கடம்பன் (திரைப்படம்)

கடம்பன் ('Kadamban) (About this soundஒலிப்பு ) 2017இல் வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் ராகாவா இதை எழுது இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரியுடன் இணைந்து பி. சுரேஷ், பி. ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா (திரைப்பட நடிகர்), ஆர்யா ஆகியோரும் தயாரித்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில். ஆர்யா மற்றும் கேத்ரின் தெரசா ஆகிய இருவரும் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[1] ஜேம்ஸ் கேமரன் இயக்கத்தில் 2009இல் வெளிவந்த அவதார் என்ற ஆங்கிலத் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவு செய்தவர் சதீஷ் குமார் ஆவார். மேலும் படத்தொகுப்பினை தேவாவும், கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகனும் சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனும் மேற்கொண்டிருந்தனர். இப்படம் தெலுங்கில் "கஜேந்திரட"' என மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[2] படத்தின் இந்தி உரிமைகளை ஆர்.கே. துக்கல் ஸ்டுடியோஸ் நல்ல விலைக்கு வாங்கியது. இந்திப் பட முன்னோட்டம் 6 மே 2017 அன்று வெளியானது. இந்தி மொழிபெயர்ப்பு பணிகள் ஆர்.கே.டி ஸ்டுடியோவால் மேற்கொள்ளப்பட்டது.

கடம்பன்
சுவரிதழ்
இயக்கம்என். ராகவன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைராகவன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஆர்யா
காத்ரீன் திரீசா
ஒளிப்பதிவுசதீஸ் குமார்
படத்தொகுப்புதேவா
கலையகம்சூபர் குட் பிலிம்ஸ்
விநியோகம்தி சோ பீபில்
ஆகஸ்டு சினிமா
வெளியீடு14 ஏப்ரல் 2017 (2017-04-14)
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைதொகு

கடம்பன் (ஆர்யா) தமிழ்நாட்டின் கடம்பன் வனத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவன். இப்பகுதி அதன் வனவிலங்குகளுக்கும், ஏராளமான சுண்ணக்கற்களுக்கு பெயர் பெற்றது. ஒரு பெரிய சிமென்ட் தொழிற்சாலை வைத்திருக்கும் மகேந்திரன் சகோதரகள் கவனத்தை இந்த இடம் ஈர்க்கிறது பின்னர் அவர்கள் எளிதில் யாரையும் நம்பாத பழங்குடியினரை அந்தக் காட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர். அந்த வனத்தில் வசிக்கும் ரதி (காத்ரீன் திரீசா) என்றப் பெண் கடம்பனைக் காதலிக்கிறாள். கடம்பனுடன் தனது காதலைச் சொல்லி அவனது இதயத்தை வெல்ல தொடர்ந்து முயற்சிக்கிறாள். ரதியின் சகோதரனும் கடம்பனும் ஒருவருக்கொருவர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். பின்னர் மகேந்திரன் சகோதரர்கள் காட்டினை ஆக்கிரம்ப்பு செய்து தங்களது தொழிலை தொடங்கினார்கள? என்பதும் கடம்பன் அவர்களை எவ்வாறு எதிர்க்கிறான் என்பதும், ரதியை கடம்பன் திருணம் செய்து கொண்டானா? என்பதும் படத்தின் மீதிக்கதை சொல்கிறது.

நடிகர்கள்தொகு

 • ஆர்யா
 • கேத்ரின் தெரசா
 • தீபராஜ் ராணா
 • சூப்பர் சுப்ரமணியன்
 • ஆடுகளம் முருகதாஸ்
 • ராஜசிம்மன்
 • அருண்
 • மகேந்திரன்
 • எத்திராஜ்
 • மதுசூதனன்
 • காதல் சரவணன்
 • எலிசபெத்
 • மதுரை சரோஜா
 • டாக்டர் சாபு ஐசக்

தயாரிப்புதொகு

ஜனவரி 2015 இல், ராகவா மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் ஒன்று சேர்ந்து இப்படத்தை உருவாக்குவதாக அறிவித்தார்கள். சாகச படமாக இத்திரைப்படம் வரும் என்று கூறினார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளராக இளையராசா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[3][4] தனிகாட்டு ராஜா என பெயரிட்டு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு பின்பு இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது. டிசம்பர் 2015 இல், ராகவா ஆர்யா கதாநாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு அதிரடி சாகசப் படத்தை இயக்குவதாகவும், அது ஒரு காட்டின் பின்னணியில் அமையப்ப் போகும் படமாகும் என்றும் அறிவித்தார்.[5] பின்னர், காத்ரீன் திரீசா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். உடன் யுவன் சங்கர் ராஜா படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார்[6] நடிகர் ஆர்யா படத்தில் அவரது பாத்திரத்திற்காக, மிகவும் கடுமையான பயிற்சிக்கு உட்பட்டார், அவர் தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டார். தனது உடலமைப்பை பேணுவதில் முழுமையான ஈடுபாட்டை மேற்கொண்டார். மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது தசைகளை நன்கு வெளிப்படுத்தினார்.[7]

இந்த படம் மார்ச் 2016 இல் கொடைக்கானல் காடுகளில் படப்பிடிப்பு தொடங்கியது. அங்கு நிலப்பரப்பு கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. இங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை படபிடிப்புக் குழு உணர்ந்தது, காட்டில் அவர்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு சவாலையும் ஏற்றுக்கொண்டனர்; இணைய தொடர்பு கிடைப்பது மிகவும் என்பதால் படக்குழு உள்ளூர் தொலைத் தொடர்பு நிர்வாகத்தினரிடம் நான்கு தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்டது.[8][9] 2016, மே மாதம் இப்படத்தின் தலைப்பு " கடம்பன்" என பெயர் வெளியிடப்பட்டது.[6][10] இப்படத்தின் முடிவுக்காட்சிக்காக எழுபது யாப்னைகளைக் கொண்டு படமாக்காப்பட்டது.[11] "கடம்பன்" திரைப்படம் காட்டை நேசிப்பதற்கான ஒரு சமூக செய்தியையும் இயற்கையின் எளிய வழிகளையும் கொண்ட ஒரு சரித்திரமாகும்; இது உண்மையில் நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒரு கண் திறப்பு என இப்படத்தின் நாயகி காத்ரீன் திரீசா தெரிவித்தார்.[12]

பாடல்கள்தொகு

இசையமைத்தவர்- யுவன் ஷங்கர் ராஜா 

பாடல் எழுதியவர் யுகபாரதி.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடம்பன்_(திரைப்படம்)&oldid=3225263" இருந்து மீள்விக்கப்பட்டது