தேவர் மகன்

பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தேவர் மகன் (Thevar Magan) 1992 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 1992 ஆண்டிற்கான 40வது இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இத்திரைப்படம் பல பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்பட வெற்றியினை அடுத்து இந்தியில் விரசாத் என்ற திரைப்படப் பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது.

தேவர் மகன்
இயக்கம்பரதன்
தயாரிப்புகமல்ஹாசன்
சந்திரஹாசன்
கதைகமல்ஹாசன்
திரைக்கதைகமல்ஹாசன்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
கமல்ஹாசன்
நாசர்
ரேவதி
கௌதமி
வடிவேலு
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடுஅக்டோபர் 25, 1992
ஓட்டம்158 நிமிடங்கள்
மொழிதமிழ்

கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மொத்தம் ஏழு நாட்களுக்குள் எழுதி முடித்தார்.[1] ஆனந்த விகடன் நாளிதழ் இத்திரைப்படத்திற்கு 60 மதிப்பெண் வழங்கியுள்ளது.

கிராமப்படம்

நடிகர்கள்

தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

லண்டனில் படிப்பை முடித்து சக்தி தனது சொந்த ஊருக்குத் தனது காதலியுடன் திரும்பி வருகின்றார். அங்கு தந்தையான பெரியத் தேவரைச் சந்தித்து தனது காதலியை அறிமுகமும் செய்து வைக்கின்றார். ஆரம்பத்தில் கோபம் கொள்ளும் பெரிய தேவர் பின்னர் அமைதி கொள்கின்றார். இதற்கிடையில் அவ்வூரில் இருக்கும் பெரிய தேவரின் சகோதரனின் பகை உணர்வுகளால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. பின்னர் அது கலவரமாகவும் வெடித்தது. இதற்கிடையில் வெளியூருக்குச் செல்லும் சக்தியின் காதலியோ பின்னாளில் வரும்பொழுது சக்தி வேறொருவரை மணம் செய்துள்ளது கண்டு கடுங்கோபம் கொள்கின்றார். சக்தியும் பெரியவர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்படியே தான் திருமணம் செய்ததெனக் கூறுகின்றார். இறுதியில் பெரிய தேவரின் சகோதரரின் மகனிடம் ஏற்படும் தகராறுகளினாலும் பலமுறை கூறியும் அவன் காவல்துறையினரிடம் சென்று செய்த தவறுகளைக்கூறவில்லை என்ற காரணத்தினாலும் அவனைத் துரத்துகின்றார் சக்தி. இதற்கிடையில் தெரியாத்தருணமாக அவரின் தலையையும் துண்டித்து விடுகின்றார். அவ்வூர் மக்கள் எடுத்துக் கூறியும் செய்த தப்பிற்காக தண்டனை பெறவும் செய்கின்றார் சக்தி.

பாடல்கள்

தொகு

இளையராஜா அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல்வரிகள் வாலி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.[3]

எண். பாடல் பாடகர்கள் நீளம் (நி:வி)
1 சாந்துப்பொட்டு ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், கமல்ஹாசன் 5:10
2 போற்றிப்பாடடி ... சிவாஜி கணேசன், சுருதி ஹாசன் 1:26
3 வானம் தொட்டு ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் 2:26
4 அடபுதியது பிறந்தது ... மலேசியா வாசுதேவன் குழுவினர் 4:43
5 இஞ்சி இடுப்பழகா ... எஸ். ஜானகி 2:16
6 இஞ்சி இடுப்பழகா ... எஸ். ஜானகி, கமல்ஹாசன் 3:29
7 மாசறு பொன்னே ... சுவர்ணலதா குழுவினர் 3:12
8 மணமகளே ... சுவர்ணலதா, மின்மினி, சிந்துஜா 2:16
9 போற்றிப்பாடடி ... சுந்தர்ராஜன், மனோ, டி.கே.எஸ் கலைவாணன் 4:57
10 வெட்டறுவா ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் 2:38

விருதுகள்

தொகு

1993 தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

  • வென்ற விருது - சிறந்த மாநிலமொழி திரைப்படம் - கமல்ஹாசன் (தயாரிப்பாளர்), பரதன் (இயக்குநர்)
  • வென்ற விருது - சிறந்த துணை நடிகை- ரேவதி
  • வென்ற விருது - சிறந்த பின்னணிப் பாடகி - எஸ். ஜானகி
  • வென்ற விருது - சிறப்பு விருது - சிவாஜி கணேசன்
  • வென்ற விருது - சிறந்த ஒலி அமைப்பு - என். பாண்டு ரங்கன்

தமிழக அரசு திரைப்பட விருதுகள்

  • சிறந்த படம் - இரண்டாவது பரிசு
  • சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
  • சிறந்த நடண ஆசிரியர் - ரகுராம்

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

  • சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
  • சிறந்த நடிகை - ரேவதி

சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

  • சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
  • சிறந்த நடிகை - ரேவதி

பிலிம் பேன்ஸ் அசோசியேசன் விருதுகள்

  • சிறந்த நடிகை - ரேவதி

மேற்கோள்கள்

தொகு
  1. "தேவர் மகன் பட ஸ்கிரிப்ட்டை ஒரே வாரத்தில் எழுதி முடித்த கமல்ஹாசன்". நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி. 13 சூன் 2020. https://tamil.news18.com/news/entertainment/cinema-how-kamal-haasan-created-record-with-thevar-magan-msb-304075.html. 
  2. ஆனந்தராஜ், கு. (14 சூன் 2017). ""கமல் சார் கழுத்துல அருவாளை வெச்சப்போ...! நீலிமா ராணி ஃப்ளாஷ்பேக்". ஆனந்த விகடன். Archived from the original on 4 சூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2020.
  3. https://imdb.com/title/tt0105575/mediaviewer/rm3134236929

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவர்_மகன்&oldid=4119609" இலிருந்து மீள்விக்கப்பட்டது