கரண் ஜோஹர்
'கரண் ஜோஹர் (Karan Johar) (பிறப்பு ராகுல் குமார் ஜோஹர் ; 25 மே 1972)[1], பெரும்பாலும் இந்தி திரைப்படத் துறையில் கேஜோ என குறிப்பிடப்படும் இவர்,[2] ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளரும் தொலைக்காட்சி ஆளுமையுமாவார். இவர் முதன்மையாக இந்தித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். தனக்குச் சொந்தமான தர்மா புரொடக்சன்ஸின் கீழ் பல வெற்றிகரமான நடிகர்களின் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். தேசியத் திரைப்பட விருதுகள் மற்றும் ஆறு பிலிம்பேர் விருதுகள் உட்பட குடிமக்களின் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றுள்ளார்.[3]
கரண் ஜோஹர் | |
---|---|
![]() 2018இல் கரண் | |
பிறப்பு | இராகுல் குமார் ஜோஹார்[1] 25 மே 1972 மும்பை, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | எச்.ஆர். கல்லூரி |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1989–தற்போது வரை |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | Full list |
கையொப்பம் | ![]() |
தயாரிப்பாளர் யஷ் ஜோஹரின் மகனான, இவர் குச் குச் ஹோத்தா ஹை (1998) என்ற நகைச்சுவை-நாடகத் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது இவருக்கு முழுமையான பொழுதுபோக்கு வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் , சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த திரைக்கதைக்காக பிலிம்பேர் விருதையும் பெற்றுத்தந்தது . இவரது அடுத்த படங்களான, கபி குஷி கபி கம் (2001) மற்றும் கபி அல்விதா நா கெஹ்னா (2006), போன்றாவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. இவரது சமூக நாடகமான மை நேம் இஸ் கான் (2010) இவருக்கு சிறந்த இயக்குனருக்கான இரண்டாவது பிலிம்பேர் விருதைப் பெற்றுத்தந்தது. இவர் அதிரடித் திரைப்படங்களான ராசி (2018) மற்றும் ஷெர்ஷா (2021) ஆகிய படங்களைத் தயாரித்தார். இவை இரண்டும் இவருக்கு சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றன. தர்மா புரொடக்சன்ஸ் பதாகையின் கீழ் இவர் தயாரித்த மற்ற படங்களோடு சேர்ந்து, பாலிவுட் படங்களில் முன்னணி இயக்குனர்-தயாரிப்பாளர்களில் ஒருவராக இவரை நிலைநிறுத்தியது.[4][5]
ஜோஹர் பொழுதுபோக்கு துறையின் மற்ற வழிகளிலும் இறங்கியுள்ளார். இவர் ஒரு தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார், காஃபி வித் கரண், இந்த நிகழ்ச்சியின் பருவம் 7 தற்போது ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்படுகிறது.[6] காதலர்கள் நிகழ்ச்சியான வாட் தி லவ்!, வானொலி நிகழ்ச்சியான காலிங் கரண், போட்டி நிகழ்ச்சிகளான ஜலக் திக்லா ஜா, இந்தியாஸ் காட் டேலண்ட், இந்தியாஸ் நெக்ஸ்ட் சூப்பர் ஸ்டார்ஸ் ஆகியவற்றில் நடுவராகத் தோன்றினார்.
