சோனியா அகர்வால்
சோனியா அகர்வால் (பிறப்பு - மார்ச் 28, 1982, பஞ்சாப்), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாகத் தமிழ் மொழித் திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரையுலகத்திற்கு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன.[1][2][3]
சோனியா அகர்வால் | |
---|---|
பிறப்பு | 28 மார்ச்சு 1982 பஞ்சாப் இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2002–present |
வாழ்க்கைத் துணை | செல்வராகவன் |
வலைத்தளம் | |
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Sonia Agarwal |
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
தொகு- 2006 - புதுப்பேட்டை
- 2006 - திருட்டுப்பயலே
- 2005 - ஒரு நாள் ஒரு கனவு
- 2005 - ஒரு கல்லூரியின் கதை
- 2004 - 7ஜி ரெயின்போ காலணி
- 2004 - மதுர
- 2003 - கோவில்
- 2003 - சக்செஸ் (Success)
- 2003 - காதல் கொண்டேன்
நடித்த சின்னத்திரை தொடர்கள்
குறிப்புகள்
தொகு- ↑ "Life Chennai : Success for Sonia Agarwal". தி இந்து. 19 May 2005.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sonia Agarwal, actor". The Hindu. 24 March 2011 இம் மூலத்தில் இருந்து 26 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231026083736/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-nxg/Sonia-Agarwal-actor/article14958805.ece.
- ↑ "Heroines who fell for their directors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 6 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211106213011/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/heroines-who-fell-for-their-directors/photostory/34322092.cms. பார்த்த நாள்: 5 August 2021.
வெளி இணைப்புகள்
தொகு