பரவை முனியம்மா

பரவை முனியம்மா (Paravai Muniyamma, 25 சூன் 1943 - 29 மார்ச் 2020) என்பவர் தமிழ்த் திரைப்பட, நாட்டுப்புறப் பாடகி, மற்றும் நடிகையாவார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள, பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப்பட்டார்.

பரவை முனியம்மா
Paravimuniammal.gif
பிறப்புமுனியம்மா
26 சூன் 1937
பரவை, மதுரை தமிழ்நாடு, இந்தியா
இறப்பு29 மார்ச்சு 2020(2020-03-29) (அகவை 82)

திரைப்படத் துறைதொகு

தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானார்.[1] காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.

இவரது கலைச் சேவையைப் பாராட்டி, தமிழக அரசு, இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

திரைப்படங்கள்தொகு

தொலைக்காட்சித் தொடர்தொகு

கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.[2][1]

பிற நிகழ்ச்சிகள்தொகு

மேடை நிகழ்ச்சிகள் உள்ளூரிலும் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன.[3]

நிதி உதவிதொகு

பரவை முனியம்மாவின் ஏழ்மை மற்றும் இயலாமையையும் கருத்தில் கொண்டு, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, 6 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்ப செலவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்கினார்.[4]

இறப்புதொகு

இவர் மார்ச் 29, 2020 அன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Throaty treat". 2004-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-06-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி) The Hindu
  2. "Paravai Muniyamma is back".
  3. "Cooking up a smile nuggets from aatha". 2009-08-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-06-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி) the Hindu
  4. "மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதி உதவி; ஜெயலலிதா உத்தரவு". தினத்தந்தி
  5. "பரவை முனியம்மா காலமானார்". தினமலர் (மார்ச் 29, 2020)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரவை_முனியம்மா&oldid=3248912" இருந்து மீள்விக்கப்பட்டது