ஆரம்பகால வாழ்க்கைதொகு
ஜோஹர் 25 மே 1972 இல் இந்தியாவின் மும்பையில் திரைப்பட தயாரிப்பாளரும் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனருமான யாஷ் ஜோஹர், ஹிரூ ஜோஹர் தம்பதியருக்கு ஆகியோருக்குப் பிறந்தார். தனது தந்தையின் பக்கத்திலிருந்து பஞ்சாபி இந்து வம்சாவளியையும், தாயின் பக்கத்திலிருந்து சிந்தி இந்து வம்சாவளியையும் கொண்டவர்.[7][8] இவர், மும்பையின் கிரீன்லான்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், பிறகு, எச்.ஆர். பொருளாதாரக் கல்லூரியிலும் பயின்றார்.[9]
சொந்த வாழ்க்கைதொகு
பிப்ரவரி 2017 இல், ஜோஹர் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) தந்தையானார். மும்பையில் உள்ள மஸ்ரானி மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.[10] ஜோஹர் தனது மகனுக்கு யஷ் என்று தனது தந்தையின் பெயரை வைத்தார், மேலும் தனது மகளுக்கு ரூஹி தனது தாயின் பெயரை ஹிரூ என்று திருப்பி வைப்பதன் மூலம் பெயரிட்டார்.[11][12]
தொழில் வாழ்க்கைதொகு
ஜோஹர் 1989 தூர்தர்ஷனின் இந்திரதனுஷ் என்ற தொடரில் ஸ்ரீகாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது, ஒரு நடிகராக பொழுதுபோக்கு துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சிறுவயதில், இந்திய வணிகத் திரைப்படங்களில்ஈர்க்கப்பட்டார். ராஜ் கபூர், யஷ் சோப்ரா மற்றும் சூரஜ் ஆர். பர்ஜாத்யா ஆகியோரை தனது உத்வேகங்களாகக் குறிப்பிடுகிறார்.[5][13] சிறிது காலத்திற்கு, எண் சோதிடத்தைப் பின்பற்றி, திரைப்படத் தலைப்புகளை உருவாக்கினார். அதில் முதல் வார்த்தை மற்றும் தலைப்பில் உள்ள பல எழுத்துக்கள் ஆங்கில K என்ற எழுத்தில் தொடங்கின. 2006 ஆம் ஆண்டு வெளியான எண் கணிதத்தால் விமர்சிக்கப்பட்ட லகே ரஹோ முன்னா பாய் திரைப்படத்தையடுத்து, இந்த நடைமுறையை நிறுத்த முடிவு செய்தார்.[14]
திரைப்பட வாழ்க்கைதொகு
இந்தித் திரையுலகில் ஒரு முக்கிய அடையாளமாக கருதப்படும் தனது உறவினர் ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (1995) திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குநராக திரைப்படத்துறையில் நுழைந்தார்.[15] இத்திரைப்படம் எட்டு ஃபிலிம்பேர் விருதுகளை வென்றது. இவ்விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் அனைத்து முக்கிய மற்றும் துணைப்பாத்திரங்களுக்கான அனைத்து நான்கு சிறந்த நடிகர் விருதுகளும் இதில் அடங்கும்.[5] மேலும், இது முழுமையான பொழுதுபோக்கு வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. 44வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் நான்கு நடிப்பு விருதுகள் உட்பட பெரும்பாலான முக்கிய விருதுகளை இது வென்றது. பின்னர் தானே சொந்தமாக இயக்குநராக அறிமுகமாகி குச் குச் ஹோத்தா ஹை (1998) என்ற காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் திரையரங்கில் பெரும் வெற்றி பெற்று விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 2001 ஆம் ஆண்டு வெளியான குடும்ப நாடகவகைத் திரைப்படமான கபி குஷி கபி கம், ஜோஹர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படமாகும். இத்திரைப்படமும் அதிக அளவில் வெற்றிபெற்று ஐந்து பிலிம்பேர் விருதுகளை வென்றது. இவரது 2003 திரைப்படமான கல் ஹோ நா ஹோ, நிக்கில் அத்வானியால் இயக்கப்பட்டது.[16] இவரின் 2005 திரைப்படமான கல் , சோஹம் ஷாவால் இயக்கப்பட்டது. இவர் ஜோஹரின் கபி குஷி கபி ஹம் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.[17] 2005 ஆம் ஆண்டு மே மாதம் இயக்குவதில் இருந்து நான்கு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்ட பிறகு ஜோஹர் தனது மூன்றாவது திரைப்படத்தில் இயக்குநராகவும் நான்காவது திரைப்படத்தில் எழுத்தாளராகவும் பணிபுரியத் தொடங்கினார். கபி அல்விதா நா கெஹனா, (நெவர் சே குட்பை ) என்றத் திரைப்படம் அனைத்து காலத்திலும் உலகளவில் அதிக வருவாயைப் பெற்றத் திரைப்படமாக அமைந்தது.[17][18]
தொலைக்காட்சிதொகு
ஸ்டார் வேர்ல்டில் ஒளிபரப்பப்பட்ட காஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியையும் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.[19] இதில் பாலிவுட் மற்றும் இந்தியாவின் புகழ்வாய்ந்த பிரபலங்களை இவர் நேர்காணல்கள் இடுவார்.இந்நிகழ்ச்சியின் முதல் பருவம் 2004 ஆம் ஆண்டு தொடங்கி 2006 ஆம் ஆண்டு முடிவுற்றது. இதன் இரண்டாவது பருவத்தின் ஒளிபரப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட்டில் முடிவுற்றது.
