டாட்டா ஸ்கை

இந்தியத் தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள்

டாட்டா ஸ்கை (Tata Sky) என்பது இந்தியாவில் உள்ள ஒரு டி. டீ. எச் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது இன்சாட் (INSAT) 4A செயற்கைக்கோள் உதவியுடன் எம்பெக்-4 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது.[1]

டாட்டா ஸ்கை
வகைகூட்டு நிறுவனம்
நிறுவுகை2004
தலைமையகம்மும்பை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முக்கிய நபர்கள்ஹரித் நாக்பால் (நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி)
தொழில்துறைஊடகம்
உற்பத்திகள்டி.டீ.எச். சேவை & செயற்கைக்கோள் தொலைக்காட்சி
தாய் நிறுவனம்
இணையத்தளம்TataSky.com
டாட்டா ஸ்கை டிஷ் ஆண்டெனா யூனிட்

கேபிள் தொலைக்காட்சி, மற்றும் மற்ற டி. டீ. எச். சேவை வழங்கிகளான ஏர்டெல் டிஜிட்டல் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி, டிடி டைரக்ட் +, டிஷ் டிவி, சன் டைரக்ட் மற்றும் வீடியோகான் டி2எச் போன்றவை அதன் முக்கிய போட்டி நிறுவனங்கள் ஆகும். டாடா ஸ்கை தற்போது மொத்தம் 601 சேனல்கள், 495 எஸ்டி சேனல்கள் மற்றும் 99 எச்டி சேனல்களை வழங்குகிறது.[2]

வரலாறு

இது டாட்டா குழுமம் நிறுவனமும், ஸ்டார் டிவி நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஒரு கூட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2004ல் ஒருங்கிணைக்கப்பட்டது. எனினும் இது 2006ல் தான் செயல்படத்தொடங்கியது. இது தற்போது 196 சேனல்களை (டிசம்பர் 2010 வரை) வழங்குகிறது.

டாட்டா ஸ்கை எச்டி

டாட்டா ஸ்கை எச்டி சூன் 14, 2010, அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை மிகத் தெளிவாகக் காண முடியும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_ஸ்கை&oldid=3610047" இருந்து மீள்விக்கப்பட்டது