மகாலட்சுமி ஐயர்

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

மகாலட்சுமி ஐயர் (Mahalakshmi Iyer) இந்தி மற்றும் தமிழ் பாடல்கள் பாடும் ஓர் இந்திய பின்னணி பாடகர் ஆவார். தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, அசாமி மற்றும் கன்னடம் போன்ற பல இந்திய மொழிகளிலும் இவர் பாடியுள்ளார்.[1]

மகாலட்சுமி ஐயர்
2010இல் மகாலட்சுமி ஐயர்
பின்னணித் தகவல்கள்
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர், இந்திய பாரம்பரிய இசை, நாட்டுப்புறம், இந்திய பாப்
தொழில்(கள்)பாடகி ,பின்னணிப் பாடகி
இசைக்கருவி(கள்)வாய்ப்பட்டு
இசைத்துறையில்1996 முதல் தற்போது வரை

தொழில்

தொகு

இவர், 1996 இல் சங்கர்-எசான்-லாய் இசை இயக்குநராக அறிமுகமான "தஸ்" (1997) என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தின் இயக்குனர் திடீரென காலமானதால் படம் முடிவடையவில்லை. இருப்பினும் படத்தின் பாடல்களின் ஆல்பம் 1999 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதே வாரம் இவர் உதித் நாராயணுடன் "தஸ்"யும் பாடினார். இது பின்னணி பாடகியாக இவரது முதல் வெளியீடாக இருந்தது. மகாலட்சுமி, சங்கர்-எசான்-லோய் மற்றும் ஏ. ஆர். ரகுமான் ஆகியோரது தொடர்ந்து வந்த பல படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.[2]

பின்னர் இவர் பல ஜிங்கில்கள் மற்றும் அசல் ஆல்பங்களை பாடியுள்ளார்.[3] "மிஷன் காஷ்மீர்" , "யாதீன்"(2001) மற்றும் "சாத்தியா" போன்ற பல வெற்றிகரமான பாடல்களில் பாடினார். ஏ. ஆர். ரகுமான், சங்கர்-எசான்-லோய், விசால்-சேகர், தின்-லலித் போன்ற பல மிகப்பெரிய இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். "யாஷ் ராஜ் பிலிம்ஸ்" தயாரிப்பில், தூம் 2, "பன்டி அவுர் பாபி", "சலாம் நமஸ்தே", "ஃபனா", "த ரா ரம் பம்" மற்றும் "ஜூம் பராபர் ஜூம்" போன்ற பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

"சூர் - தி மெலடி ஆஃப் லைஃப்" (2002), "கபி சாம் தாலே" "ஹார் தராப்" (ரிஸ்தே) (2002) , "சுப் சுப் கே" (பன்டி அவு பாப்லி) (2005), ஆஜ் கி ராத்" (டான்: த சேஸ் பிகன்ஸ் அகெய்ன்)(2006) மற்றும் " போல் நா ஹல்கே ஹல்கே" ( ஜூம் பார்பர் ஜூம்) போன்ற படங்களில் இவரது பாடல்கள் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.[4] ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளியான சிலம்டாக் மில்லியனயர் படத்தில் இடம் பெற்று சிறந்த பாடலுக்கான அகாடமி விருது பெற்ற "ஜெய் ஹோ" என்ற பாடலை பாடினார். குறிப்பாக, பாட்டு மற்றும் வசனங்களைக் கொண்ட உருதுப் பகுதியைப் பாடினார். (அவற்றில் பெரும்பாலானவை சுக்விந்தர் சிங் பாடியது). [5]

சொந்த வாழ்க்கை

தொகு

மகாலட்சுமி ஒரு தமிழ் இசைக் குடும்பத்திச் சேர்ந்தவர். இவரது தாயார் பாரம்பரிய கர்னாடக இசைப் பாடகர் ஆவார். கல்பனா, பத்மினி மற்றும் சோபா என்ற மூன்று சகோதரிகளும் இவரைப் போலவே இந்துஸ்தானி இசையைக் கற்றுக் கொண்டனர். இவர் மும்பையின் செம்பூர் பகுதியில் வளர்ந்தார். மும்பை ஆர். ஏ. போடர் கல்லூரியில் பொருளாதாரம் பட்டம் பெற்றார்.

விருதுகள்

தொகு
  • ஆதார் என்ற படத்திற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ஆல்பா விருது
  • " சுனா எட்டி காராத் " படத்திற்காக மகாராட்டிரா கலா நிகேதன் விருது
  • "ரஜினி முருகன் படத்தில் "உன் மேல ஒரு கண்ணு" பாடலுக்காக 2016இல், 64வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பெண் பின்னணி பாடகி – தமிழ் பாடகிக்கான மகாராட்டிரா மாநில விருதினைப் பெற்றார்.

குறிப்புகள்

தொகு
  1. ""I am known as Mahalukhimi in Assam and Mahalokhi in Calcutta. I have heard stories where they have asked people that when did this Assam native move to Bombay?" – Mahalaxmi Iyer". IndiaFM. 14 March 2007. http://www.indiafm.com/features/2007/03/14/2384/index.html. பார்த்த நாள்: 27 December 2008. 
  2. "Money doesn’t matter to me: Mahalaxmi Iyer". Hindustan Times. November 12, 2016. https://www.hindustantimes.com/music/money-doesn-t-matter-to-me-mahalaxmi-iyer/story-TGY9u8Eub9B1zMvVxkkWsO.html. 
  3. "'My day will come too!'". rediff.com. 7 April 2001. http://www.rediff.com/entertai/2001/apr/09maha.htm. பார்த்த நாள்: 27 December 2008. 
  4. "Mahalakshmi Iyer Wants Albums For TV Shows' Songs". Mid Day. April 11, 2018. https://www.mid-day.com/articles/mahalakshmi-iyer-wants-albums-for-tv-shows-songs/19307163. 
  5. Vij, Manish (24 சனவரி 2009). "Jai ho Rahman". Ultrabrown. Archived from the original on 6 பெப்பிரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2009.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலட்சுமி_ஐயர்&oldid=3944592" இலிருந்து மீள்விக்கப்பட்டது