தடம் (Thadam)' 2019 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடி குற்றப்புனைவுத் திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியவர் மகிழ் திருமேனி , மேலும் இந்தர் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் அருண் விஜய், தன்யா கோப் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளானர். இசையமைப்பளர் அருண் ராஜ் இசையமைப்பை மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதி கோபிநாத் மற்றும் என். பி. சிரீகாந்த்.[1]

தடம்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மகிழ் திருமேனி
தயாரிப்புஇந்தர் குமார்
கதைமகிழ் திருமேனி
இசைஅருண் ராஜ்
நடிப்புஅருண் விஜய்
வித்யா பிரதீப்
தன்யா கோப்
ஒளிப்பதிவுகோபிநாத்
படத்தொகுப்புஎன். பி. ஸ்ரீகாந்த்
கலையகம்ரேதான் - த சினிமா பீப்புள்
விநியோகம்ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயென்மென்ட்
வெளியீடு1 மார்ச் 2019
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

எழில் (அருண் விஜய்) ஒரு சாதாரண உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கை முறையை வாழும் ஒரு கட்டடப் பொறியியலாளர் ஆப்வார். அவர் ஒரு ஸ்வாங்கி பி.எம்.டபிள்யூ கருடன் ஓர் ஆடம்பரமான பங்களாவில் வசிக்கிறார் மற்றும் அவரது கட்டுமான வணிகம் சிறப்பாக செயல்படுவதால் அவரது வாழ்க்கை சரியான திசையில் செல்கிறது. அவர் திரைப்பட பத்திரிகையாளர் தீபிகாவை தன்யா கோப் காதலிக்கிறார்.

எழிலின் இரட்டை சகோதரர் கவின் (அருண் விஜய்) ஒரு புத்திசாலி, கடத்தல்காரர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்கிறார். பல பெண்களை கவர்ந்திழுக்கிறார், சட்ட அமைப்பில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் அறிந்தவர். அவரது ஒரே பலவீனம், சூதாட்டம் ஆகும். குழந்தைகள் சிறுவயதாக இருந்தபோது கணவனிடமிருந்து விவாகரத்து பெற்ற தனது தாயுடன் (சோனியா அகர்வால்) கவின் வசித்து வருகிறார். எழில் மற்றும் கவின் இருவரும் எந்த நேரத்திலும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள்வதில்லை.

நகரத்தில் ஒரு குற்றம் நடக்கும் வரை இரட்டை சகோதரர்கள் தங்கள் சொந்த பாதையில் பயணிக்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரர் எடுத்த செல்ஃபி மூலம் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் எழில் காவல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் (FEFSI விஜயன்) என்பவரால் கைது செய்யப்படுகிறார். தற்செயலாக, குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் காவல்துறையினர் கவின் கைது செய்யப்படுகிறார். மேலும் அவரும் அதே காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுவது காவல் அதிகாரியிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

சகோதரர்கள் இருவரும் இந்த கொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மறுக்கிறார்கள். கோபாலகிருஷ்ணன் தனிப்பட்ட காரணங்களுக்காக எழிலை அக்குற்றத்தில் சிக்க வைக்க விரும்புகிறார். சிக்கலான வழக்கை விசாரிக்க அவரது உதவியாளரான புத்திசாலியான மலர்விழியிடம் ஒப்படைக்கிறார். மலர்விழி குற்றம் செய்தது யார் எனக் கண்டுபிடித்தாரா? என்பது மீதிக்கதையாகும்.

நடிகர்கள் தொகு

அருண் விஜய் - இருவேடங்களில் (கவின் மற்றும் எழில்)
வித்யா பிரதீப் - காவல் ஆய்வாளர் மலர்விழி
சுருமிதி வெங்கட் - கவிதாவை ஒருதலையாகக் காதலிக்கும் பெண் ஆனந்தி
தன்யா கோப்[2] - தீபிகா, எழிலில் காதலி
சோனியா அகர்வால் - எழில் மற்றும் கவின் ஆகியோரின் தாயார்
(FEFSI விஜயன்) - காவல் அதிகாரி கோபாலகிருட்டிணன்
இசக்கியப்பன் - ஆகாசு
யோகி பாபு - சுருளி
சியார்சு மர்யான் - காவலர் தனசேகர்
மீரா கிருஷ்ணன் - சேச்சி

