விடாது கறுப்பு
விடாது கருப்பு ஓர் தமிழ்த் தொலைக்காட்சித் தொடராகும். இது சன் தொலைக்காட்சியில் 1997-98ல் ஒளிபரப்பப்பட்டது. இந்திரா சௌந்திரராஜன் எழுதிய விட்டு விடு கருப்பா என்ற தொடர்கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இத்தொடரை, நாகா இயக்கினார். மர்ம தேசம் தொடர் வரிசையில் இரண்டாவதான இது திகில்/உளவியல் கதைக்களத்தைக் கொண்டிருந்தது.
கதாப்பாத்திரம்
தொகுகாசிநாதன் - சேத்தன்
வர்சா - தேவதர்ஷினி,
டாக்டர். விஸ்வராம் - மோகன் வி. ராமன்,
கதைக்களம்
தொகுதோட்டக்காரன் மங்கலம் என்ற சிற்றூரில் காவல் தெய்வமான கருப்பசாமி குற்றவாளிகளைத் தண்டிக்கிறது என்ற நம்பிக்கையின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருந்தது. நம்பிக்கையும், அறிவியலும் ஒன்றே எனக் கதை முடிக்கப்பட்டது.