திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா
இந்திய திரைப்பட விழாக்களின் இயக்ககம் (Directorate of Film Festivals) என்பது இந்தியாவில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும்[1]. இது இந்திய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் சிறந்த படம், பாடல், நடிப்பு, பாடுபவர், ஒலிப்பதிவு...எனப் பல பிரிவுகளில், இந்தியாவிலேயே உயர்ந்த விருதான தேசிய திரைப்பட விருதுகள் அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செயல்படுத்தும் ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் சர்வதேச திரைப்பட விழா, (இந்தியா) தேசிய திரைப்பட விருதுகள், இந்தியன் பனோரமா ஆகியவையாகும். விருதுகளுக்கான நடுவர் குழு உறுப்பிவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கும் இவ்வமைப்புக்கு, தன்னால் நடத்தப்படும் விழாக்களில். விருதுக்கு பரிசீலனை செய்யப்படும் திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கப்படுவதிலும் இறுதியாக விருதுக்குரியதாக வெற்றிப்படத்தைத் தீர்மானிப்பதிலோ எந்தவொரு பங்கும் கிடையாது.
இந்த இயக்ககம் 1973 இல் இந்திய அரசால் அமைக்கப்பட்டு செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.[1]. இந்திய திரைப்படங்களை வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் பங்கு பெறச் செய்வதற்கும் வெளிநாட்டு திரைப்பட நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடைபெறுவதற்குமான ஏற்பாடுகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Directorate of Film Festivals பரணிடப்பட்டது 2008-06-17 at the வந்தவழி இயந்திரம் Ministry of Information and Broadcasting (India), Govt. of India Official website.