ஐ. எஸ். முருகேசன்

இந்திய நடிகர்

ஐ. எஸ். முருகேசன் (சனவரி 3,1930 - நவம்பர் 8, 2014) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக மீசை முருகேசன் என அறியப்பட்டவர். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். தவில் கலைஞராக இருந்த அவர் மோர்சிங் இசைப்பதிலும் வல்லவர். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.[2]

மீசை முருகேசன்
பிறப்புசனவரி 3, 1930(1930-01-03) [1]
இடிகரை, கோயம்புத்தூர், தமிழ்நாடு
இறப்புநவம்பர் 8, 2014(2014-11-08) (அகவை 84)
சென்னை
பணிநடிகர், இசைக் கலைஞர்
பெற்றோர்சுப்பிரமணிய முதலியார், பொன்னம்மாள்
வாழ்க்கைத்
துணை
கண்ணம்மா
பிள்ளைகள்சரசுவதி, செல்வி, ஜோதிகுமார், நாகராஜா

இசைத் துறைப் பங்களிப்புகள்தொகு

சிறந்த இசைக்கலைஞரான இவர், கொட்டாங்குச்சியில் வாசிப்பதில் பிரபலமானவர். கடசங்கரி, முங்கோஸ், கொட்டாங்குச்சி போன்ற சில இசைக்கருவிகளை இவர் உருவாக்கி உள்ளார்; அபூர்வ தாளவாத்தியங்கள் என்ற பெயரில் உலகின் பல பகுதிகளில் இசைக்கச்சேரி நடத்தி உள்ளார்.[3]

திரைத் துறைப் பங்களிப்புகள்தொகு

கோயம்புத்தூர் இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு சுகமான ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.[4] தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நூற்றுக்கும் கூடுதலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆண்பாவம், பூவே உனக்காக, உன்னால் முடியும் தம்பி, உயிரே உனக்காக, பூவே உனக்காக, பிரிவோம் சந்திப்போம், அமைதிப் படை, ஊமை விழிகள் திரைப்படங்களில் புகழ் பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களுடன் மீசை முருகேசன் பணிபுரிந்துள்ளார்[5].

மறைவுதொகு

தமது 85 ஆவது அகவையில் உடல்நலக்குறைவால் நவம்பர் 8, 2014 அன்று மரணமடைந்தார். இவருக்கு கண்ணம்மா என்ற மனைவியும் சரசுவதி, செல்வி என்ற மகள்களும் ஜோதிகுமார், நாகராஜா என்ற மகன்களும் உள்ளனர்[3].

மேற்கோள்கள்தொகு

  1. "நடிகரும் இசைக்கலைஞருமான மீசை முருகேசன் காலமானார்". தினமலர். 10 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன் மரணம்". filmibeat தமிழ் வலைத்தளம். 9 நவம்பர் 2014. 9 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "நடிகர் மீசை முருகேசன் மரணம்". தினகரன். 9 நவம்பர் 2014. 2021-01-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "நடிகர் மீசை முருகேசன் காலமானார்". தினமணி. 9 நவம்பர் 2014. 9 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "நடிகர் மீசை முருகேசன் உடல் நலக்குறைவால் காலமானார்". தினமணி. 9 நவம்பர் 2014. 9 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

மீசை முருகேஷ் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._எஸ்._முருகேசன்&oldid=3724604" இருந்து மீள்விக்கப்பட்டது