நசிருதீன் சா

இந்திய நடிகர்
(நசிருதீன் ஷா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நசிருதீன் சா (Naseeruddin Shah) (பிறப்பு: சூலை 20,1950) ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்தியாவில் இணைத் திரைப்படம் என்ற வகைமையில் குறிப்பிடத்தக்கவராக இருந்தார். இவர் பல்வேறு பன்னாட்டுத் தயாரிப்புகளில் நடித்துள்ளார்.[1][2] மூன்று தேசிய திரைப்பட விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள் மற்றும் வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான வோல்பி கோப்பை உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இந்திய சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு அவருக்கு பத்மசிறீ மற்றும் பத்ம பூசண் விருதுகளை வழங்கி கௌரவித்தது.[3]

நசிருதீன் சா
ஐ. எஃப். பி பருவம் 9 இல் நசிருதீன் சா 12 அக்டோபர் 2019
பிறப்பு20 சூலை 1950 (1950-07-20) (அகவை 74)
பாராபங்கி, உத்தரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி (இந்தியா)
தேசிய நாடகப் பள்ளி
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
பணி
  • நடிகர்
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1972–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மனாரா சிக்ரி (இறந்து விட்டார்)
இரத்னா சா (தி. 1982)
பிள்ளைகள்ஈபா, இமாத் சா, விவான் சா
புகழ்ப்பட்டம்பத்ம பூசண்
பத்மசிறீ

1982 ஆம் ஆண்டில், இவர் நடிகை இரத்னா பதக் என்பவரின் மகளான நடிகை தினா பதக் என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மைத்துனர் நடிகை சுப்ரியா பதக் ஆவார், அவர் நடிகர் பங்கஜ் கபூரை மணந்தார்.

தொடக்க கால வாழ்க்கை

தொகு

நசீருதீன் சா 1950 சூலை 20 அன்று உத்தரப்பிரதேசத்தின் பாராபங்கி நகரில் ஒரு நவாப் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவரது கொள்ளுத் தாத்தா ஆப்கானிய போர்வீரர் ஜான்-ஃபிசான் கான் ஆவார், இவர் பின்னர் சர்தனாவின் நவாப் ஆனார். இக்பால் அலி ஷா, அமினா ஷா, உமர் அலி-ஷா, இத்ரிஸ் ஷா ஆகியோர் இவரது உறவினர்களில் அடங்குவர்.[5]

சா செயின்ட் அன்செல்ம் அஜ்மீர் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த இவர் நைனிடாலில் உள்ள புனித் சோசப் கல்லூரியில் பயின்றார். 1971 ஆம் ஆண்டில் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் கலைகளில் பட்டம் பெற்ற இவர், தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பயின்றார்.   [citation needed]

இவரது அண்ணன் லெப்டினன்ட் ஜெனரல் ஜமீருதீன் ஷா இந்திய இராணுவத்தின் இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார், பின்னர் ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் உறுப்பினராகவும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டார்.[6][7][8]

தொழில் வாழ்க்கை

தொகு

நிஷாந்த், ஆக்ரோஷ், ஸ்பர்ஷ், மிர்ச் மசாலா, ஆல்பர்ட் பிண்டோ கோ குசா கியோன் அட்டா ஹை, திரிகல், பாவ்னி பவாய், ஜூனூன், மண்டி, மோகன் ஜோஷி ஹசிர் ஹோ! போன்ற படங்களில் சா நடித்துள்ளார்., அர்த்த் சத்யா, கதா, மற்றும் ஜானே பி தோ யாரோ.[9] 1967 ஆம் ஆண்டு வெளியான இராஜேந்திர குமார் மற்றும் சாய்ரா பானு நடித்த அமன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

1980 ஆம் ஆண்டு வெளியான ஹம் பாஞ்ச் படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இவர் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். 1982 ஆம் ஆண்டில், இஸ்மாயில் ஷெராஃப் இயக்கிய தில் ஆகீர் தில் ஹை படத்தில் ராகிக்கு இணையாக நடித்தார். இவரது மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான மசூம், 1983 இல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் நைனிடாலில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படமாக்கப்பட்டது.[10] முக்கியத் திரைப்படங்களில் இவரது அடுத்த பெரிய வெற்றி 1986 ஆம் ஆண்டு பல நட்சத்திரங்கள் நடித்த கர்மா திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் இவர் மூத்த நடிகரான திலீப் குமாருடன் நடித்தார். இதைத் தொடர்ந்து இஜாஸத் (1987), ஜல்வா (1988), ஹீரோ ஹீராலால் (1989) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 1988 ஆம் ஆண்டில், எச். ஆர். எஃப் கீட்டிங் எழுதிய மெர்ச்சன்ட் ஐவரி என்ற ஆங்கில மொழி புதினத்தின் திரைப்பட வடிவமான தி பெர்பெக்ட் மர்டரில் துப்பறியும் காவல் ஆய்வாளர் கோட் கதாபாத்திரத்தில் தனது மனைவி இரத்னா பகத்திற்கு இணையராக நடித்தார். இவர் ஆதித்யா பஞ்சோலியுடன் மாலாமால் (1988) மற்றும் கேம் (1993) போன்ற படங்களில் நடித்தார்.