விருதுகள்தொகு
- 2007 ஆம் ஆண்டு ஜெனிவா-உலகப் பொருளாதார மன்றம் 2006 மூலமாக 250 "உலகளாவிய இளம் தலைவர்"களில் ஜோஹரும் ஒருவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[20]]
- 30 செப்டம்பர் 2006 அன்று போலந்தின் வர்சாவில் நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியின் நடுவர் குழுவில் பங்கேற்ற முதல் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தார்.
நடிகராகதொகு
- தில்வாலே துல்ஹர்னியா லே ஜெயங்கே (1995)
- மேய்ன் ஹூன் நா (2004) - கேமியோ [javascript:void(0); மேய்ன் ஹூன் நா]
- ஹோம் டெலிவரி: ஆப்கோ... கர் தக் (2005) - அவராகவே
- அலக் (2006) - (அவராகவே/சப்செ அலக் என்ற பாடலில் குரல் கொடுத்தார்
- சலாம்-இ-இஷ்க் (2007) - (அவராகவே/குரல்)
- ஓம் ஷாந்தி ஓம் (2007) - (அவராகவே கேமியோ)
- C Kகம்பெனி (2008) - (விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக கேமியோ)
- ஃபேஷன் (2008) - (அவராகவே கேமியோ)
- லக் பை சான்ஸ் (2009) - (அவராகவே கேமியோ)
இயக்குநராகதொகு
- குச் குச் ஹோதா ஹை (1998)
- கபி குஷி கபி கம் (2001)
- கபி அல்விதா நா கெஹனா (2006)
- மை நேம் இஸ் கான் (2010)
தயாரிப்பாளராகதொகு
- டூப்ளிகேட் (1998) (இணைத்தயாரிப்பாளர்)
- கல் ஹோ நா ஹோ (2003)
- கல் (2005) (இணைத்தயாரிப்பாளர்)
- தோஸ்தானா (2008)
- வேக் அப் சித் (2009)
- குர்பான் (2009)
- குச்சி குச்சி ஹோதா ஹெய்ன் (2010)
- மை நேம் இஸ் கான் (2010)
எழுத்தாளர்/கதை/திரைக்கதைதொகு
- குச் குச் ஹோதா ஹை (1998)
- கபி குஷி கபி கம் (2001)
- கல் ஹோ நா ஹோ (2003)
- கபி அல்விதா நா கெஹனா (2006)
- குச்சி குச்சி ஹோதா ஹெய்ன் (2010)
- மை நேம் இஸ் கான் (2010)
விருதுகள்தொகு
ஃபிலிம்பேர் விருதுகள்தொகு
- 1999: சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை - குச் குச் ஹோதா ஹை
- 2002: சிறந்த உரையாடல் - கபி குஷி கபி கம்
IIFAதொகு
- 2001: சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - மொகபத்தீன்
- 2002: சிறந்த உரையாடல் - கபி குஷி கபி கம்
ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்தொகு
- 1999: சிறந்த இயக்குநர் - குச் குச் ஹோதா ஹை
- 2004: சிறந்த திரைக்கதை - கல் ஹோ நா ஹோ
குறிப்புகள்தொகு
- ↑ 1.0 1.1 Basu, Nilanjana (16 December 2018). "Koffee With Karan 6: Ayushmann Khurrana, Vicky Kaushal Discover Karan Johar Was Originally Named As...". என்டிடிவி (NDTV Convergence Limited). https://www.ndtv.com/entertainment/koffee-with-karan-6-ayushmann-khurrana-vicky-kaushal-discover-karan-johar-was-originally-named-as-1963483.
