ராஜாத்தி ரோஜாக்கிளி

தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராஜாத்தி ரோஜாக்கிளி, இயக்குநர் எஸ்.தேவராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், சுலோக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-சனவரி-1985.

ராஜாத்தி ரோஜாக்கிளி
இயக்கம்எஸ். தேவராஜன்
தயாரிப்புராமபாண்டியன்
கதைவிஜய் கிருஷ்ணராஜ் என்கிற ஆர். கிருஷ்ணன் (உரையாடல்)
இசைசந்திரபோஸ்
நடிப்புராஜேஷ்
சுலோக்ஷனா
கவுண்டமணி
சுரேஷ்
மனோரமா
நளினி
ஒளிப்பதிவுஏ. சோமசுந்தரம்
படத்தொகுப்புதேவன்
வெளியீடுசனவரி 12, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேய்ப்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வில்லன் சொத்துக்களுக்காக அவருடைய சொந்த மாமாவையே கொல்கிறார். அவரது மாமாவின் மகன் வில்லன் செய்த கொடுமைக்கு எதிராகப் போராடுகிறார். ஆனால் வில்லன் அவரையும் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் அவரை அடக்கம் செய்து விடுகிறான். அவருடைய ஆவி பழிவாங்க வருகிறது. ஆவியால் வில்லனைப் பழிவாங்க முடிந்ததா என்று செல்லும் கதை.

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=rajathi%20rojakili பரணிடப்பட்டது 2012-10-03 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாத்தி_ரோஜாக்கிளி&oldid=4160162" இலிருந்து மீள்விக்கப்பட்டது