வாணி கணபதி (Vani Ganapathy), ஒரு இந்திய பரத நாட்டியக் கலைஞர்,[1] திரைப்பட நடிகையாவார். 1978 ஆம் ஆண்டில், இவருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் திருமணம் நடந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது.

வாணி கணபதி
பிறப்பு6 சூன் 1950
தேசியம்இந்தியர்
பணிநடனம்
அறியப்படுவதுபரதநாட்டியம்
வாழ்க்கைத்
துணை
கமல்ஹாசன்
(தி. 1978; ம.மு. 1988)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

இவரின் இயற்பெயர் வாணிபாரதி இவர் தஞ்சாவூரில் ஒரு வைதீக பிராமண குடும்பத்தில் கணபதி ஐயர்–இந்துமாலா தம்பதியதற்கு மூத்த மகளாக பிறந்தார் இவருக்கு மீரா என்ற தங்கை உள்ளார். வாணி டி. ஏ. ராஜலட்சுமியிடம் கல்கத்தாவில் மூன்று வயதில் நடன பயிற்சி தொடங்கினார். பிறகு தன் சிறு வயதிலேயே பம்பாய் சென்றார் அங்கு அவரது கல்வியும், பயிற்சியும் தொடர்ந்தது.

நடன வாழ்க்கை தொகு

இவரின் ஏழு வயதின்போது நடனமாடத் துவங்கினார். தன்னுடைய நடனத்திற்காக உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். இவர் சஞ்சாரி என்ற நடனப் பள்ளியைப் பெங்களூரில் நடத்தி, வசித்து வருகிறார்.[2]

திரைப்பட வாழ்வு தொகு

இவர் 1972 இல் பாலிவுட் படங்களில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

1978 இல் வாணி நடிகர் கமல்ஹாசனை மணந்தார்.[3] இவர் 1975 இல் மேல்நாட்டு மருமகள் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார். திருமணம் ஆன பிறகு, வாணி கமலஹாசனின் ஆடை வடிவமைப்பாளராக பல படங்களில் பணியாற்றினார். அவர்கள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1988 இல் மணமுறிவு செய்துகொண்டனர்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணி_கணபதி&oldid=3870839" இலிருந்து மீள்விக்கப்பட்டது