லிங்குசாமி

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

லிங்குசாமி (Lingusamy), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துவந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

என். லிங்குசாமி
பிறப்புநரேன் லிங்குசாமி
இலட்சுமிபுரம், தேனி மாவட்டம்தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிஇயக்குனர் (திரைப்படம்), தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1997–தற்போது

பிறப்பு தொகு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம் என்னும் ஊரில் நம்மாழ்வார் – லோகநாயகி இணையருக்கு மகனாக 1969 ஆண்டில் லிங்குசாமி பிறந்தார்.[1] இராதாகிருட்டிணன், கேசவன், சுபாசுசந்திரபோசு ஆகியோர் இவருக்கு உடன்பிறந்தவர்கள்.[2]

கல்வி தொகு

லிங்குசாமி தனது தொடக்கக் கல்வியை (முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) இலட்சுமிபுரத்தில் உள்ள எசு. ஆர். வி. எசு. நடுநிலைப் பள்ளியில் பெற்றார். 1970 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் லிங்குசாமியின் குடும்பம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் என்னும் ஊருக்குக் குடிபெயர்ந்தனர். எனவே, லிங்குசாமி தனது நடுநிலைப் பள்ளிக் கல்வியை (6, 7, 8ஆம் வகுப்புகள்) மூலங்குடியில் உள்ள தூய வளனார் பள்ளியில் பெற்றார். பின்னர் மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலை (9, 10 வகுப்புகள்), மேல்நிலை (11, 12 வகுப்புகள்) கல்வியைப் பெற்றார். பின்னர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரம் பயின்று கலை இளவர் பட்டம் பெற்றார்.[3]

இயக்கியுள்ள திரைப்படங்கள் தொகு

ஆண்டு படம் நடிப்பு மொழி குறிப்புகள்
2001 ஆனந்தம் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, ஸ்ரீவித்யா தமிழ்
2002 ரன் (திரைப்படம்) மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன், விவேக், அனு ஹாசன் தமிழ் இந்தியில் இதே பெயரில் மீண்டும் படமாகப்பட்டது.
2005 ஜி (திரைப்படம்) அஜித் குமார், திரிஷா, விஜயகுமார், மணிவண்ணன், விசு தமிழ்
2005 சண்டக்கோழி விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண், நிதின் சத்யா, லால், சுமன் செட்டி தமிழ் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டது.
2008 பீமா விக்ரம், திரிஷா, பிரகாஷ்ராஜ், ரகுவரன், செரின், அசிஸ் வித்தியார்த்தி தமிழ் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டது.
2010 பையா கார்த்தி, தமன்னா தமிழ் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டது.
2012 வேட்டை ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால், நாசர் தமிழ் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது.
2014 அஞ்சான் சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜம்வால் தமிழ் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டது.

தயாரித்துள்ள திரைப்படங்கள் தொகு

ஆண்டு படம் மொழி குறிப்புகள்
2007 தீபாவளி தமிழ்
2009 பட்டாளம் (திரைப்படம்) தமிழ்
2010 பையா தமிழ் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டது.
2012 வேட்டை தமிழ் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது.
2012 வழக்கு எண் 18/9 தமிழ்
2012 கும்கி தமிழ்
2013 இவன் வேற மாதிரி தமிழ்
2014 அஞ்சான் தமிழ்
2015 இடம் பொருள் ஏவல் தமிழ் தயாரிப்பு
2015 உத்தம வில்லன் தமிழ்
2015 ரஜினி முருகன் தமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "லிங்குசாமி சினிமா பயணத்தில் 20 ஆண்டுகள் - தினமலர்". 27 மே 2021.
  2. பல்சுவை காவியம் – திங்கள் இதழ், மே 2013, பக்.24
  3. பல்சுவை காவியம் – திங்கள் இதழ், மே 2013, பக்.25


"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்குசாமி&oldid=3844278" இலிருந்து மீள்விக்கப்பட்டது