- ↑ "KJo meets Kareena on sets of Heroine". 11 June 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 8 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Shri for Ekta Kapoor, Karan Johar, Kangana Ranaut and Adnan Sami" (in en). India Today. Ist. https://www.indiatoday.in/movies/bollywood/story/padma-shri-for-ekta-kapoor-karan-johar-kangana-ranaut-and-adnan-sami-1640169-2020-01-25.
- ↑ Firdaus Ashraf, Syed (23 March 2006). "Karan Johar's next to release in August". Rediff.com. 2008-11-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 5.0 5.1 5.2 Nandy, Pritish (9 December 1998). "'All the women I meet keep telling me how much they cried in the film! That's what made it a hit, I guess.'". Rediff.Com. 25 October 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 6 March 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Karan Johar on Koffee With Karan: Never thought I would get this far, hosting seven seasons'-Entertainment News , Firstpost". Firstpost (ஆங்கிலம்). 2022-08-09. 2022-08-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Leading actresses are paranoid as parents: Karan Johar". Hindustan Times. 30 June 2017. https://www.hindustantimes.com/bollywood/leading-actresses-are-paranoid-as-parents-karan-johar/story-jJEEZJ8rvodM67le1MHAnO.html. "I was half Punjabi and Sindhi, so food was a big part of our daily life."
- ↑ "An Unsuitable Boy: Overview". Penguin India. 28 July 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 May 2020 அன்று பார்க்கப்பட்டது.
Baring all for the first time in his autobiography, An Unsuitable Boy, KJo reminisces about his childhood, the influence of his Sindhi mother and Punjabi father, obsession with Bollywood, foray into films, friendships with Aditya Chopra, SRK and Kajol, his love life, the AIB Roast, and much more.
- ↑ Majumdar, Anushree (16 October 2016). "P.O.W. director Nikkhil Advani: I will take a position but I don't want to become a jingoist". The Indian Express (Indian Express Limited). https://indianexpress.com/article/entertainment/television/tv-show-p-o-w-director-nikkhil-advani-i-will-take-a-position-but-i-dont-want-to-become-a-jingoist-3084430/.
- ↑ Monica Varma (9 December 1998). "Karan Johar becomes father to TWINS through surrogacy!". Zoom (TV channel). 21 April 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Alia Bhatt to Priyanka Chopra: Celebrities Congratulate Karan Johar on Becoming a Father". News18. 6 March 2017. 6 March 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 6 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Bollywood showers blessings on Karan Johar's twins". Hindustan Times. 5 March 2017. 6 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ V S Srinivasan (15 October 1998). "'I'm a little scared'". Rediff.Com. 25 October 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 6 March 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Khan, Rubina A (7 October 2006). "Karan to drop letter K". The Times of India. http://timesofindia.indiatimes.com/delhi-times/karan-to-drop-letter-k/articleshow/2115546.cms.
- ↑ "Karan Johar's excited and we have 'mentor' Aditya Chopra to thank". Hindustan Times (ஆங்கிலம்). 27 September 2015. 11 July 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 13 May 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Box Office 2003". BoxOfficeIndia.Com. 2012-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-01-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 17.0 17.1 K Jha, Subhash (3 May 2005). "'I've got Veer-Zaara and Bunty-Babli in my film'". Rediff.Com. 2008-03-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Box Office 2006". BoxOfficeIndia.Com. 2012-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-01-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Basu, Mohar (24 April 2018). "Koffee With Karan Season 6: New Elements To Watch Out For This Year". Mid-Day (Mid-day Infomedia). https://www.mid-day.com/articles/koffee-with-karan-season-6-new-elements-to-watch-out-for-this-year/19350181.
- ↑ WEF இன் உலகலாவிய இளம் தலைவர்கள் பலரில் ஒருவர். 17 ஜனவரி 2007. சிஃபி.]
உசாத்துணைதொகு
- Johar, Karan; Saxena, Poonam (2017). கரண் ஜோஹர். Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-670-08753-2.
சான்றுகள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- மை நேம் இஸ் கான் - கரண் ஜோஹரின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவு பரணிடப்பட்டது 2012-03-17 at the வந்தவழி இயந்திரம்
- தர்மா புரொடக்சன்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2019-03-30 at the வந்தவழி இயந்திரம்
- கரண் ஜோஹர் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்