டுவிங்கிள் கன்னா

டுவிங்கிள் கன்னா (Twinkle Khanna; 29 டிசம்பர் 1974) இந்தியத்திரைப்பட நடிகையும் உட்புற வடிவமைப்பாளர் ஆவார். இவர் பிலிம்பேர் சிறந்த அறிமுக விருதினை பர்சாத் (1995) என்னும் திரைப்படத்திற்காகப் பெற்றார். இவர் பாலிவுட், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அஜய் தேவ்கான், சைஃப் அலி கான், ஆமிர் கான், சல்மான் கான், சாருக் கான், வெங்கடேஷ் (நடிகர்), கோவிந்தா, அக்‌ஷய் குமார் ஆகிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.

டுவிங்கிள் கன்னா
டுவிங்கிள் கன்னா (2010)
பிறப்புடீனா ஜதின் கன்னா
29 திசம்பர் 1974 (1974-12-29) (அகவை 49)[1]
புனே, மகாராட்டிரம்
மற்ற பெயர்கள்Tina
பணிநடிகை, உட்புற வடிவமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995–2001
பெற்றோர்ராஜேஷ் கன்னா (தந்தை)
டிம்பிள் கபாடியா (தாய்)
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்2
விருதுகள்பிலிம்பேர் சிறந்த அறிமுக விருது

தொழில் வாழ்க்கை

தொகு

பாபி தியோல் ஜோடியாக பர்சாத் (1995) என்னும் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். இந்தப் படம் வசூலில் வெற்றி பெற்றது. அத்துடன் இப்படத்தில் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார். சற்றே மாறுகண் கொண்டிருந்த நிலைக்காக ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்ட கன்னா, பல படங்களில் நடித்து அவற்றிற்காக சிறந்த விமர்சனங்களும், பார்வையாளர்களின் அங்கீகாரமும் பெற்றுள்ளார்.

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் டிம்பிள் கபாடியா, ராஜேஷ் கன்னா என்போரின் மகளாவார். இவர் ரிங்கி கன்னாவின் சகோதரி. இவரது சித்தி சிம்பிள் கபாடியா. டுவிங்கிள் கன்னா ஒரு பஞ்சாபி, குஜராத்திக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் அக்‌ஷய் குமார் என்னும் பாலிவுட் நடிகரின் மனைவியாவார். திருமணம் 2001 இல் இடம்பெற்றது. இவர் தனது திருமணத்திற்குப் பிறகு திரைப்படத் துறையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்; அதன் பிறகு உள் அலங்கார வடிவமைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

திரைப்பட விவரங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இதர குறிப்புகள்
1995 பர்சாத் டினா ஓபராய் பிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகை விருது வென்றார்.
1996 ஜான் காஜல்
1996 தில் தேரா தீவானா கோமல்
1997 உஃப்! ஏ மொஹாப்பத் சோனியா வர்மா
1997 இதிஹாஸ் நாயினா
1997 ஜுல்மி
1998 ஜப் பியார் கிசி ஸே ஹோத்தா ஹை கோமா சின்ஹா
1999 ஏ ஹை மும்பய் மேரி ஜான் ஜாஸ்மின் அரோடா
1999 பாத்ஷா சீமா மல்ஹோத்ரா/ டினா
1999 சீனு டுவிங்கிள் கன்னாவின் ஒரே தெலுங்குப் படம்
2000. மேலா ரூபா
2000. சல் மேரே பாய் பூஜா சிறப்புத் தோற்றம்
2000. ஜோரு கா குலாம் துர்கா
2001 ஜோடி நம்பர் 1 டினா
2001 லவ் கே லியே குச் பீ கரேகா அஞ்சலி மூர்த்தி

உசாத்துணை

தொகு
  1. "Happy Birthday Twinkle Khanna, Sprinkling Stardust @41". என்டிடிவி. 28 December 2015. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Twinkle Khanna
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவிங்கிள்_கன்னா&oldid=2925602" இலிருந்து மீள்விக்கப்பட்டது