டிஷ் தொலைக்காட்சி

இந்திய தொலைக்காட்சி நிறுவனம்
(டிஷ் டிவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டிஷ் டிவி இந்தியா லிமிடட் (ஆங்கிலம்: Dish TV) என்பது இந்தியாவில் டிடிஎச் மூலம் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இது இந்தியத் தேசியச் செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) 4ஏ செயற்கைக்கோள் உதவியுடன் எம்பெக்-2 தொழினுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. 2003ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜீ என்டர்டெய்ன்மென்டு நிறுவனத்தினால் டிஷ் டிவி ஆரம்பிக்கப்பட்டது.

டிஷ் டிவி
வகைபொது (மும்பை பங்குச் சந்தை: 532839)
நிறுவுகை2004
தலைமையகம்நொய்டா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்ஆர். சி. வெங்கடேசு
தொழில்துறைசெயற்கைக்கோள் தொலைக்காட்சி
தாய் நிறுவனம்ஜீ என்டர்டெய்ன்மென்டு
இணையத்தளம்dishtv.in

இணைப்பு ஒப்பந்தம்

தற்போது டிஷ் டிவி, வீடியோகான் டி2எச் ஆகிய இருபெரும் டிடிஎச் நிறுவனங்களும் இணைய ஒப்பந்தம் செய்துள்ளன. அவ்வாறு இணைந்த பிறகு டிஷ் டிவி வீடியோகான் நிறுவனம் என்ற பெயருடன் அழைக்கப்படும். அதில் 55.4 சதவீத பங்குகளை டிஷ் டிவியும் மீதமுள்ள பங்குகளை வீடியோகான் டிடிஎச்சும் நிர்வாகம் செய்வர்.[1] இந்த இணைப்பிற்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் (சிசிஐ) வழங்கி இருக்கிறது.[2] 2018 மார்ச் மாதத்தில் இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. "டிஷ் டிவி, வீடியோகான் டிடீஹெச் இணைகிறது", The Hindu Tamil, பார்க்கப்பட்ட நாள் 2018-02-16
  2. "வீடியோகான், டிஷ் டிவி இணைப்புக்கு சிசிஐ ஒப்புதல்", The Hindu Tamil, பார்க்கப்பட்ட நாள் 2018-02-16
  3. "Citi retains buy on Dish TV with 23% return, stock jumps 2% intraday", Moneycontrol (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-02-28
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஷ்_தொலைக்காட்சி&oldid=3924228" இலிருந்து மீள்விக்கப்பட்டது