பூவை செங்குட்டுவன்
பூவை செங்குட்டுவன் (Poovai Senkuttuvan) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர்.[1] 1967ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், 4000இற்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 திரைப்படங்களுக்கு கதை, 3 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதியவர். மேலும் 15இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், 30இற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்துறையில் பங்காற்றியவராவார்.
பூவை செங்குட்டுவன் | |
---|---|
பிறப்பு | முருகவேல் காந்தி கீழப்பூங்குடி சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | கவிஞர் பாடலாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இலக்கியவாதி |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கலைமாமணி விருது, 'கலைச்செல்வம்', 'கவிமன்னர்', 'கண்ணதாசன் விருது' |
பெற்றோர் | ராமையா அம்பலம்-லட்சுமி அம்மாள் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபூவை செங்குட்டுவன் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி என்னும் ஊரில் ராமையா அம்பலம்-லட்சுமி அம்மாள் இணையருக்கு பிறந்தார்.
பக்திப் பாடல்கள்
தொகு'தேரழந்தூர் சகோதரிகள் ' என்ற அறிமுகத்தோடு ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு பின்னாளில் சூலமங்கலம் சகோதரிகளாக புகழ் பெற்றவர்களுக்காக பல பக்திப் பாடல்களை இயற்றியவர் பூவை செங்குட்டுவன்.
விருதுகள்
தொகுஇயற்றிய சில திரைப்படப் பாடல்கள்
தொகு- தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)
- ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்)
- இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா - குன்னக்குடி எஸ்.வைத்தியநாதன் இசையமைப்பில்)
- நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (புதிய பூமி - எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில்)
- ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா) - அனைத்துப் பாடல்கள்
- காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)
- காலம் எனக்கொரு (பௌர்ணமி), சேகர் இசையமைப்பில், எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்)
- வானம் நமது தந்தை (தாகம்)
- திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை, இசை:குன்னக்குடி வைத்தியநாதன்)[4]
- ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை, இசை: கே.வி.மகாதேவன்)
- திருப்புகழைப் பாட பாட (கௌரி கல்யாணம், இசை: எம.எஸ்.விஸ்வநாதன்)
- வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)
- வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)
- திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி, இசை: இளையராஜா)
மேற்கோள்கள்
தொகு- ↑ "திரையிசைப் பாடல்களில் கவிதை நயம்".
- ↑ "கவிஞர்கள் திருநாள் விருது - 2010".
- ↑ "திருவள்ளுவர் விருது, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
- ↑ "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. – கவிஞர் பூவை செங்குட்டுவன்". வல்லமை (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-01-02. பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.