கபி குஷி கபி கம்

கபி குஷி கபி கம் என்பது 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய குடும்ப நாடகத் திரைப்படம் ஆகும். கரண் ஜோஹரின் எழுத்திலும் இயக்கத்திலும் யஷ் ஜோஹரின் தயாரிப்பிலும் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், சாருக்கான், கஜோல், கிருத்திக் ரோஷன் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ராணி முகர்ஜி கௌரவ வேடத்தில் தோன்றியுள்ளார். ஜடின் லலீத், சந்தேஷ் சாண்டல்யா மற்றும் ஆதேஷ் ஶ்ரீவாஸ்தவா ஆகியோரின் இசையமைத்துள்ளனர். சமீர் மற்றும் அனில் பாண்டே பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இந்த திரைப்படம் இந்திய குடும்பமொன்றின் கதையைச் சித்தரிக்கின்றது.

தயாரிப்பும் வெளியீடும்

தொகு

1998 ஆம் ஆண்டில் கரண் ஜோகரின் முதல் படமான குச் குச் ஹோதா ஹை வெளியான உடனேயே இந்த படத்தின் பணிகள் ஆரம்பமாகின.[1] 2000 ஆம் ஆண்டில் அக்டோபர் 16 இல் முதன்மை புகைப்படம் எடுத்தல் ஆரம்பமாகியது. முதன்மை புகைப்படம் எடுத்தல் மும்பையில் தொடங்கி லண்டன், எகிப்து ஆகிய இடங்களில் நடைப்பெற்றது.[2] 2001 ஆம் ஆண்டில் தீபாவளி தினத்தன்று வெளியிட திட்டமிடப்பட்ட இந்தப்படம் 2001 ஆம் ஆண்டில் திசம்பர் 14 அன்று இந்தியா, ஐக்கிய இராச்சியம், மற்றும் வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.[3] 2003 ஆம் ஆண்டில் செருமனியில் நாடக வெளியீடு வழங்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இதுவாகும். திரைப்படம் வெளியானதும் திரைப்பட விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த திரைப்படம் 400 மில்லியன் டாலர் (5.8 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவில் தயாரிக்கப்பட்டது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பாரிய வணிக வெற்றியை சந்தித்தது. உலகளாவிய அளவில் மொத்தம் 1.36 பில்லியன் டாலர் ( 29 மில்லியன் டாலர் ) வசூலைப் பெற்றது.[4] இந்தியாவுக்கு வெளியே அதிக வசூல்பெற்ற இந்திய திரைப்படமாக திகழ்ந்தது. 2006 ஆம் ஆண்டில் கரன் ஜோகரின் கபி அல்வடா நா கெஹ்னா திரைப்படம் வெளியிடப்பட்டு இதன் சாதனையை முறியடித்தது.[5] கபி குஷி கபி கம் திரைப்படம் ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றது.

விருதுகள்

தொகு

கபி குஷி கபி கம் திரைப்படம் 47 வது பிலிம்பேர் விருதுகளில் 15 பரிந்துரைகளைப் பெற்றது. இறுதியில் ஐந்து விருதுகளை வென்றது.[6] மேலும் சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி விருதுகளிலும் (IIFA),[7] சினி விருதுகளிலும், திரை விருதுகளிலும் பல விருதுகளை வென்றது.[8] 13வது ஆண்டு வலென்சியன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகளை வென்றது அதில் கஜோல் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார்.

பிற ஊடகங்களில்

தொகு

படத்தின் வெளியீட்டிற்கு முன்னர், படத்தின் இசை உரிமைகள், வெளிநாட்டு விநியோக உரிமைகள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் 350 மில்லியன் டாலர்களுக்கு (42 7.42 மில்லியன் ) விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமைகள் சோனிக்கு விற்கப்பட்டது. வெளிநாட்டு உரிமைகளுக்காக 250 மில்லியன் டாலர்களும் இதிலடங்கும் என்று கூறப்பட்டது.[9] படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பின் போது தி மேக்கிங் ஆஃப் கபி குஷி கபி காம் என்ற புத்தகத்தை நிரஞ்சன் ஐயங்கார் எழுதினார். படத்தின் தயாரிப்பின் போதான 18 மாத காலப்பகுதியில் ஐயங்கார் சேகரித்த தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், நடிகர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.[10] படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் 2010 ஆம் ஆண்டில் ப்ளு ரே வடிவ இறுவட்டு  வெளியிடப்பட்டது.[11]

  1. "Cherished moments in film-making". Archived from the original on 2012-05-04.
  2. "rediff.com, Movies: The Kabhi Khushi Kabhie Gham Special". www.rediff.com. Retrieved 2019-11-01.
  3. "No big Hindi film release this Diwali - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2019-11-01.
  4. "Official exchange rate (LCU per US$, period average) - India | Data". data.worldbank.org. Retrieved 2019-11-01.
  5. "Boxofficeindia.com". web.archive.org. 2013-12-04. Archived from the original on 2013-12-04. Retrieved 2019-11-01.
  6. ""Filmfare Nominees And Winners" (PDF).
  7. "Rare opportunity for Malaysian fans". Archived from the original on 2012-03-31.
  8. "The Tribune, Chandigarh, India - Nation". www.tribuneindia.com. Retrieved 2019-11-01.
  9. "Bollyworld: Popular Indian Cinema Through A Transnational Lens".
  10. The Making of 'Kabhi Khushi Kabhie Gham' ([[1]]): Niranjan Iyengar: Books. Amazon.com. ISBN 8175083387.
  11. "Kabhi Khushi Kabhie Gham: Movies & TV". www.amazon.com. Retrieved 2019-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபி_குஷி_கபி_கம்&oldid=4160662" இலிருந்து மீள்விக்கப்பட்டது