பிருந்தா சாரதி
இந்திய திரைப்பட இயக்குநர்
பிருந்தா சாரதி என்றழைக்கப்படுகின்ற நா. சுப்பிரமணியன் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார்.[1] லிங்குசாமியுடன் இணைந்து பணியாற்றிவர் பின்பு சுயமாக படங்களை இயக்கினார்.[2]
பிருந்தா சாரதி | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2001 – தற்போது |
1965இல் கும்பகோணத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சுப. நாராயணன்-ருக்மணி ஆவர்.[3] இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.
திரைப்படங்கள்
தொகுஆண்ட | திரைப்படம் | நடிகர்கள் | குறிப்பு |
---|---|---|---|
2001 | ஆனந்தம் | மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா | உரையாடல் |
2003 | தித்திக்குதே | ஜீவா, சிறீதேவி விஜயகுமார், சுருத்திகா | இயக்குநர் |
2010 | பையா | கார்த்திக் சிவகுமார், தமன்னா, மிலின்ட் சோமன் | உரையாடல் |
2012 | வேட்டை | மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் | உரையாடல் |
பாடல்கள்
தொகுதித்திக்குதே | நேரம் | வித்யா சாகர்r |
---|---|---|
மன்னவனே மன்னவனே | 4:49 | சவன் |
சில்லென்ற தீப்பொறியொன்று | 5:21 | சவன் |
Iraq Yutham | 4:58 | சவன் |
ஒரு நிமிடம்மா | 5:27 | சவன் [5] |
நூல்கள்
தொகுகீழ்க்கண்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
- நடை வண்டி, 1992 [6][7]
- பறவையின் நிழல் (கவிதைத் தொகுப்பு) பரணிடப்பட்டது 2017-07-02 at the வந்தவழி இயந்திரம், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, ஏப்ரல் 2015 [8]
- ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் (கவிதைத் தொகுப்பு), டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, ஏப்ரல் 2016 [9]
- எண்ணும் எழுத்தும் (கவிதைத் தொகுப்பு), படி வெளியீடு, கே கே நகர் மேற்கு, சென்னை 600 078, ஜனவரி 2017
- மீன்கள் உறங்கும் குளம் (ஹைகூ கவிதைகள் தொகுப்பு), டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், சென்னை 6000078, செப்டெம்பர்,2017 [10]
- இருளும் ஒளியும், படைப்பு, 2019 [11]
- பச்சையம் என்பது பச்சை ரத்தம் (125 ஹைகூ கவிதைகளின் தொகுப்பு), படைப்பு, 2020 [12]
விருதுகள்
தொகுகீழ்க்கண்டவை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[3]
- அனைத்துக் கல்லூரிக் கவிதைப் போட்டியில் தமிழ்நாடு அளவில் முதல் பரிசு
- கல்கி பொன்விழா கவிதைப் போட்டியில் பரிசு
- ஜெயகாந்தன் படைப்பிலக்கிய விருது, 2016 (ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் கவிதைத்தொகுப்பு)
- படைப்புக்குழுமம் விருது, 2017 (எண்ணும் எழுத்தும் கவிதை நூல்) [13]
ஆதாரம்
தொகு- ↑ http://sify.com/movies/tamil/preview.php?ctid=5&cid=2423&id=13208564
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-06-16. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.
- ↑ 3.0 3.1 எண்ணும் எழுத்தும் கவிதைதொகுப்பில் வாழ்க்கைக்குறிப்பு
- ↑ "Brinda Sarathy Filmography".
- ↑ http://www.google.co.in/music/album?n=Thithikudhe&id=20110912120056_3gr4gjakwr6xy[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பேராசிரியர் இரா.மோகன், நேசிக்கவும் யோசிக்கவும் வைக்கும் பிருந்தா சாரதி
- ↑ பிருந்தா சாரதியின் முதல் கவிதைத்தொகுப்பு மறுபதிப்பு, சினிமா இன்பாக்ஸ் 21 சனவரி 2019
- ↑ குட்ரீட்ஸ், பறவையின் நிழல்
- ↑ குட்ரீட்ஸ், ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்
- ↑ மௌனங்கள் பேசினால், கீற்று, 1 அக்டோபர் 2019
- ↑ சென்னை புத்தகக் காட்சி அரங்கில் வெளியிடப்பட்ட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் இருளும் ஒளியும், தமிழ்டுடே நியூஸ், 8 சனவரி 2019
- ↑ செங்கனி
- ↑ இயக்குநர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது, புதிய தலைமுறை, 11 செப்டம்பர் 2018