குலாமி (1985), திரிடேவ் (1989), விஸ்வாத்மா (1992) போன்ற பல பல நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்த பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1994 ஆம் ஆண்டில், ஒரு நடிகராக தனது 100 வது படமான மொஹ்ராவில் வில்லனாக நடித்தார். அதே ஆண்டு டி. வி. சந்திரனின் பொந்தன் மடா என்ற நாடகத்தின் மூலம் மலையாள திரைப்படத்துறைக்குள் நுழைந்தார். இந்தப் படம் ஒரு நிலப்பிரபுத்துவ அடிமை (மம்முட்டி) மற்றும் ஒரு காலனித்துவ நில உரிமையாளர் (சா) ஆகியோருக்கிடையேயான காரண காரியமற்ற பிணைப்பைச் சித்தரிக்கிறது. கலை மற்றும் வணிகப் படங்களுக்கிடையேயான வேறுபாடு பெருமளவில் குறைந்துவிட்டதாக இவர் உறுதியாக நம்பினார். 2000 ஆம் ஆண்டில், கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் சா மகாத்மா காந்தி பாத்திரத்தில் நடித்தார், இத்திரைப்படம் தாக்குதல் நடத்தியவரின் பார்வையில் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டது.[11]

இக்பாலில் காது கேளாத மற்றும் ஊமையாக இருக்கும் ஒரு சிறுவனுக்கு குடிகாரப் பயிற்சியாளராக மோஹித் என்ற கதாபாத்திரத்தில் ஷா நடித்தார். 1999 ஆம் ஆண்டு அமீர் கான் நடித்த சர்ஃபரோஷ் படத்தில் ஒரு கஜல் பாடகரும் பயங்கரவாத சூத்திரதாரியுமான குல்ஃபாம் ஹாசனாக நடித்ததற்காக சா குறிப்பிடப்பட்டார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் நீரஜ் பாண்டேவின் “ஏ வெட்னஸ்டே” (2008) என்ற திரைப்படத்தில் நடித்தார்.

சா 2001 ஆம் ஆண்டில் மான்சூன் வெட்டிங் 2003 ஆம் ஆண்டில் தி லீக் ஆஃப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் உள்ளிட்ட பன்னாட்டுத் திரைப்படத் திட்டங்களிலும் (சீன் கோனரியுடன் இணைந்து நடித்தார்) நடித்துள்ளார். அங்கு இவர் கேப்டன் நெமோ கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது பாத்திரப்படைப்பான நெமோவின் சித்தரிப்பு வரைகலை நாவலின் வடிவமைப்பிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது, இருப்பினும் இவரது நெமோ மிகவும் குறைவான வெறித்தனத்தைத் கொண்டிருந்தது. விஷால் பரத்வாஜ் 2003 ஆம் ஆண்டில் சேக்சுபியரின் மக்பெத்தின் இந்திய தழுவலான மக்பூல் என்ற திரைப்படத்திலும், 2004 ஆம் ஆண்டில் அர்ஜுன் ராம்பால் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோடியாக ராஜீவ் ராயின் அசம்பவ் படத்திலும் பணியாற்றினார். பின்னர் இவர் தி கிரேட் நியூ வொண்டர்ஃபுல் (2005) படத்தில் பணியாற்றினார். ஆசிஃப் மாண்ட்வியின் 2009 ஆம் ஆண்டு நகைச்சுவைத் திரைப்படமான டுடேஸ் ஸ்பெஷலில் ஷா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். 2011 ஆம் ஆண்டில், இவர் தி டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் தோன்றினார். அனூப் குரியனின் தி ப்ளூபெரி ஹன்ட் படத்தில் நடித்தார். 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் கல்கி கோய்ச்லின் இணையராக நடித்தார்.

சோயப் மன்சூர் இயக்கிய குடா கே லியே படத்தில் சா தனது பாக்கித்தானிய திரைப்படத்துறையில் ஒரு திரைப்படத்தில் அறிமுகமானார், அங்கு இவர் ஒரு குறுகிய காலமே தோன்றும் கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது இரண்டாவது பாக்கித்தானிய திரைப்படமான ஜிந்தா பாக், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான 86 வது அகாதமி விருதுகளுக்கான நாட்டின் அதிகாரப்பூர்வ நுழைவாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இயக்குநராக

தொகு

சா தனது நாடகக் குழுவுடன் புது தில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் லாகூர் போன்ற இடங்களில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

