கிச்சா வயசு 16

2005 திரைப்படம்

கிச்சா வயசு 16 (Kicha Vayasu 16) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஏ. என். ராஜகோபால் இயக்கிய இப்படத்தில், சிம்ரன், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜெய் ஆகாஷ், சுஜிபாலா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். நாகர்கோவில் நகரத்தில் உள்ள இளைஞர்களில் ஒருவனான கிச்சா என்ற கதாபாத்திரத்தைச் மையமாக கொண்டதாக இந்த படம் உள்ளது. இப்படத்திற்கு தினா இசையமைத்தார். இந்த படம் 25 மார்ச் 2005 அன்று வெளியிடப்பட்டது. சிங்கப்பூரில் 18 என மதிப்பிடப்பட்டது.

கிச்சா வயசு 16
இயக்கம்ஏ. என். இராஜகோபால்
இசைதினா (இசையமைப்பாளர்)
நடிப்புசிம்ரன்
மணிகண்டன்
ஜெய் ஆகாஷ்
சுஜிபாலா
வெளியீடுமார்ச்சு 25, 2005 (2005-03-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தனது இளமை பருவத்தில் கிச்சா என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி ( ஜெய் ஆகாஷ் ), தான் சிறிவயதில் படித்த பள்ளியை இடிப்பதை அறிந்து, தான் வளர்ந்த நகரமான நாகர்கோயிலுக்குத் திரும்புகிறார் மாவட்ட ஆட்சியராக உள்ள கிருஷ்ணமூர்த்தி. நாகர்கோயிலில் அவரது பள்ளி நாட்களை நினைவுபடுத்துவது படத்தின் முக்கிய கருப்பொருளாக அமைகிறது.

கிச்சா ( மணிகண்டன் ) 16 வயது சிறுவனாக இருக்கும் காலத்திக்கு படம் செல்கிறது. நிர்மலா ( சிம்ரன் ), கிச்சா மீது ஈர்ப்பு கொண்ட ஒரு ஆசிரியை. அவர் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆகிறார். தன்னைச் சுற்றியுள்ளவர்களை அடிக்கடி கிண்டல் செய்யும் கிச்சா, நிர்மலாவிடம் மிகவும் நன்றாக நடந்துகொள்கிறான். இதன் காரணமாக, அவன் ஆசிரியையின் ஆதரவைப் பெறுகிறான். இருப்பினும், கிச்சா தங்கள் ஊரைச் சுற்றி பல்வேறு தவறான செயல்களைச் செய்யும் சிறுவர்களின் குழுவை வழிநடத்தத் தொடங்குகிறான். பள்ளியில் இருந்து உணவுகளை திருடி விற்பனை செய்வது, பணம் செலுத்தாமல் உணவகங்களில் சாப்பிடுவது ஆகியவை இதில் அடங்கும்.

கிச்சாவும் அவனது நண்பர்களும் உணவகத்தில் பணம் செலுத்தாமல் தப்பிக்க முயற்சிக்கும்போது இறுதியாக பிடிபடுகிறார்கள். உணவக உரிமையாளர் அவர்களை நன்றாகத் துவைத்து எடுக்கிறார். சிறுவர்கள் கிச்சாவே இதுபோன்ற காரியங்களைச் செய்யக் கற்றுக்கொடுத்ததாக உரிமையாளருக்குத் தெரிவிக்கிறார்கள். இது குறித்து சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தரப்படுகிறது அப்போது, பலர் கோபமடைந்து, கிச்சா தங்கள் பிள்ளைகளை தவறாக வழிநடத்தியதாகவும், அவர்களை கெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். பின்னர் கிச்சா தனது அண்ணனுடன் மதுரைக்கு சங்கடமாகப் பயணம் போகிறான். இருப்பினும், கிச்சாவின் பள்ளித் தோழர்கள் அவன் இல்லாத நேரத்தில் பள்ளியிலிருந்து திருடி, கிச்சாவே அவ்வாறு செய்ததாக அவன்மீது பழி போடுகின்றனர். கிச்சாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்ட தலைமை ஆசிரியரான நிர்மலா, அவனை மதுரையிலிருந்து விசாரணைக்கு வரவழைக்கிறார். கிச்சா குற்றவாளி என்று நிர்மலா நம்பிய பிறகு, எந்த நல்ல செயலையும் செய்யாததற்காக அவனை சபிக்கிறார். கிச்சா மதுரைக்குத் திரும்பி, வெறியுடன் படித்து, இறுதியில் ஆட்சியராக நாகர்கோயிலுக்குத் திரும்புகிறான்.

நாகர்கோயிலில், கிச்சா நிர்மலாவைப் பார்க்க அவரின் வீட்டிற்குச் செல்கிறான். ஆனால் வெளி நாட்டில் இருப்பதாக தெரியவருகிறது. அவர் ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னை காதலித்து வந்த சுப்பு (சுஜிபாலா) என்பவரை திருமணம் செய்ய கிச்சா திட்டமிட்டுள்ளான். கிச்சா சுப்புவின் வீட்டிற்கு வந்த பிறகு, அவனை மீண்டும் பார்த்து மிகவும் உற்சாகமாக கிச்சாவுடன் புறப்படுகிறாள்.

நிர்மலா ஒரு சிறந்த தலைமை ஆசிரியராக சித்தரிக்கப்படுகிறார்: தேவைப்படும்போது அவர் மாணவர்களிடம் கண்டிப்பாகவும், தேவைப்படும்போது மென்மையாகவும் நடந்துகொள்கிறார்.

நடிகர்கள்

தொகு

வளர்ச்சி

தொகு

இப்படத்தின் தயாரிப்பின் போது, தயாரிப்பாளர்களிடம் தனது கணவர் தீபக் பாகாவை ஜெய் ஆகாஷ் நடிக்கவிருக்கும் பாத்திரத்தில் நடிக்கவைக்குமாறு சிம்ரன் பரிந்துரைத்தார். அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது என்ற போதிலும், தீபக்கிற்கு படத்தில் ஒரு சிறிய வேடம் வழங்கப்பட்டது.[1]

பா. விஜய், சினேகன், யுகபாரதி ஆகியோரால் எழுதப்பட்ட பாடல் வரிகளுக்கு தினா இசையமைத்தார்.[2]

எண். பாடல் பாடகர்கள்
1 "ஆண்களை எனக்கு" சுமித்ரா, தேவ் பிரகாஷ்
2 "கெளம்புது" கார்த்திக், திவ்யா கஸ்தூரி
3 "மொட்டு விட்ட" சுஜாதா, பரவை முனியம்மா
4 "பத்தியப்படி" மாலதி, சங்கர் மகாதேவன்
5 "பூனை முடி" மாணிக்க விநாயகம், அனுராதா ஸ்ரீராம்
6 "சொல்ல முடியல" ஹரிஹரன், சின்மயி
7 "சில நேரம்" உண்ணிமேனன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Simran’s survival tactics!" (in en). Sify இம் மூலத்தில் இருந்து 2014-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140407074614/http://www.sify.com/movies/simrans-survival-tactics-news-tamil-kkfv6Jaiigd.html. 
  2. "Kicha Vayasu 16". raaga. பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிச்சா_வயசு_16&oldid=3838123" இலிருந்து மீள்விக்கப்பட்டது