மேல்நாட்டு மருமகள்

ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மேல் நாட்டு மருமகள் (Melnaattu Marumagal) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் அமெரிக்க அம்மாயி எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.

மேல் நாட்டு மருமகள்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஏ. பி. நாகராசன்
தயாரிப்புசி. என். வெங்கடசாமி
(சி. என். வி. மூவீஸ்)
கதைஏ. பி. நாகராசன்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஜெயசுதா
ஒளிப்பதிவுகே. எஸ். பிரசாத்
படத்தொகுப்புடி. விஜயரங்கம்
நடனம்வேம்படி சின்னசத்யம்
தங்கப்பன்
வெளியீடுமே 10, 1975
நீளம்3789 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

ஜூனியர் பாலையா இத்திரைப்படம் மூலம் திரைப்பட துறையில் அறிமுகமானார்.[2] பாடகர் உஷா உதூப் தமிழில் முதன்முறையாக இப்படத்தில் ஒரு பாடல் பாடியதோடு அப்பாடலுக்கு திரையிலும் நடித்துள்ளார்.[3] நடிகர் கமல்ஹாசன் மற்றும் வாணி கணபதி இணைந்து நடித்த ஒரே படமாகும், பின்னாளில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

பாடல்கள்

தொகு

குன்னக்குடி வைத்தியநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4] 'பூவை செங்குட்டுவன்', 'உளுந்தூர்பேட்டை சண்முகம்' , 'நெல்லை அருள்மணி', 'திருச்சி பரதன்', கீதா பிரியன் மற்றும் குயில் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.[5][6]

எண். பாடல் பாடகர்(கள்)
1 "கௌ வொன்டர்புல்" (How wonderful) எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
2 "கலைமகள் கை" வாணி ஜெயராம், டி.கே. கலா
3 "லவ் இஸ் எ பியூட்டிபுல்" (Love is a beautiful) உஷா உதூப்
4 "முத்தமிழில் பாட" வாணி ஜெயராம்
5 "பல்லாண்டு பல்லாண்டு" வாணி ஜெயராம், டி.கே. கலா
6 "சுகம் தரும்" ராஜேஷ், மனோகரி

மேற்கோள்கள்

தொகு
  1. "இளையராஜா இசை அமைத்த முதல் படம் அன்னக்கிளி மாபெரும் வெற்றி". Maalai Malar. 28 April 2016. Archived from the original on 8 February 2015. பார்க்கப்பட்ட நாள் 24 May 2021.
  2. "இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா! - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்". Hindu Tamil Thisai. 28 June 2020. Archived from the original on 22 May 2021. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.
  3. "Usha Uthup, maverick as ever". இந்தியன் எக்சுபிரசு. 7 December 2010. Archived from the original on 28 February 2023. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.
  4. "Viji Manuel, the keyboard player par excellence, is dead". தி இந்து. 17 August 2015 இம் மூலத்தில் இருந்து 22 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210522134134/https://www.thehindu.com/news/cities/chennai/viji-manuel-the-keyboard-player-par-excellence-is-dead/article7548445.ece. 
  5. "Melnattu Marumagal". JioSaavn. 10 May 1975. Archived from the original on 28 February 2023. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
  6. "Melnaattu Marumagal Tamil Film EP Vinyl Record by Kunnakkudi Vaidyanathan". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 29 April 2021. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்நாட்டு_மருமகள்&oldid=4098821" இலிருந்து மீள்விக்கப்பட்டது