. ISBN 978-81-260-1220-6.
- Kapila Vatsyayan (1977). Classical Indian dance in literature and the arts. Sangeet Natak Akademi. கணினி நூலகம் 233639306., Table of Contents
- Kapila Vatsyayan (1974), Indian classical dance, Sangeet Natak Akademi, கணினி நூலகம் 2238067
- Kapila Vatsyayan (2008). Aesthetic theories and forms in Indian tradition. Munshiram Manoharlal. ISBN 978-8187586357. கணினி நூலகம் 286469807.
- Kapila Vatsyayan. Dance In Indian Painting. Abhinav Publications. ISBN 978-81-7017-153-9.
- Wallace Dace (1963). "The Concept of "Rasa" in Sanskrit Dramatic Theory". Educational Theatre Journal 15 (3): 249–254. doi:10.2307/3204783.
External links
தொகு- Odissi solo performance: Nitisha Nanda, Arabhi Pallav, New Delhi 2013
- Odissi group dance: Megh Pallavi, Vancouver 2014
- Maryam Shakiba – Odissi Dance – Manglacharan Ganesh Vandana Pushkar 2014
- Odissi links பரணிடப்பட்டது 2011-03-18 at the வந்தவழி இயந்திரம் at the Open Directory
- Odissi schools, Classical Indian Dance Portal
- The annotated Odissi Dance Archive on Pad.ma
- History of Odissi and Geeta Govinda JN Dhar, Orissa Review
- Bharat Bhavan, a Kerala-based Department of Culture information website.