தயாரிப்பு தொகு

2017 மார்ச்சில், அருண் விஜய் அவர் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கும் ஒரு படத்தில் பணியாற்றுவார் என்று தெரியவந்தது. தடையறத் தாக்க (2012) படத்திற்குப் பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றிய இரண்டாவதுப் படமாகும்..[3] இந்தர் குமார் தயாரித்த இப்படம் ஏப்ரல் 2017 இல் சென்னையில் தொடங்கப்பட்டது.[3][4] அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் இந்த படம் நிச வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டது என்பதும் தெரிய வந்ததது.[5] இப்படத்தில் தான்யா கோப், வித்யா பிரதீப் மற்றும் சுமிருதி என்ற மூன்று கதாநாயகிகள் உள்ளனர் Venkat.[6] இந்த படத்திற்கு இசையமைக்க அருண் ராஜ் தேர்வு செய்யப்பட்டார், மகிழ் திருமேனிக்கும் அருண் விஜய்க்கும் முதல்படத்தில் பணியாற்றிய கோபிநாத் மற்றும் என். பி. ஸ்ரீகாந்த் படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளாராக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[7][8] ஃபெப்ஸி விஜயன் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோரும் இப்படம் ஜூன் 2017 இல் தயாரிக்க ஆரம்பிக்கும்போது முன்பு படத்தில் ஒப்பந்தமாயினர்.[9][10]

படத்தின் வெற்றி தொகு

தடம் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் மூன்றாவது வார இறுதியில் மொத்தம் ரூ .2.3 கோடியை ஈட்டியது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மதிப்பிடப்பட்ட ஒட்டுமொத்த மொத்த தொகை 20 நாட்களின் முடிவில் ரூ.184 கோடியாக இருந்தது.[11]

ஒலித்தொகுப்பு தொகு

இந்த படத்தின் இசை இயக்குனராக அருண் ராஜ் அறிமுகமாகி பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் மதன் கார்க்கி தாமரை (கவிஞர்) மற்றும் மகிழ் திருமேனி ஆகியோரும் பாடல்களை எழுதியுள்ளனர்.

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "இணையே"  சித் ஸ்ரீராம், பத்மலதா 3:35
2. "தப்பு தண்டா"  வி. எம். மகாலிங்கம், அருண் ராஜ், ரோகித் ஸ்ரீதர் 3:40
3. "விதி நதியே"  எல். வி. ரேவந்த் 3:20
4. "தடம் தீம்"  அருண் ராஜ் 2:00
5. "விதி நதியே"  அருண் ராஜ் 3:28

குறிப்புகள் தொகு

  1. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/jun/12/arun-vijays-next-confirmed-to-have-three-heroines-1615878.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-09. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
  3. 3.0 3.1 https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/yet-another-thriller-for-arun-vijay/articleshow/57631341.cms
  4. https://www.indiaglitz.com/arun-vijay-magizh-thirumeni-untitled-movie-tamil-movie-preview-21475
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
  6. https://www.indiaglitz.com/tanya-hope-soori-and-vidya-pradeep-the-three-heroines-in-arun-vijay-magizh-tirumeni-thadam-tamil-news-191506
  7. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/apr/17/arun-vijays-next-based-on-real-life-incident-1594534.html
  8. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/arun-vijay-magizh-thirumeni-film-gets-a-new-composer/articleshow/59677327.cms
  9. https://timesofindia.indiatimes.com/entertainment/events/chennai/aruns-film-with-magizh-is-titled-thadam/articleshow/59105461.cms
  10. https://www.indiaglitz.com/fefsi-vijayan-to-play-the-lead-villain-in-arun-vijay-magizh-tirumeni-film-tamil-news-185645.html
  11. "Arun Vijay's Thadam continues blockbuster run in Tamil Nadu; Ispade Rajavum Idhaya Raniyum struggles at box-office". Firstpost. 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தடம்&oldid=3709472" இலிருந்து மீள்விக்கப்பட்டது