ஆதித்தியா மியூசிக்கு
ஆதித்தியா மியூசிக்கு இந்தியா தனியார் வரையறுக்கப்பட்டது (Aditya Music India Private Limited) என்பது ஓர் இந்திய இசை நிறுவனம் ஆகும்.[3] தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள இசைத்தொகுப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.[2] இதன் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளது.[4][5]
வகை | பொது |
---|---|
தலைமையகம் | ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுதும் |
முக்கிய நபர்கள் | உமேசு குத்தா (அவைத்தலைவர்)[1] |
தொழில்துறை | இசை மகிழ்கலை |
உற்பத்திகள் | ஒலிப்பேழைகள், குறுந்தகடுகள், காணொளிக் குறுந்தகடுகள் இலக்கமுறைப் பல் திறவாற்றல் வட்டுகள், நீலக்கதிர் வட்டு |
துணை நிறுவனங்கள் | சங்கீத்து சாகர்[2] |
இணையத்தளம் | http://www.adityamusicindia.com/ |
வரலாறு தொகு
ஆதித்தியா மியூசிக்கானது 1990களின் பிற்பகுதியில், தற்போது இதன் அவைத்தலைவராக உள்ள உமேசு குத்தாவால் நிறுவப்பட்டது.[2][1] இந்நிறுவனமானது 1996ஆம் ஆண்டு வரையில் ஏனைய இசை நிறுவனங்களின் இசைத் தொகுப்புகளை ஆந்திரப் பிரதேசத்தில் வழங்கி வந்தது.[2] இதன் பின்னர், சொந்த இசை உரிமங்களைப் பெற்று இசைத் தொகுப்புகளை வெளியிடத் தொடங்கியது.[2] 2000இல் ஒலிப்பேழைகளை உருவாக்குவதற்கான நிலையத்தையும் அமைத்துக் கொண்டது.[2]
ஆந்திரத் திரைப்படத்துறையின் பெரும்பாலான திரைப்படங்களுக்கான இசை உரிமங்கள் ஆதித்தியா மியூசிக்கிடம் உள்ளன.[2] சிவா மியூசிக்கல்சு, இலியோ, மாருதி மியூசிக்கு, எக்கோ, சோகன் மியூசிக்கு, சுப்பிரீம், பிரமிடு ஆடியோ போன்ற நிறுவனங்களின் இசை உரிமங்களையும் ஆதித்தியா மியூசிக்கு பெற்றுள்ளது.[2] போனோகிறாபிக்கு பெருபோமன்சு வரையறுக்கப்பட்டது இந்தியாவிலும் இந்திய ஆற்றுகை உரிமக் குமுகத்திலும் (ஐ. பி. ஆர். எசு.) இந்நிறுவனம் உறுப்பினராக உள்ளது.[6]
வெளியிட்ட தமிழ் இசைத் தொகுப்புகள் தொகு
ஆண்டு | இசைத் தொகுப்பு | இசையமைப்பாளர் |
---|---|---|
1996 | இலவு பேட்சு | ஏ. ஆர். இரகுமான் |
1997 | சூர்ய வமிசம் | எசு. ஏ. இராச்சுகுமார் |
1998 | காதலா! காதலா! | கார்த்திக்கு இராசா |
1998 | உயிரோடு உயிராக | வித்தியாசாகர் |
1999 | என்றென்றும் காதல் | மனோச்சு |
2000 | பதிரி | இரமணா கோகுலா |
2002 | கிங்கு | தீனா |
2006 | இரெண்டு | தி. இமான் |
2008 | மந்திரா | ஆனந்து |
2012 | மறந்தேன் மன்னித்தேன் | இளையராசா |
2012 | முரட்டு சிங்கம் | எசு. தமன் |
2012 | இராம் சரண் | ஆரிசு சயராசு |
2013 | இலவு தோரி | எசு. தமன் |
2013 | சமீன் | செல்வ கணேசு |
2014 | கார்த்திகேயன் | சேகர் சந்திரா |
2015 | சகலகலாவல்லவன் அப்பாடக்கர் | எசு. தமன் |
2015 | செல்வந்தன் | தேவி சிறீ பிரசாது |
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 BVS Prakash (21 ஆகத்து 2015). "Tiff between producers, audio firms". The Hans India. http://www.thehansindia.com/posts/index/2015-08-21/Tiff-between-producers-audio-firms-171530. பார்த்த நாள்: 25 ஆகத்து 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Aditya Music to venture into Tamil Industry". Indiaglitz. 19 செப்டம்பர் 2008. http://www.indiaglitz.com/aditya-music-to-venture-into-tamil-industry-tamil-news-41664.html. பார்த்த நாள்: 25 ஆகத்து 2015.
- ↑ Riddhi Mukherjee (30 அக்டோபர் 2014). "Believe Digital signs up with Aditya Music for global distribution of its regional content". MediaNama. http://www.medianama.com/2014/10/223-believe-digital-aditya-music/. பார்த்த நாள்: 25 ஆகத்து 2015.
- ↑ "Aditya Music". Aditya Music. http://adityamusicindia.com/. பார்த்த நாள்: 25 ஆகத்து 2015.
- ↑ "Aditya Music". Saavn. http://www.saavn.com/label/aditya-music-albums/PLNJ90ZqndE_?page=0&category=alphabetical&type=albums&language=&sort_order=asc. பார்த்த நாள்: 25 ஆகத்து 2015.
- ↑ "Members-Publishers". The Indian Performing Right Society Limited இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150820054109/http://www.iprs.org/cms/Membership/Members/Publishers.aspx. பார்த்த நாள்: 25 ஆகத்து 2015.
- ↑ "Aditya Music". Saavn. http://www.saavn.com/label/aditya-music-albums/PLNJ90ZqndE_?page=0&category=latest&type=albums&language=Tamil&sort_order=. பார்த்த நாள்: 25 ஆகத்து 2015.