நன்றி (திரைப்படம்)
நன்றி (Nandri) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் திரைக்கதையை அபையா நாயுடு எழுதினார். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார். இதில் கார்த்திக், அர்ஜுன் சர்ஜா , நளினி , மஹாலட்சுமி மற்றும் சங்கிலி முருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவுனி (நாய்) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது. அர்ஜுன் சர்ஜா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஹிட் கன்னட திரைப்படமான தாலியா பாக்யாவின் மறுஆக்கமாகும்.[1]
நன்றி | |
---|---|
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | ஏ. வி. எம். ராஜன் ராஜ் மகால் இண்டெர்நேஷனல் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கார்த்திக் நளினி |
வெளியீடு | ஆகத்து 17, 1984 |
நீளம் | 3986 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கார்த்திக் - அதிகாரி சங்கர்
- அர்ஜுன் சர்ஜா- முருகன் (ஊமை மனிதன்)
- நளினி - லட்சுமி, (சத்தியநாதனின் மருமகள்)
- மகாலட்சுமி- பள்ளி ஆசிரியராக சரதா
- சங்கிலி முருகன் - கிராமத் தலைவர் சத்தியநாதன்
- எஸ். எஸ். சந்திரன் - புண்ணியகோடி
- ஏ. வி. எம். ராஜன் - டி. ஐ. ஜி.
- பிரவுனி- ராஜா (நாய்)- ஷங்கரின் செல்லமாக
- எம்.ஆர் கே- தர்மலிங்கம்
- பீலி சிவம் - ஆய்வாளர்
- மாஸ்டர் விமல்- ராமு
- சங்கர் கணேஷ் - (விருந்தினர் தோற்றம்)
- செந்தில் - விருந்தினர் தோற்றம்
- அனுராதா - விருந்தினர் தோற்றம்
பாடல்கள்
தொகுஇசை சங்கர் கணேஷ் மற்றும் பாடல் வரிகள் வாலி எழுதியது .
எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் (நிமிடங்கள்:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "நான் தான் ருக்குமணி" | எஸ். பி. சைலஜா | வாலி | 04:05 |
2 | "வா வா என் தலைவன்" | பி. ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் | 04:21 | |
3 | "தாய் செய்த பாவம்" | பி. சுசீலா | 04:41 | |
4 | "மதுரை நகரினிலே" | ராஜூ ஜெயராம், வாணி ஜெயராம் | 04:54 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nandri". spicyonion. Archived from the original on 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.