பாலாஜி தரணிதரன்
பாலாஜி தரணீதரன் (Balaji Tharaneetharan) ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று வெளியான நகைச்சுவைத் திரைப்படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.
பாலாஜி தரணீதரன் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி |
பின்னணி
தொகுபாலாஜி தரணீதரன், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012) என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு இளைஞன் தனது வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நேரத்தில் சில நாட்களை மறக்கும் ஒரு நகைச்சுவையான கதையாக வந்தது.[1] வாரணம் ஆயிரம் படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த போது பிரேம் குமார் தனது நினைவை இழந்தார். திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் மூன்று நண்பர்களுடன் துடுப்பாட்டம் விளையாடச் சென்றார். பந்தை பிடிக்க முயன்றபோது, அவர் கீழே விழுந்து தற்காலிகமாக நினைவாற்றலை இழந்தார்.[2] அவருடன் இருந்த பாலாஜி தரணீதரன், சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை எழுதத் தொடங்கினார்.[3]
பிரேம் குமாருடன் இருந்த மற்ற சாட்சிகளில் ஒருவரான பகவதி பெருமாள் இந்த படத்தில் தானும் நடிக்க ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பிரேம் குமார் ஒளிப்பதிவை தானே கையாண்டார்.[4]
வெளியீடு
தொகுநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் செப்டம்பர் 2012இல் வெளியிடப்படவிருந்தது. திரைத்துறையிலிருந்து விமர்சகர்கள் மற்றும் ஆளுமைகளுக்கான முன்னோட்ட காட்சிகள் நடத்தப்பட்டன. இந்த படம் ஊடகங்கள் மற்றும் பல்வேறு இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[5] அதன் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து, ஒரு பரந்த வெளியீட்டை அடைய பட வெளியீட்டை ஒத்திவைக்க குழு முடிவு செய்தது.[6] இதன் விளைவாக விமர்சகர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான விமர்சனங்களை பெற திரையிடப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா சேர்ந்த எம்.சுகாந்த் 5 க்கு 4-மதிப்பெண்ணைக் கொடுத்தார்.[7] தி இந்து நாளிதழின் கே. ஆர். மணிகண்டன் "ஒரு எளிய கதை மற்றும் திறமையான புதுவரவுகள் ஒரு சிறிய அணி எனவும், ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படம்" என்றார்.
விருது
தொகுஅடுத்த ஆண்டு விருது விழாக்களில் இந்தப் படம் சிறப்பாக செயல்பட்டது. முன்னணி அறிமுக இயக்குனராக பாலாஜிக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. சிறந்த திரைக்கதைக்காக விஜய் விருதுகள், எடிசன் விருதுகள் ஆகியவற்றில் விருதுகளை பெற்றது.
அடுத்த முயற்சி
தொகுசனவரி 2013 இல், பாலாஜி தனது இரண்டாவது படமான சீதக்காதி என்ற படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸின் தயாரிப்பில் இயக்கத் தொடங்கினார்.[8] இருப்பினும், ஒரு வருடத்திற்குப் பிறகு, தான் இந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் பின்னர் மீண்டும் தொடங்குவதாகவும் அறிவித்தார். ஆகஸ்ட் 2014இல், இவர் தனது அடுத்த முயற்சியாக ஒரு பக்க கதை என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டா. மேலும் இதில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்தார்.[9] இதைத் தொடர்ந்து, இவர் விஜய் சேதுபதியின் நடிப்பில் சீதக்காதி படத்தை இயக்கினார். ஆகும், இதில் நடுவுள்ள கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்தார்கள்.
சான்றுகள்
தொகு- ↑ "Andrea sings for Naduvula Konjam Pakkatha Kaanom". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 July 2012. Archived from the original on 3 January 2013. பார்க்கப்பட்ட நாள் 7 August 2012.
- ↑ Venkadesan S (2012-11-22). "Can't recollect my wedding: C Prem Kumar". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2012-12-11.
- ↑ Nikhil Raghavan (2012-03-10). "Arts / Cinema : ITSY BITSY". The Hindu. Archived from the original on 24 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-12-13.
- ↑ "Naduvula konjam pakkatha kaanom Movie Review". Behindwoods. 2012-11-30. பார்க்கப்பட்ட நாள் 2012-12-11.
- ↑ "NKPK celebrity show in Chennai". Sify. 2012-09-19. Archived from the original on 2012-09-21. பார்க்கப்பட்ட நாள் 2012-12-11.
- ↑ "NKPK release postponed by a month!". Sify. 2012-09-20. Archived from the original on 2012-09-21. பார்க்கப்பட்ட நாள் 2012-12-11.
- ↑ "Naduvula Konjam Pakkatha Kaanom movie review: Wallpaper, Story, Trailer at Times of India". The Times of India. 2012-12-01. பார்க்கப்பட்ட நாள் 2012-12-11.
- ↑ sify.com
- ↑ "NKPK fame Balaji Tharaneetharan's next titled 'Oru Pakka Kathai'". 30 August 2014.