அஞ்சான்
அஞ்சான் (Anjaan) 2014ம் ஆண்டு வெளிவந்த ஒரு அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்க, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15, 2014 வெளியிடப்பட்டது. இத் திரைப்படம் தெலுங்கு மொழியில் "சிகந்தர்" எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.[3]
அஞ்சான் | |
---|---|
முதல் சுவரொட்டி | |
இயக்கம் | லிங்குசாமி |
தயாரிப்பு | திருப்பதி பிரதர்ஸ் ரோனி ஸ்க்ரூவாலா |
கதை | லிங்குசாமி பிருந்தா சாரதி |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா சமந்தா ருத் பிரபு வித்யூத் ஜம்வால் மனோஜ் பாஜ்பாய் |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன் |
படத்தொகுப்பு | அன்தோனி |
கலையகம் | திருப்பதி பிரதர்ஸ் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 15 , 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 55 crore [1] |
மொத்த வருவாய் | 115 crore [2] |
நடிகர்கள்
தொகு- சூர்யா (ராஜு பாய், கிருஷ்ணன்)
- சமந்தா ருத் பிரபு ( ஜீீவா)
- வித்யூத் ஜம்வால் (சந்துரு)
- மனோஜ் பாஜ்பாய் (இம்ரான் பாய்)
- பிரம்மானந்தம்
- ராஜ்பால் யாதவ்
- தலீப் டாஹிலால்
- சூரி - (டேக்ஸி ஓட்டுனர்)
- முரளி ஷர்மா
- ஆசிப் பாஸ்ரா
- சத்யன்
- வித்யுலேகா ராமன்
- உமா ரியாஸ் கான்
- சித்ராங்கதா சிங் - சிறப்பு தோற்றம்
- மர்யம் ஜகாரியா - சிறப்பு தோற்றம்
கதை சுருக்கம்
தொகுதனது அண்ணன் ராசு (ராஜூ) வை தேடி கன்னியாகுமரியில் இருந்து கால் ஊனமுடைய கையில் குச்சி வைத்துள்ள கிருட்டிணன் (கிருஷ்ணா) மும்பை வருகிறார். அங்கு தனது அண்ணன் ராசு பாய் என்ற பெயரில் பெரிய தாதாவாக இருந்ததை அறிகிறார். ஆனால் ராசு பாய் இருக்குமிடம் தெரியாமல் அல்லாடுகிறார். ராசு பாயின் எதிரிகள் இவரையும் கொல்ல முயல்கின்றனர். இறுதியில் ராசு பாயிடம் வேலைபுரிந்த கரிம் பாயை சந்திக்கிறார். அவர் மூலம் ராசு பாயின் கடந்த காலத்தை அறிகிறார். ராசு பாயும் சந்துருவும் இணைபிரியா நண்பர்கள் என்றும் சந்துரு கொல்லப்பட்டு விட்டார் என்றும் தெரியவருகிறது. ஆனால் ராசு பாய் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. மும்பை காவல்துறை ஆணையர் மூலம் இவர்களுக்கு பலத்த நெருக்கடி ஏற்பட்டதால் அவரின் மகளை திருமண நாளுக்கு முந்தைய இரவு கடத்துகிறார் ராசு பாய். இறுதியில் ஆணையரின் மகளும் ராசுபாயும் காதலில் வீழ்கின்றனர். சந்துருவும் ராசுபாயும் அவர்களை விட பெரிய தாதாவான இம்ரன் பாயின் எதிர்ப்பை பெறுகின்றனர். சந்துரு எப்படி கொலை செய்யப்பட்டார், ராசு பாயுக்கு என்ன ஆனது? ஆணையர் மகளின் காதல் நிறைவேறியதா? கிருட்டிணன் இந்த முடிச்சுகளை எப்படி அவிழ்க்கிறார்? இம்ரன் பாயுக்கு என்ன ஆனது? என்பதை இயக்குநர் பல திருப்பங்களுடன் சொல்லியுள்ளார்.
இசை
தொகுஇந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.இசை உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் வாங்கியது. திட்டமிடப்பட்ட இசை வெளியீட்டு விழா இரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து சத்யம் சினிமாவில் ஊடக பிரமுகர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் "பேங் பேங் பேங்" மற்றும் "ஏக் தோ தீன்" பாடல் காட்சி திரையிடப்பட்டு[4] இசை ஜூலை 23, சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.
பாடல் பட்டியல்
தொகு# | பாடல் | வரிகள் | பாடகர் (கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "பேங் பேங்" | மதன் கார்க்கி | ரஞ்சித் | 4:11 | |
2. | "ஒரு கண் ஜாடை" | விவேகா | பென்னி தயால், ஸ்வேதா பண்டிட் |
4:23 | |
3. | "ஏக் தோ தீன்" | நா. முத்துக்குமார் | சூர்யா, ஆண்ட்ரியா ஜெரெமையா |
||
4. | "காதல் ஆசை" | கபிலன் | சூரஜ் சந்தோஷ், யுவன் ஷங்கர் ராஜா |
5:04 | |
5. | "சிரிப்பு என்" | விவேகா | எம்.எம்.மனசி | 4:39 | |
மொத்த நீளம்: |
22:10 |
குறிப்புகள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ [http://news.indiglamour.com}}
- ↑ http://news.indiglamour.com}}
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news-interviews/Samanthas-Anjaan-is-Sikander-in-Telugu/articleshow/36209967.cms
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Sony-Music-bags-Suriyas-Anjaan/articleshow/37635004.cms