தும்பா (Thumba) கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒரு கடலோர புறநகர்ப்பகுதி. இப்பகுதி இந்திய அரசின் தும்பா ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டதில் இருந்து புகழ்பெற்றது. இது 1962-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது நிலநடுக்கோட்டுக்கு அருகிலிருப்பதால் ராக்கெட் ஏவுவதற்கு ஏற்றதாக இருக்குமென்பதால் தேர்வு செய்யப்பட்டது. அப்துல் கலாம் இவ்வமைப்பு தொடங்கப்பட்ட போது பணிபுரிந்த பொறியாளர்களுள் ஒருவர். 1963 நவம்பர் 21-இல் இதன் முதல் சவுண்டிங் ராக்கெட்டான நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.

தும்பா
—  புறநகர்  —
தும்பா
அமைவிடம்: தும்பா, கேரளம் , இந்தியா
ஆள்கூறு 8°31′0″N 76°52′0″E / 8.51667°N 76.86667°E / 8.51667; 76.86667
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் திருவனந்தபுரம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
1963-இல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து முதல் ஏவுகணை விடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்பா&oldid=3832856" இலிருந்து மீள்விக்கப்பட்டது