சூப்பர் டா(Super Da) 2004ம் ஆண்டு, அழகு ராஜ சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படம். இதில் ராம்கி, குணால் மற்றும் புதுமுகம் அனுஷா முக்கிய வேடங்களிலும், லிவிங்ஸ்டன், சிந்தூரி, தெலுங்கானா சகுந்தலா, பரவை முனியம்மா, செந்தில், வையாபுரி, மனோரமா மற்றும் அம்பிகா ஆகியோர் துணை கதாபாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இப் படத்தை அனுஷாவின் தாய் பி. சம்பூர்ணம் தயாரித்துள்ளார்.தேவாவின் இசையில் 25 சூன்,2004இல் வெளிவந்தது.[1][2]

சூப்பர் டா
இயக்கம்அழகு ராஜா சுந்தரம்
தயாரிப்புபி. சம்பூரணம்
கதைவி. பிரபாகர் (வசனம்)
திரைக்கதைஅழகு ராஜா சுந்தரம்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. ஜெரால்டு
படத்தொகுப்புமோகன் - சுப்பு
கலையகம்ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பிலிம்ஸ்
வெளியீடுசூன் 25, 2004 (2004-06-25)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

கதிர்வேல் (ராம்கி) தனது நண்பன் சுப்பிரமணி(லிவிங்ஸ்டன்)யுடன் தங்கியிருப்பதற்காக நகரத்திற்கு வருகிறான். ரேஷ்மா (அனுஷா) ஒரு கல்லூரி மாணவி. அவளின் தாயார் கங்கம்மா இதயமற்ற கொடுங்குணம் கொண்டவள். கல்லூரி மாணவனான ராகுல்(குணால்), ரேஷ்மாவை பார்த்தவுடன் காதலிக்கிறான். ரேஷ்மாவும் அவனைக் காதலிக்கிறாள். ஆனால் தன் தாயிடமிருந்து ராகுலைக் காப்பாற்றுவதற்காக அவனைத் தவிர்க்கிறாள். முடிவில் அவன் காதலை ஏற்றுக் கொள்கிறாள். இது கங்கம்மாவிற்கு தெரிந்தவுடன் ராகுலை, கதிர்வேல் மற்றும் சுப்பிரமணியின் முன்னிலையில் அடித்து படுகாயமடையச் செய்கிறாள். கதிர்வேலும் சுப்பிரமணியும் ராகுலை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். ரேஷ்மா சம்பவ இடத்தில் இருந்தும் உதவாத கதிர்வேலைப் பார்த்து இழிவாகப் பேசுகிறாள். கதிர்வேல் தனக்கு நடந்த சோகமான முன்கதையை ரேஷ்மாவிற்கு கூறுகிறான். அதில், கதிர்வேல் ரேஷ்மாவின் சகோதரி மீனாட்சி (சிந்தூரி)யைக் காதலித்ததாகவும், அதனால் கோபமடைந்த அவளின் தாயார் கங்கம்மா தன்னைக் கொல்ல வரும்பொழுது மீனாட்சியால் தடுக்கப்படு உயிர் பிழைத்ததாகவும் கூறுகிறான். மீனாட்சி இறக்கும் தறுவாயில் தன் தாயைக் கொல்லக்கூடாது என உறுதிமொழி வாங்கியதால் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை எனக் கூறுகிறான். ஆனால் ரேஷ்மாவிடம் காதலர்களை சேர்த்து வைப்பதாக உறுதியளிக்கிறான். காதலர்கள் எவ்வாறு ஒன்று சேர்ந்தனர் என்பதுடன் கதை முடிவுக்கு வருகிறது.

நடிப்பு தொகு

கதிர்வேல் - ராம்கி
ராகுல் - குணால்
ரேஷ்மா - அனுஷா
சுப்பிரமணி - லிவிங்ஸ்டன்
மீனாட்சி - சிந்தூரி
கங்கம்மா - தெலுங்கானா சகுந்தலா
முனியம்மா - பரவை முனியம்மா
செந்தில்
வையாபுரி
மனோரமா
அம்பிகா
அனுராதா
மீரா கிருஷ்ணன் - சகீலா
சரசு - சர்மிளி
அபிநயஸ்ரீ
பொன்னம்பலம்
பாலு ஆனந்த்
அனு மோகன்
உதய் பிரகாஷ்
மருத்துவர் - கே. பாபு
தபால் காரர் - வி. எஸ். பாலமுருகன்
திருமண தரகர் - சி. ஜெ. முத்துக்குமார்
பாம்பாட்டி - அழகு ராஜ சுந்தரம்
கௌரவ வேடம் - அரவிந்து ஆகாசு

பாடல்கள் தொகு

இப் படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். இப் படத்தின் 5 பாடல்களை காளிதாசன், பிறைசூடன், கலை குமார், தொல்காப்பியன்,மற்றும் விக்டர்தாஸ் போன்றோர் எழுதியுள்ளனர். பாடல்கள் மே 21, 2004இல் வெளியிடப்பட்டது.[3]

எண் பாடல் பாடியவர்கள் எழுதியவர் காலம்
1 'கோயம்பேடு' அனுராதா ஸ்ரீராம், மாணிக்க விநாயகம் காளிதாசன் 5:11
2 'இடுப்பு மடிப்பு' மாதங்கி ஜெகதீஷ், திப்பு பிறைசூடன் (கவிஞர்) 4:32
3 'இச்சு தா' சங்கர் மகாதேவன், மாலதி லட்சுமணன் விக்டர்தாஸ் 4:13
4 'எங்கப்பாவுக்கு' மாலதி லக்‌ஷ்மன் தொல்காப்பியன் 5:19
5 'துளசி செடியோரம்' அனுராதா ஸ்ரீராம் கலை குமார் 5:20

மேற்கோள்கள் தொகு

  1. "Superda (2004)". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.
  2. "Behindwoods : Actress Anu persists". behindwoods.com. 2005-04-04. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.
  3. "Superda Songs". play.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்பர்_டா&oldid=3660069" இலிருந்து மீள்விக்கப்பட்டது