கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

கலர்ஸ் தமிழ் என்பது வயாகாம்18 குழுமத்தால் துவங்கப்பட்ட ஒரு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] முதலில் NXTதமிழ் & ZAPதமிழ்HD என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய இது, பிப்ரவரி 19, 2018 அன்று கலர்ஸ் தமிழ் & கலர்ஸ் தமிழ்HD தொலைக்காட்சியாக உருமாற்றம் பெற்றது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
கலர்ஸ்-தமிழ்.png
ஒளிபரப்பு தொடக்கம் 19 பிப்ரவரி 2018
உரிமையாளர் வயாகாம்-18
பட வடிவம் 576i (SD)
1080i (HD)
கொள்கைக்குரல் "இது நம்ம ஊரு கலரு"
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) Channel 778
டாட்டா ஸ்கை (இந்தியா) Channel 1555
சன் டைரக்ட் (இந்தியா) Channel 128
வீடியோகான் டி2எச் (இந்தியா) Channel 553
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) Channel 647
டிஷ் டிவி (இந்தியா) Channel 1808
மின் இணைப்பான்
அரசு டிஜிட்டல் (தமிழ்நாடு) Channel 108
டிசிசிஎல் (தமிழ்நாடு) Channel 4
எஸ்சிவி (தமிழ்நாடு) Channel 139

இது நம்ம ஊரு கலரு என்ற கொள்கை முழக்கத்துடன் மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்புகிறது.[2] மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ஒருசில இந்தித் தொடர்களைத் தமிழில் குரல்மாற்றம் செய்து ஒளிபரப்புகிறது.[3]

கலர்ஸ் தமிழின் விளம்பரத் தூதராக தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா செயல்படுகிறார்.[4] Voot என்ற செயலி மூலமாக கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் திறன்பேசியில் காண முடியும்.[5]

நிகழ்ச்சிகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Colors Tamil (2018-02-16), இது நம்ம ஊரு கலரு | Colors தமிழ் துவக்க விழா, retrieved 2018-02-16
  2. "தமிழ் மண்ணின் மண்வாசம் தான் கலர்ஸ் சேனல்", Cinema Pluz (in ஆங்கிலம்), retrieved 2018-02-20
  3. "Colors Tamil", YouTube, retrieved 2018-02-16
  4. "தமிழில் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி 'கலர்ஸ்'", Tamil Cine Talk (in ஆங்கிலம்), 2018-02-09, retrieved 2018-02-14
  5. TV, Colors, "Voot செயலியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி", www.voot.com, retrieved 2018-02-20

வெளி இணைப்புகள்தொகு