கோயில் யானை

கோவில் யானைகள் (Temple elephant) என்பவை பிடித்து வளர்க்கபட்ட யானை வகை ஆகும். பல பெரிய கோவில்களில் யானைகள் உள்ளன. யானைகள் இல்லாத கோயில்கள் பண்டிகை காலங்களில் யானைகளை வாடகைக்கு அமர்த்துகிறன. அல்லது தானமாக பெறுகின்றன. கோயில் யானைகள் பொதுவாக வன விலங்குகள் ஆகும். அவை வடகிழக்கு இந்திய காடுகளில் இருந்து குட்டிகளாக இருக்கும்போதே அவற்றின் கூட்டங்களில் இருந்து பிடிக்கபட்டு பின்னர் கோயில்களுக்கு விற்கப்படுகின்றன. அவை சிறைப்பிடிக்கப்படும் விதம் சிலரால் சர்ச்சைகளுக்கும் கண்டனத்திற்கும் உட்படுத்தப்படுகிறது. [1] சிலர் இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் நடக்கும் பல கோயில் விழாக்கள் மற்றும் திருவிழாக்களின் சமூக-பொருளாதார கட்டமைப்பில் யானைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்று கூறுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள கோவில் யானையை கழுவும் பாகன்.

இந்தியாவின் மிகப்பெரிய யானைப் பண்ணை குருவாயூர் கோயிலைச் சேர்ந்த புன்னத்தூர் கோட்டை ஆகும்; இங்கு சுமார் 59 சிறைபிடிக்கப்பட்ட யானைகள் இருந்தன; தற்போது 58 சிறைபிடிக்கப்பட்ட யானைகள் உள்ளன, அவற்றில் 53 வயது வந்த ஆண்கள் மற்றும் 5 பெண் யானைகள்.

புத்துணர்வு முகாம் தொகு

தென்னிந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் வாய்ப்பளிக்கின்ற ஏற்பாடாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் 2003ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த முகாம்களின்போது யானைகள் புத்துணர்வு பெறும் வகையில் கோயில்களில் இருந்து இயற்கை சூழல் வாய்ந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிலகாலம் வைத்து பராமரிக்கப்படுகின்றன.[2]

படக்காட்சியகத்தில் யானைகள் தொகு

மேலும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

 

வெளி இணைப்புகள் தொகு

  • கோவில் யானைகள் வீடியோ திருவண்ணாமலை, ஸ்ரீ ரங்கம் மற்றும் பிற இடங்களில் இருந்து யானைகளின் குறுகிய குயிக்டைம் வீடியோ.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயில்_யானை&oldid=3320830" இலிருந்து மீள்விக்கப்பட்டது