அனுராதா

இந்திய நடிகை

அனுராதா (Anuradha) என்று திரையுலகு பெயரைக் கொண்ட சுலோச்சனா ஓர் இந்திய திரைப்பட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் முக்கியமாக 1980 கள் மற்றும் 1990 களில் தீவிரமாக நடித்து வந்தார். இவர் குறிப்பாக கவர்ச்சி நடனங்களில் ஆடியதற்கு பெயர் பெற்றவர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஒடியா- மொழி படங்களில் நடித்துள்ளார்.

அனுராதா
பிறப்புசுலோச்சனா
12 அக்டோபர் 1963 (1963-10-12) (அகவை 60)
இந்தியா தமிழ்நாடு
செயற்பாட்டுக்
காலம்
1976–1997
2002–2004
2009–தற்போது வரை
பெற்றோர்கிருஷ்ண குமார், சரோஜா
வாழ்க்கைத்
துணை
சத்தீஷ்குமார்
(1987-2007)
(அவர் இறக்கும் வரை)
பிள்ளைகள்அபிநயசிறீ (பி.1988)
காளிச்சரண் (பி.1991)

தொழில்

தொகு

சுலோச்சனாவை 13 வயதில் இயக்குனர் கே. ஜி. ஜார்ஜ் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். அந்த வயதில் கூட இவர் மிகவும் உயரமாக இருந்தார். அவர் இவருக்கு அனுராதா என்ற பெயரைக் கொடுத்தார். அந்த நேரத்தில் இவர் மிக உயரமான நடிகையாக இருந்தார். சிவப்பு மல்லி படத்தில் கதாநாயகியாக தமிழில் தெரியவந்தார். இவர் ஒரு கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார், சுமார் 30 படங்களுக்கு மேல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் இந்தப்படங்களில் பெருமாலாலானவை வெற்றியை ஈட்டவில்லை. பின்னர் கவர்ச்சி நடனமாடத் தொடங்கினார். அனுராதா 700 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இவரது அவரது சக நடிகர்கள், நாயகர்களில் பெரும்பாலோர் இவரை விட மிகக் குறைவாக உயரம் கொண்டவர்களாக இருந்தபோதும் இவர் இத்ததைனப் படங்களில் நடித்தது ஒரு பெரிய சாதனையாகும். இவர் தற்காப்புக் கலைகளில் பயிற்சிபெற்றவர். மேலும் இவர் தனது சண்டைக் காட்சிகளில் எந்தவிதமான மாற்று நடிகரையும் வைக்காமல் இவரே நடித்துள்ளார். இவர் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டுவதில் திறமை பெற்றவர், ஜாவா, என்ஃபீல்ட் புல்லட் மற்றும் பிற மோட்டார் வணிடிகளை ஓட்டியவர்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் நடன இயக்குநரான கிருஷ்ணா குமாருக்கும், திரைப்பட நடிகைகளுக்கான சிகையலங்கார நிபுணராக இருந்த சரோஜாவுக்கும் பிறந்தார். இவரது தந்தை மராத்தியர், தாய் ஆந்திராவைச் சேர்ந்தவர்.[1] நடன இயக்குனராக இருந்த சதீஷ்குமாரை 1987 ஆம் ஆண்டில் அனுராதா திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு அபிநயசிறீ மற்றும் காளிச்சரன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அபிநயஸ்ரீ ஒரு நடிகையாக உள்ளார். அனுராதாவின் கணவர் 1999 நவம்பர் 7 அன்று ஒரு இருசக்கர மோட்டார் வண்டி விபத்தில் சிக்கினார். இது அவரது மூளைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் 2007 இல் மாரடைப்பால் இறந்தார்.[2]

பகுதி திரைப்படவியல்

தொகு

தமிழ்

தொகு

 

