அக்சய் குமார்
அக்சய் அரிஓம் பாட்டியா (Akshay Hariom Bhatia) [1] (பிறப்பு ராஜீவ் அரிஓம் பாட்டியா ; 9 செப்டம்பர் 1967), [2] தொழில் ரீதியாக அக்சய் குமார் பாலிவுட்டில் பணிபுரியும் இந்திய நடிகரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். 30 ஆண்டுகளுக்கும் மேலான நடித்துவரும் இவர், 100 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார். இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இவர் 2009 இல் இந்திய அரசிடமிருந்து இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீவிருதினைப் பெற்றார். குமார் இந்தியத் திரைப்படத்துறையில் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவர். [3] [4] அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் 2015 முதல் 2020 வரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல்களில் இவரை சேர்த்துள்ளது [5] [6] 2019 மற்றும் 2020 க்கு இடையில், இரண்டு பட்டியல்களிலும் இவர் மட்டுமே இந்தியராக இருந்தார். [7] [8] [9]
அக்சய் குமார் | |
---|---|
2013இல் அக்சய் குமார் | |
பிறப்பு | ராஜீவ் அரிஓம் பாட்டியா 9 செப்டம்பர் 1967 தில்லி, இந்தியா |
குடியுரிமை |
|
கல்வி | தான் போஸ்கோ உயர்நிலைப் பள்ளி, மாதுங்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1991–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | டுவிங்கிள் கன்னா (தி. 2001) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் |
|
கையொப்பம் |
திரை வாழ்க்கை
தொகுகுமார் தனது வாழ்க்கையை 1991 இல் சவுகந்த் என்ற திரைப்படத்துடன் தொடங்கினார். ஒரு வருடம் கழித்து கிலாடி என்ற அதிரடி படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார். இந்தத் திரைப்படம் 1990 களில் இவரை ஒரு அதிரடி நட்சத்திரமாக நிலைநிறுத்தியது. மொஹ்ரா (1994) மற்றும் ஜான்வர் (1999) போன்ற பிற அதிரடித் திரைப்படங்களுக்கு மேலதிகமாக, கிலாடி திரைப்படம் பல தொடர் திரைப்படங்களுக்கு வழிவகுத்தது. யே தில்லாகி (1994) என்ற இவரது ஆரம்பகால காதல் திரைப்படம் நேர்மறையான வரவேற்பைப் பெற்றாலும், அடுத்த பத்தாண்டுகளில் தனது பாத்திரங்களின் வரம்பை விரிவுபடுத்தினார். காதல் படங்களான தட்கன் (2000), அந்தாஸ் (2003), நமஸ்தே லண்டன் (2007), மற்றும் ஹேரா பெரி (2000), முஜ்சே ஷாதி கரோகி (2004), பிர் ஹேரா பெரி (2006), ஃபிர் ஹேரா பெரி (2000 ), பூல் புலையா (2007), மற்றும் சிங் இஸ் கிங் (2008) உள்ளிட்ட பல படங்களில் தனது நகைசுவை நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்றார். அஜ்னபீ (2001) திரைப்படத்தில் எதிர்மறையான பாத்திரம் மற்றும் கரம் மசாலா (2005) திரைப்படத்தில் நகைச்சுவை நடிப்பிற்காக பிலிம்பேர் விருதுகளை வென்றார்.
ரஸ்டோம் (2016) படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[10][11][12] இவர் சுயமாகத் தயாரித்த சமூகத் திரைப்படங்களான டாய்லெட்: ஏக் பிரேம் கதா (2017) மற்றும் பேட் மேன் (2018), அத்துடன் போர்த் திரைப்படமான கேசரி (2019) ஆகியவற்றிற்காக மேலும் பாராட்டயும் பெற்றார். மேலும் 2019 இல் வெளியான மிஷன் மங்கள், ஹவுஸ்ஃபுல் 4, குட் நியூஸ், மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் திரைப்படம் சூரியவன்ஷி .ஆகிய படங்கள் திரையரங்க வசூலில் சாதனைகளைப் படைத்தது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி
தொகுநடிப்பு மட்டுமின்றி, சண்டை நடிகராகவும் குமார் பணியாற்றியுள்ளார். [a] 2008 இல், இவர் ஃபியர் ஃபேக்டர்: காட்ரான் கே கிலாடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் 2014 இல் டேர் 2 டான்ஸ் என்ற உண்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொடங்கினார். மேலும் உலக கபடி லீக்கில் விளையாடும் கல்சா வாரியர்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவார். நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலை பயிற்சி பள்ளிகளையும் நிறுவினார். [14] [15] இந்தியாவின் பரோபகார நடிகர்களில் ஒருவரான குமார், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகிறார். இவர் இந்தியாவில் முன்னணி விளம்பர அங்கீகாரம் பெற்ற பிரபலமாவார். [16]
கனடா குடியுரிமை
தொகு2011 கனடா நடுவண் அரசுத் தேர்தலின் போது அல்லது அதற்குப் பிறகு, கனடா பழமைவாதக் கட்சி அரசாங்கம் குமாருக்கு கனடிய குடியுரிமையை வழங்கியது. [17] 15 ஆகஸ்ட் 2023 அன்று, குமார் இந்தியக் குடியுரிமையை திரும்பப் பெற்றதை உறுதிப்படுத்தினார். மேலும் இந்தியச் சட்டத்தின் ஒரு பகுதியாக கனடிய குடியுரிமை திரும்பப் பெறப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ has often performed stunts in his films, which has earned him the sobriquet "Indian ஜாக்கி சான்".[13]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Akshay Kumar gets Indian citizenship, shares proof on Twitter: 'Dil aur citizenship, dono Hindustani'". 15 August 2023. https://www.hindustantimes.com/entertainment/bollywood/akshay-kumar-gets-indian-citizenship-shares-proof-on-twitter-101692081610166.html.
