அட்ராங்கி ரே

அட்ராங்கி ரே (Atrangi Re) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழி காதல் நாடகத் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தை இமான்சு சர்மா எழுதி ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ளார். டி-சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்சன்ஸ் மற்றும் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் மற்றும் தனுஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சஜ்ஜாத் (அக்ஷய் குமார்) என்ற மனிதனைக் காதலிக்கும் ரிங்கு (சாரா அலி கான்) என்ற தொடர்ந்து வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதையை இந்தப் படம் சொல்கிறது. இந்தப் பெண் ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட விசுவை (தனுஷ்) வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்கிறாள்.

அட்ராங்கி ரே
இயக்கம்ஆனந்த் எல். ராய்
தயாரிப்பு
  • எல். ராய்
  • ஹிமான்சு சர்மா
  • பூஷன் குமார்
  • கிரிஷான் குமார்
கதைஹிமான்சு சர்மா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுபங்கஜ் குமார்
படத்தொகுப்புஹேமால் கோத்தாரி
கலையகம்
  • டி-சீரீஸ்
  • கலர் யெல்லோ புரொடெக்சன்ஸ்
  • கேப் ஆப் குட் பிலிம்ஸ்
விநியோகம்ஹாட் ஸ்டார்
வெளியீடு24 திசம்பர் 2021 (2021-12-24)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

2014 ஆம் ஆண்டில் ராஞ்சனா வெளியான பிறகு இத்திரைப்படத்தின் கரு ராய் மூலம் உருவானது. இவர் சர்மாவுடன் இணைந்து திரைக்கதையை உருவாக்கினார். மனித உணர்ச்சிகளின் சிக்கலான விஷயங்களை, அதிலும் முக்கியமாக காதலை ஆராய்ந்தார். கதைக்கரு, வசனம் மற்றும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் தனுஷை நடிக்க வைப்பது உறுதியானது. ஆனால், மீதமுள்ள நடிகர்கள் தேர்வு இறுதியில் உருவானது. 2020 ஆம் ஆண்டு சனவரியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இடையில் ஆறு மாத படப்பிடிப்பை இழந்த போதிலும், படப்பிடிப்பு செயல்முறை மார்ச் 2020 இல் தொடங்கி மார்ச் 2021க்குள் நிறைவடைந்தது. வாரணாசி, பீகாரின் சில பகுதிகள், டெல்லி, ஆக்ரா, மும்பை, மதுரை, காரைக்குடியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இசை மற்றும் ஒலிப்பதிவு ஏ.ஆர்.ரகுமானால் இயற்றப்பட்டது. பாடல் வரிகளை இர்ஷாத் கமில் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை முறையே பங்கஜ் குமார் மற்றும் ஹேமல் கோத்தாரி ஆகியோர் செய்திருந்தனர்.

தொற்றுநோய் காரணமாக நாடு தழுவிய பொது முடக்கத்தின் விளைவாக, அதன் வெளியீட்டுத் தேதி பல முறை மாற்றியமைக்கப்பட்ட பிறகு, தயாரிப்பாளர்கள் 24 டிசம்பர் 2021 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலம் படத்தை வெளியிடத் தீர்மானித்துத் திரையரங்குகளில் வெளியிடுவதைத் தவிர்த்துவிட்டனர். தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[2] இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, வழக்கத்திற்கு மாறான கதைக்களம், முன்னணி நடிகர்களின் நடிப்பு, இயக்கம், ஒலிப்பதிவு மற்றும் இசை ஆகியவை விமர்சனங்களில் பாராட்டினைப் பெற்றது. ஆனால், ஒட்டுமொத்த கதைக்களத்தின் பொருத்தமற்ற திரைக்கதை மற்றும் வெளிப்பாடு விமர்சத்திற்குள்ளாகியது.

நடிப்பு

தொகு
  • எஸ். வெங்கடேஷ் விஸ்வநாத் ஐயர் / விசு, ரிங்குவின் கணவராக தனுஷ்
  • சாரா அலி கான் இரட்டை வேடங்களில்:
    • ரிங்கு சூரியவன்ஷி ஐயர்
      • குழந்தை ரிங்கு சூர்யவன்ஷியாக மன்னத் மிஸ்ரா
    • மஞ்சரி சூரியவன்ஷி, ரிங்குவின் தாய் [3]
  • அக்க்ஷய் குமார் இரட்டை வேடங்களில்:
    • சஜ்ஜத் அலி கான், மஞ்சரியின் முன்னாள் காதலன் மற்றும் ரிங்குவின் தந்தை மற்றும் கற்பனை காதலன்
  • ரஜ்ஜோ சூரியவன்ஷி, ரிங்குவின் பாட்டி மற்றும் மஞ்சரியின் அம்மாவாக சீமா பிஸ்வாஸ்
  • ஆஷிஷ் வர்மா மதுசூதனனாக, பேச்சுவழக்கில் சுருக்கமாக MS, விசுவின் நண்பர்
  • மந்தாகினி "மாண்டி" சென்குப்தாவாக டிம்பிள் ஹயாதி, விசுவின் முன்னாள் வருங்கால மனைவி
  • நீலகண்ட் சூரியவன்ஷியாக பங்கஜ் ஜா, ரிங்குவின் மாமா மற்றும் மஞ்சரியின் சகோதரர்
  • அமர்கந்த் சூரியவன்ஷியாக அசோக் பந்தியா, ரிங்குவின் இரண்டாவது மாமா மற்றும் மஞ்சரியின் இரண்டாவது சகோதரர்
  • விஜய் குமார் மாடடினாக
  • டப்லுவாக அனில் குரோவர்
  • பார்தி கோலா, ராஜ்நந்தினி சூரியவன்ஷி, நீலகண்டின் மனைவி
  • விசுவின் தந்தை எஸ்.ரந்தேஷ் பிரிஜ்நாத் ஐயராக ஆனந்த் பாபு
  • விசுவின் அம்மாவாக பிந்திரா ஐயராக நித்யா ரவீந்திரன்
  • மாண்டியின் தந்தை ரமேஷ் சென்குப்தாவாக ஜி.மாரிமுத்து
  • மாண்டியின் தாயார் இந்து சென்குப்தாவாக ஜெயா சுவாமிநாதன்
  • விவாகரத்து வழக்கறிஞராக கோபால் தத்

மேற்கோள்கள்

தொகு
  1. "Aanand L Rai on Sara Ali Khan's age gap with Atrangi Re co-stars Akshay Kumar-Dhanush: 'We have habit of judging people'". Hindustan Times. 25 November 2021. Archived from the original on 23 December 2021. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
  2. "Tamil title of Dhanush's Bollywood film 'Atrangi Re' revealed - Tamil News". IndiaGlitz.com. 21 November 2021. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  3. Kumar, Anuj (24 December 2021). "'Atrangi Re' movie review: Even Dhanush can't save this weird take on love" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/movies/atrangi-re-movie-review-even-dhanush-cant-save-this-weird-take-on-love/article38028562.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ராங்கி_ரே&oldid=4118558" இலிருந்து மீள்விக்கப்பட்டது