பிரிவோம் சந்திப்போம்

கரு பழனியப்பன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பிரிவோம் சந்திப்போம் கரு பழனியப்பன் இயக்கத்தில் சேரன், சினேகா முக்கிய வேடங்களில் நடிக்க 2008 ஆம் ஆண்டு ஜனவரி 14 வெளியான தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடியில் உள்ள நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தின் கூட்டுக் குடும்பம் ஒன்றில் புதிதாக மணமானவர் இருவரின் கதையை இப்படம் சித்திரிக்கிறது.[1][2]

பிரிவோம் சந்திப்போம்
இயக்கம்கரு பழனியப்பன்
இசைவித்யாசாகர்
நடிப்புசேரன்
சினேகா
வெளியீடுஜனவரி 14, 2008
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

இக்கதை சாலாவைச்(சினேகா) சுற்றி பின்னப்பட்டுள்ளது. தனது வீட்டில் ஒரே பிள்ளையான சாலா பட்டப்படிப்பை முடித்து கூட்டுக்குடும்பம் ஒன்றில் வசிக்கும் ஒருவரை மணக்கிறார். கூட்டுக்குடும்பத்தில் இருந்துவிட்டு தனிக்குடித்தனம் போகும் சாலாவை தனிமை வாட்டுகிறது. இத்தனிமையைப் பயன்படுத்தி இயக்குனர் தமிழர் வாழ்வு முறைப்பற்றி விளக்குகிறார்.

வெளியிணைப்பு தொகு

மேற்கோள்கள் தொகு