திரைப்படங்களில் இவர் இயக்குநராக அறிமுகமான யுன் ஹோதா தோ க்யா ஹோதா 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதில் கொங்கனா சென் சர்மா, பரேஷ் ராவல், இர்ஃபான் கான், அப்போதைய புதுமுகம் ஆயிஷா தாக்கியா, இவரது மகன் இமாத் ஷா மற்றும் இவரது பழைய நண்பர் ரவி பாஸ்வானி போன்ற பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.[12]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு
 
ஷா மனைவி ரத்னா பதக் உடன் கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூர் திரையிடலில் 2012 இல்

சா மனாரா சிக்ரியை மணந்தார், இத்தம்பதியினருக்கு ஹீபா ஷா என்ற மகள் இருந்தார். 1970களில், சா நன்கு மதிக்கப்படும் குணச்சித்திர நடிகையான தினா பதக் மகள் ரத்னா பதக் சந்தித்து காதலித்தார். 70 மற்றும் 80 களில் அவர்கள் மிர்ச் மசாலா மற்றும் தி பெர்பெக்ட் மர்டர் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தனர்.[13] இவர்கள் பல ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்தனர், அதே நேரத்தில் மனாராவை விவாகரத்து செய்ய ஷா தேவையான மெஹ்ரை ஒன்றாக இணைத்தார். ஷா மற்றும் பதக் இறுதியாக 1982 இல் திருமணம் செய்து கொண்டனர்.[14] அவரது இரண்டாவது திருமணத்தின் மூலம், ஷாவுக்கு இமாத் மற்றும் விவான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர், இவர்கள் இருவரும் நடிகர்கள். இந்த இணையர் மும்பை ஹீபா, இமாத் மற்றும் விவானுடன் வசித்து வருகின்றனர்.[15]

மேற்கோள்கள்

தொகு
  1. "Naseeruddin Shah says essential for Muslims to stop feeling persecuted, assert claim on India". The Indian Express. 2 June 2017. Archived from the original on 2 June 2017. Retrieved 2 June 2017.
  2. "Naseeruddin Shah: The Angel of Chaos". Journal of Indian Cinema (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 20 July 2020. Retrieved 26 October 2020.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 28 October 2015. Retrieved 21 July 2015.
  4. Italo Spinelli (2002). Indian Summer: Films, Filmmakers and Stars Between Ray and Bollywood. Edizioni Oliveras. p. 144. ISBN 9788885982680. Archived from the original on 7 July 2014. Retrieved 6 April 2019.
  5. "Bollywood wishes Naseeruddin Shah on 70th birthday: You continue to inspire us". The Indian Express (in ஆங்கிலம்). 20 July 2020. Retrieved 7 May 2021.
  6. "Former GOC 3 corps in VP race". Nagaland Page. 9 May 2017. Archived from the original on 25 August 2017.
  7. K, Rakesh. "People's Vice Presidential Candidate". http://www.stateherald.com/2017/05/12/peoples-vice-presidential-candidate/. 
  8. "High speculation former GOC 3 Corps VP". Morung Express. 10 May 2017. Archived from the original on 1 July 2017. Retrieved 20 May 2017.
  9. "Naseeruddin Shah". ஐ. எம். டி. பி இணையத்தளம். Archived from the original on 20 January 2009. Retrieved 22 September 2009.
  10. "Shekhar Kapur says people wanted him to change Masoom script. Just another copy, retorts Internet". India Today (in ஆங்கிலம்). 2 August 2019. Archived from the original on 20 July 2020. Retrieved 13 May 2020.
  11. Vetticad, Anna M. M. (28 February 2000). "Naseeruddin Shah gets to play Mahatma Gandhi twice". India Today (in ஆங்கிலம்). Retrieved 17 May 2019.
  12. "Yun Hota.. the Rediff review". www.rediff.com. Archived from the original on 1 March 2018. Retrieved 28 September 2017.
  13. "Naseeruddin Shah's son falls off train". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 November 2006 இம் மூலத்தில் இருந்து 12 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131212194650/http://articles.timesofindia.indiatimes.com/2006-11-24/india/27821864_1_nair-hospital-local-train-imaad. 
  14. "Does Naseeruddin Shah's first marriage and divorce scare his second wife Ratna?". Stardust. 29 July 2013 இம் மூலத்தில் இருந்து 15 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140915030220/http://www.magnamags.com/stardust/blast-from-the-past/does-naseeruddin-shah-s-first-marriage-and-divorce-scare-his-second-wife-ratna/869. 
  15. "Lipstick Under My Burkha actor Ratna Pathak Shah shares a moment in time from when she dated Naseeruddin Shah". The Indian Express. 30 July 2017 இம் மூலத்தில் இருந்து 19 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180119235420/http://indianexpress.com/article/entertainment/bollywood/lipstick-under-my-burkha-actor-ratna-pathak-shah-shares-a-moment-in-time-from-when-she-dated-naseeruddin-shah-4774143/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசிருதீன்_சா&oldid=4267990" இலிருந்து மீள்விக்கப்பட்டது