 1. கெத்து (2016)
 2. சூப்பர் டா (2004)
 3. வின்னர் (2003)
 4. இவன் (2002)
 5. தேடினேன் வந்தது (1997)
 6. தினமும் என்னை கவனி (1997)
 7. த டெரரிஸ்ட் (1997)
 8. ராஜாளி (1996)
 9. சின்ன மணி (திரைப்படம்) (1995)
 10. பொன்மாலைப் பொழுது (1993)
 11. சத்தியம் அது நிச்சயம் (1992)
 12. வணக்கம் வாத்தியாரே (1991)
 13. புது மாப்பிள்ளை (1989)
 14. சங்கு புஷ்பங்கள் (1989)
 15. ரெட்டை குழல் துப்பாக்கி (1989)
 16. தென்றல் புயலானது (1989)
 17. வீர பாண்டியன் (1987)
 18. ராஜ மரியாதை (1987)
 19. மக்கள் என் பக்கம் (1987)
 20. அஞ்சாத சிங்கம் (1987)
 21. தங்கச்சி (1987)
 22. கல்யாணக் கச்சேரி (1987)
 23. தழுவாத கைகள் (1986)
 24. மீண்டும் பல்லவி (1986)
 25. எனக்கு நானே நீதிபதி (1986)
 26. கைதியின் தீர்ப்பு (1986)
 27. கைதி ராணி (1986)
 28. மகாசக்தி மாரியம்மன் (1986)
 29. விடுதலை (1986)
 30. ஜீவநதி (1986)
 31. கோயில் யானை (1986)
 32. ஹேமாவின் காதலர்கள் (1985)
 33. ஏமாற்றாதே ஏமாறாதே (1985)
 34. மாயாவி (1985)
 35. சாவி (1985)
 36. அர்த்தமுள்ள ஆசைகள் (1985)
 37. நவக்கிரக நாயகி (1985)
 38. பணம் பத்தும் செய்யும் (1985)
 39. அந்த ஒரு நிமிடம் (1985)
 40. விஷக் கன்னி (1985)
 41. எங்கள் குரல் (1985)
 42. கருப்பு சட்டைக்காரன் (1985)
 43. உனக்காக ஒரு ரோஜா (1985)
 44. நேர்மை (1985)
 45. வீட்டுக்காரி (1985)
 46. படிக்காத பண்ணையார் (1985)
 47. சிதம்பர ரகசியம் (1985)
 48. இராமன் ஸ்ரீராமன் (1985)
 49. சிவப்பு நிலா (1985)
 50. உன்னைத் தேடி வருவேன் (1985)
 51. செயின் ஜெயபால் (1985)
 52. புது யுகம் (1985)
 53. நாகம் (1985)
 54. நல்ல தம்பி (1985)
 55. கல்யாணம் ஒரு கால்கட்டு (1985)
 56. ராஜாத்தி ரோஜாக்கிளி (1985)
 57. அலை ஓசை (1985)
 58. வேசம் (1985)
 59. ஜனவரி 1 (1984)
 60. உரிமை தேடும் உறவு (1984)
 61. பேய் வீடு (1984)
 62. நியாயம் (1984)
 63. சிறை (1984)
 64. கடமை (1984)
 65. இது எங்க பூமி (1984)
 66. வாய்ச்சொல்லில் வீரனடி (1984)
 67. நாளை உனது நாள் (1984)
 68. நன்றி (1984)
 69. எழுதாத சட்டங்கள் (1984)
 70. நிரபராதி (1984)
 71. சபாஷ் (1984)
 72. புயல் கடந்த பூமி (1984)
 73. குழந்தை ஏசு (1984)
 74. மாறுபட்ட கோணங்கள் (1984)
 75. நூறாவது நாள் (1984)
 76. ராஜா வீட்டு கண்ணுக்குட்டி (1984)
 77. வெற்றி (1984)
 78. ஆத்தோர ஆத்தா (1984)
 79. 24 மணி நேரம் (1984)
 80. விதி (1984)
 81. தீர்ப்பு என் கையில் (1984)
 82. பிரியமுடன் பிரபு (1984)
 83. மெட்ராஸ் வாத்தியார் (1984)
 84. மதுரை சூரன் (1984)
 85. இளமை காலங்கள் (1983)
 86. முத்து எங்கள் சொத்து (1983)
 87. மெல்லப் பேசுங்கள் (1983)
 88. சீறும் சிங்கங்கள் (1983)
 89. ஒரு ஓடை நதியாகிறது (1983)
 90. தலைமகன் (1983)
 91. இளைய பிறவிகள் (1983)
 92. தங்க மகன் (1983)
 93. அழகிய லைலா (1982)
 94. மாறுபட்ட கோணங்கள் (1982)
 95. நான் குடித்துக்கொண்டே இருப்பேன் (1982)
 96. மோகனப் புன்னகை (1981)
 97. சத்ய சுந்தரம் (1981)
 98. சிவப்பு மல்லி (1981)
 99. குழந்தையைத்தேடி (1979)
 100. பொன்னு ஊருக்கு புதுசு (1979)
 101. காளி கோயில் கபாலி (1979)

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தொடர் பாத்திரம் அலைவரிசை
2009–2013 தங்கம் முத்தரசி சன் டிவி
2011–2014 முத்தாரம் சாண்டியின் தாய்
2013–2016,2018 தெய்வமகள் அன்னபூர்ணி
2017 கங்கை அலங்கர நாச்சியார்
2017–2019 நெஞ்சம் மறப்பத்திலை அகிலாண்டேஸ்வரி விஜய் தொலைக்காட்சி
2017–2018 கல்யாணப்பரிசு ராஜலட்சுமி சன் தொலைக்காட்சி
2019 - தற்போது வரை அக்னி நட்ச்சத்திரம் கங்காதேவி

குரல் கலைஞர்

தொகு

சிட்டிசன் படத்தில் நக்மாவுக்காக

குறிப்புகள்

தொகு
 1. "Virundhinar Pakkam | Actress Anuradha". www.sunnetwork.in. பார்க்கப்பட்ட நாள் 25 February 2014.
 2. "Interview Anuradha - YouTube". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா&oldid=3946446" இலிருந்து மீள்விக்கப்பட்டது