இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்திற்கு, முகமூடி (திரைப்படம்) என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

முகத்தை மறைத்து அணியப்படும் அணிகலனே முகமூடி ஆகும். முகமூடிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பழக்கத்தில் இருந்துவருகின்றன. தொடக்ககாலகட்டத்தில் முகமூடிகள் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டன. தற்பாதுகாப்பு போன்ற நடைமுறைத் தேவைகளுக்க, வேட்டையிலும், போரிலும் கவசங்களாகவும் பயன்பட்டன. அழகியல் அல்லது பண்பாடு நோக்கங்களுக்கும் முகமூடி அணியப்படுவதுண்டு. முகமூடிகள், நிகழ்த்துக் கலைகளிலும் பயன்பட்டன. தமிழக கலாச்சாரத்தில் அரக்க முகமூடிகள் கண் திருஷ்டிக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. முகம்மூடிகள் ஒரு வெளிப்பாட்டு பொருளாகவும் இருக்கின்றன. நவீன காலகட்டத்தில் வீட்டு அலங்காரத்துக்கும் முகமூடிகளை சுவர்களில் மாட்டி அழகுபடுத்தி வருகின்றனர்.[1]

உலகின் பழைமையான முகமூடி.

மேற்கோள்கள் தொகு

  1. தியானன் (32 மார்ச் 2018). "வீட்டை அழகாக்கும் முகமூடி". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/society/real-estate/article23391423.ece. பார்த்த நாள்: 1 ஏப்ரல் 2018. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Masks
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமூடி&oldid=3578069" இருந்து மீள்விக்கப்பட்டது