- ↑ Sparks, Karen Jacobs, ed. (2010). Britannica Book of the Year 2010. சிகாகோ: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Inc. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61535-366-8. இணையக் கணினி நூலக மைய எண் 799040256. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
- ↑ "Akshay Kumar might well be the new king of Bollywood. Here is why". 31 August 2016. http://indianexpress.com/article/entertainment/opinion-entertainment/akshay-kumar-might-well-be-the-new-king-of-bollywood-here-is-why-3005752/.
- ↑ "Akshay Kumar might well be the new king of Bollywood. Here is why". 31 August 2016. http://indianexpress.com/article/entertainment/opinion-entertainment/akshay-kumar-might-well-be-the-new-king-of-bollywood-here-is-why-3005752/.
- ↑ List of highest-paid celebrities by Forbes:
- ↑ List of highest-paid actors by Forbes:
- ↑ "Akshay Kumar Is The Only Indian On Forbes 2020 List Of 100 Highest-Paid Celebs, Just Like Last Year". 5 June 2020. https://www.ndtv.com/entertainment/akshay-kumar-is-the-only-indian-on-forbes-2020-list-of-100-highest-paid-celebs-just-like-last-year-2241085.
- ↑ "Akshay Kumar Is The Only Bollywood Celeb On Forbes List Of 10 Highest Paid Actors". 12 August 2020. https://www.ndtv.com/entertainment/akshay-kumar-is-the-only-bollywood-celeb-on-forbes-list-of-10-highest-paid-actors-2278190.
- ↑ "Akshay Kumar Only Bollywood Star On Forbes List Of Highest-paid Actors". 13 August 2020. https://www.forbesindia.com/article/special/akshay-kumar-only-bollywood-star-on-forbes-list-of-highestpaid-actors/61627/1.
- ↑ "64 th National Film Awards, 2016" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. 7 April 2017. Archived from the original (PDF) on 7 April 2017. பார்க்கப்பட்ட நாள் 7 April 2017.
- ↑ Jha, Subhash K. (7 April 2017). "Akshay Won National Award For 'Rustom' & 'Airlift': Priyadarshan". The Quint இம் மூலத்தில் இருந்து 9 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190209180130/https://www.thequint.com/entertainment/bollywood/akshay-kumar-won-national-award-for-both-rustom-and-airlift-says-priyadarshan.
- ↑ "64th National Film Awards: Akshay Kumar wins Best Actor for Rustom, Shivaay wins Best VFX award" (in en). India Today. 7 April 2017. https://www.indiatoday.in/movies/bollywood/story/akshay-kumar-rustom-national-award-best-actor-shivaay-visual-effects-970040-2017-04-07.
- ↑ "Akshay Kumar meets Jackie Chan in Hong Kong". 20 May 2004 இம் மூலத்தில் இருந்து 10 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081210042549/http://www.bollywoodhungama.com/news/2004/05/20/1112/index.html.
- ↑ "Akshay Kumar to expand his martial arts training centre". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/akshay-kumar-to-expand-his-martial-arts-training-centre/articleshow/52556438.cms.
- ↑ "Akshay Kumar to set up more branches of his training school". 12 April 2015.
- ↑ "Akshay Kumar".
- ↑ Blackwell, Tom (21 May 2019), "Bollywood actor who campaigned for Stephen Harper was granted Canadian citizenship by Conservative government", Nationalpost, National Post, archived from the original on 29 May 2020, பார்க்கப்பட்ட நாள் 29 May 2020,
In the thick of the 2011 federal election, Stephen Harper appeared in the Indo-Canadian heartland of Ontario with a ringer. At a campaign stop in Brampton, Bollywood mega-star Akshay Kumar praised the then prime minister, danced on stage with his wife, Laureen Harper, and thrilled the audience. And at some point, the Harper government invoked a little-known law to grant the actor Canadian citizenship, circumventing the usual, stringent residency requirements for would-be Canadians, says a former Conservative cabinet minister. MP Tony Clement, who as industry minister met with Kumar in Mumbai, says the citizenship grant was just a thank you for the actor's help in promoting Canadian tourism and trade to a huge emerging economy – not a reward for partisan support. 'Basically, he had offered to put that star power to use to advance Canada-India relations, our trade relations, our commercial relations, in the movie sector, in the tourism sector,' said Clement.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அக்சய் குமார்
- Collected news and commentary at The Times of India