ஜெயசுதா

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

ஜெயசுதா (Jayasudha, பிறப்பு: டிசம்பர் 17, 1958) இந்திய நடிகையும்,ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் சிக்கந்தராபாத் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2014 வரை இருந்தவர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் , இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

ஜெயசுதா
2016 இல் ஜெயசுதா
ஆந்திரா மாநில சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
தொகுதி சிக்கந்தராபாத்
தனிநபர் தகவல்
பிறப்பு சுஜாதா
17 திசம்பர் 1958 (1958-12-17) (அகவை 62)
சென்னை
வாழ்க்கை துணைவர்(கள்)
நித்தின் கபூர் (தி. 1985⁠–⁠2017)
பிள்ளைகள் 2
பணி நடிகை, அரசியல்வாதி

வரலாறுதொகு

ஜெயசுதா தமிழ்நாட்டில் சென்னையில் 17 டிசம்பர், 1958ல் தெலுங் பேசும் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் சுஜாதா. இவருடைய அத்தை நடிகையும், இயக்குனருமான விஜய நிர்மலா ஆவார். 1972ல் தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அரங்கேற்றம் திரைப்படத்தில் இயக்குனர் பாலசந்தர் இவருக்கு சிறிய கதாபாத்திரத்தினைத் தந்தார். சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் போன்றத் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார்.

இவரது கணவர் நித்தின் கபூர் 2017 மார்ச் 14 அன்று கட்டிடம் ஒன்றின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.[3]

சில திரைப்படங்கள்தொகு

தயாரிப்புதொகு

  • ஹேன்ட்ஸ் அப் (1999)

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயசுதா&oldid=2796757" இருந்து மீள்விக்கப்பட்டது