தோழா (Oopiri) 2016- ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமாகும். இது தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் எடுக்கப்பட்டது. தெலுங்கில் இதன் பெயர் ஒப்பிரி. இத்திரைப்படம் பிரெஞ்சு திரைப்படமான தி இன்டச்சபில்ஸ் என்றதன் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தில் கார்த்திக் சிவகுமார், நாகார்சூனா, தமன்னா, பிரகாசு ராசு, விவேக், அனுசுக்கா, செயசுதா, சிரேயா போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார், பிரசாத் வி பொட்லூரி தயாரித்துள்ளார்.

தோழா
தமிழ் பதிப்பின் சுவரொட்டி
இயக்கம்வம்சி பைடிபள்ளி
தயாரிப்புபிரசாத் வி பொட்லூரி
கதைவம்சி பைடிபள்ளி
அரி
சாலோமன்
அப்புரி ரவி
(தெலுங்கு)
ராசு முருகன்
(தமிழ்)
மூலக்கதைதி இன்டச்செபெல்சு (பிரெஞ்சு திரைப்படம்)
இசைகோபி சுந்தர்
நடிப்புகார்த்திக் சிவகுமார்
நாகார்சூனா
தமன்னா
ஒளிப்பதிவுபி. எசு. வினோத்
படத்தொகுப்புமது
(தெலுங்கு)
பிரவின் கே, எல்]
(தமிழ்)
கலையகம்பிவிபி சினிமா
வெளியீடு25 மார்ச்சு 2016 (2016-03-25)
ஓட்டம்158 நிமிடங்கள்
(தெலுங்கு)
179 நிமிடங்கள்
(தமிழ்)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
தமிழ்
ஆக்கச்செலவு500−600 மில்லியன் (US$−7.9 மில்லியன்)[a]
மொத்த வருவாய்1 பில்லியன் (US$13 மில்லியன்)[3]

கதை சுருக்கம் தொகு

சீனு (கார்த்திக் சிவகுமார்) திருடிய குற்றத்துக்காக சிறைக்கு சென்று நிபந்தனை பிணையில் வெளிவருகிறார். அவரை அவரின் குடும்ப உறுப்பினர்கள் மதிக்கவில்லை. பெரும் பணக்காரரான விக்கிரமாதித்தியா கால் கை செயலிழந்தவர் அதாவது தலைக்கு கீழ் எந்த உறுப்பும் அவருக்கு இயங்காது. அவரை வழக்கறிஞர் லிங்கம் (விவேக்) விக்கரமாதித்யா (நாகார்சூனா) வீட்டுக்கு அவரை கவனித்துக்கொள்ள அனுப்புகிறார். விக்கரமாதித்தியா பலருக்கு நடத்திய நேர்காணலில் சீனுவை அவருக்கு பிடித்து வேலைக்கு வைத்துக்கொள்கிறார். சீனுவை விக்கிரமாதித்தியாவின் வீட்டில் வேலை செய்யும் எவருக்கும் பிடிக்கவில்லை. பிரசாது (பிரகாசு ராச்) மூலம் 5 ஆண்டுகளுக்கு முன் பாரிசில் பாராகிளைடிங் செய்யும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டதையும் அவரின் காதலி நந்தினி (அனுசுக்கா) நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக விக்கிரமாதித்தியாவிற்கு நந்தினியை திருமணம் செய்யும் எண்ணமில்லை என்று நந்தினியிடம் பிரசாது பொய் சொல்கிறார். விக்கிரமாதித்தியாவின் இந்த கடந்த காலத்தை சீனு பிரசாது மூலம் அறிகிறார்.

விக்கிரமாதித்தியாவிற்கு மன அழுத்தம் இருப்பதை அறிந்த சீனு அவரை பாரிசுக்கு அழைத்து செல்கிறார். நந்தினிக்கு விக்கிரமாதித்தியாவின் நிலையை சீனு சொல்லி அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறார். அங்கு விக்கிரமாதித்தியா நந்தினியை சந்திக்கிறார். சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து விக்கிரமாதித்யாவிற்கு தெரியாது. நந்தினிக்கு திருமணமானதையும் அவருக்கு குழந்தை இருப்பதையும் அறிகிறார். அதனால் விக்கிரமாதித்தியாவின் மன அழுத்தம் நீங்குகிறது.

குறிப்புகள் தொகு

  1. International Business Times India estimates the film's budget as 500 million,[1] and Sakshi estimates the film's budget as 600 million.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழா&oldid=3769471" இருந்து மீள்விக்கப்பட்டது