பாலசுப்பிரமணியம் (ஒளிப்பதிவாளர்)

ஒளிப்பதிவாளர்

கே. டி. பாலசுப்ரமணியம் (Balasubramaniem, பிறப்பு 18 ஆகத்து 1966) என்பவர் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். [1] [2] இவர் பி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக சுமார் 5 ஆண்டுகள் தேவர் மகன், திருடா திருடா, குருதிப்புனல் போன்ற விருது பெற்ற படங்களில் பணியாற்றினார். [3]

பாலசுப்பிரமணியம்
பிறப்புகே. டி. பாலசுப்பிரமணியம்
18 ஆகத்து 1966 (1966-08-18) (அகவை 57)
காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இ. மாலா
பிள்ளைகள்2 (கவின், கருண்)

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

பாலசுப்ரமணியம் தமிழ்நாட்டின் காரைக்குடியில் பிறந்தார். அங்கு இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் இவர் திருப்பத்தூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு, திருப்பத்தூர் ஏ.பி.எஸ்.ஏ கல்லூரிக்கு சென்றார். இவர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இ. மாலாவை மணந்தார். இந்த இணையருக்கு கவின், கருண் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

தொழில் தொகு

இவரது முதல் படம் இரணியன் ஆகும். அது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திய வரலாற்று நாடகத் திரைப்படமாகும். பின்னர் இயக்குனர் பாலாவின் பிதாமகன் மற்றும் 180 ஆகிய படங்களில் பணியாற்றினார்.

தேவர் மகன் (1992), திருடா திருடா (1993), குருதிப்புனல் (1995) போன்ற விருது பெற்ற படங்களில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் சுமார் 5 ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்து அதன் வழியாக பாலசுப்ரமணியம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் மொழி குறிப்புகள்
1997 லேடிஸ் ஒன்லி இந்தி வெளியிடப்படவில்லை
1999 இரணியன் தமிழ்
2000 யுவகுடு தெலுங்கு
2002 உன்னை நினைத்து தமிழ்
2003 வசீகரா தமிழ்
பிதாமகன் தமிழ்
இனிது இனிது காதல் இனிது தமிழ்
2004 எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி தமிழ்
2005 மஜா தமிழ்
2006 தம்பி தமிழ்
சைனிகுடு தெலுங்கு
2007 அழகிய தமிழ்மகன் தமிழ்
2008 கண்ணும் கண்ணும் தமிழ்
ஜெயம் கொண்டான் தமிழ்
2009 நினைத்தாலே இனிக்கும் தமிழ்
2010 குட்டி தமிழ்
உத்தம புத்திரன் தமிழ்
2011 180 ( நூற்றென்பது ) தமிழ்/தெலுங்கு தமிழ்நாடு அரசு திரைப்பட விருது
சிங்கம் புலி தமிழ்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி தமிழ்
நீர்ப்பறவை தமிழ் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சைமா விருதுக்கு- பரிந்துரைக்கப்பட்டது.
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா தமிழ்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் தமிழ்
2014 இது கதிர்வேலன் காதல் தமிழ்
நண்பேண்டா தமிழ்
2015 பசங்க 2 தமிழ்
2016 ரஜினி முருகன் தமிழ்
கதகளி (திரைப்படம்) தமிழ்
இது நம்ம ஆளு தமிழ்
2017 பொதுவாக எம்மனசு தங்கம் தமிழ்
2018 சீமராஜா தமிழ்
2019 போத ஏறி புத்தி மாறி தமிழ்
2020 அன்புள்ள கில்லி தமிழ்
2021 சக்ரா தமிழ்

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு