தழுவாத கைகள்
1986 ஆண்டைய ஆர் சுந்தர்ராஜனின் திரைப்படம்
தழுவாத கைகள் (Thazhuvatha Kaigal) என்பது 1986 ஆண்டைய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இதை ஆர். சுந்தர்ராஜன் இயக்க, ஜி சொர்ணாம்பாள், ஆர். கணபதி, இளங்கோ ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் விசயகாந்து, அம்பிகா, செந்தில், அனுராதா ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.[1]
தழுவாத கைகள் | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | ஜி.சொர்ணம்பாள் ஆர். கணபதி இளங்கோ பழனிசாமி |
கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விசயகாந்து அம்பிகா அனுராதா |
ஒளிப்பதிவு | இராஜராஜன் |
படத்தொகுப்பு | சீனிவாஸ் கிருஷ்ணா |
கலையகம் | சொர்ணாம்பிக்கா மூவிஸ் |
வெளியீடு | 1 நவம்பர் 1986 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- விசயகாந்து
- அம்பிகா
- செந்தில்
- அனுராதா
- ஜெய்கணேஷ் விருந்தினர் தோற்றத்தில்
- ராஜீவ் விருந்தினர் தோற்றத்தில்
- குலதெய்வம் ராஜகோபால்
- வி. கோபாலகிருட்டிணன்
- பசி நாராயணன்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- உசிலைமணி
- மொட்டை சீதாராமன்
- முருகேஷ்
- ஜோக்கர் துளசி
- சார்லி
- ஓமக்குச்சி நரசிம்மன்
- குட்டி பத்மினி
- இந்திரா
- சிறீஜெயா
இசை தொகு
இபடத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2]
எண். | பாடல் | பாடகர் | வரிகள் | நீளம் (நிமி) |
---|---|---|---|---|
1 | "குடும்பத்தை உருவாக்க" | எஸ். பி. சைலஜா, உமா ரமணன், பி. எஸ். சசிரேகா | வாலி | 04:34 |
2 | "ஒன்னா ரெண்டா" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | வாலி | 04:25 |
3 | "பூங்குயில்" | எஸ். ஜானகி | வாலி | 04:25 |
4 | "தொட்டுப் பாரு" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04:17 |
5 | "விழியே" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04:27 |
6 | "நானோரு" | உமா ரமணன், சசிரேகா | வாலி | 04:30 |
வரவேற்பு தொகு
1986, நவம்பர், முதல் நாளன்று தழுவாத கைகள் வெளியானது.[3] படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.