நாட்டுக்கோட்டை நகரத்தார்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டை செட்டியார் என்று அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில் முற்பட்ட சாதியினர் பிரிவில் உள்ளனர்.[1] இவர்கள் நகரத்தார் என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சுற்றியுள்ள 76 ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்ட வணிகச் சமுதாயத்தினரான இவர்கள் வாழும் இந்தப் பகுதி செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது.
தனவைசியர், நாட்டுக்கோட்டை நகரத்தார், நாட்டுக்கோட்டை செட்டியார் | |
---|---|
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு (இந்தியா), சிங்கப்பூர், மலேசியா | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தமிழர் |
நகரத்தார்கள் வாணிபம் மட்டுமல்லாது சைவ சமயத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். இச்சமுதாயத்தினரின் பெரும்பங்கினால் இன்று ஆசியா முழுவதும் இந்துக் கடவுளான முருகனின் கோயில்களை நம்மால் காணமுடியும். இச்சாதியினரின் திருமணங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவர்கள் சமையலில் தங்களுக்கென்று ஒரு தனி இடம் பிடித்தவர்கள். நகரத்தார்களின் வீடுகள் மிகப் பிரம்மாண்டமானவை, இவ்வீீீடுகள் செட்டிநாட்டு வீடுகள் என்று அழைக்கப்படுகிறது
வரலாறு
தொகுசோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே இம்மக்களின் பூர்வீகம் ஆகும். திசையாயிரத்து ஐநூற்றுவர், நானாதேசிகள் எனப்பல்வேறு வணிகக்குழுவின் பெயரால் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறார்கள் பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் 96 ஊர்கள் 76 ஊராக மாறியது பாண்டிய மன்னனால் 9 சிவன் கோயில்கள் நகரத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அக்கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள் உருவாக்கப்பட்டன. நகரத்தார்களில் ஒரே கோவிலைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். ஆகவே திருமண உறவுகள் ஒரே கோயிலைச் சார்ந்தவர்களுக்குள் கிடையாது.
செட்டிநாடு என்று சொல் வழக்கில் இந்த 76 கிராமங்கள் அமைந்த பகுதி தனித்த கட்டிடக் கலையையும், பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் ஆலைத்தொழில், மருந்து வணிகம், தாள் வணிகம் முதலான பெரும் வணிகங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள்.
உறவுமுறைப் பெயர்கள்
தொகுஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும், மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப் பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள் என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.
பார்க்க முதன்மைக் கட்டுரை: நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்
தொழில்துறை வளர்ச்சி
தொகுஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
1950ல் தமிழ்நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய நிறுவனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப்பயிற்சியாகும்.
ஒன்பது நகரக் கோயில்கள்
தொகு- இளையாற்றங்குடி கோயில்
- மாத்தூர் கோயில்
- வைரவன் கோயில்
- இரணிகோயில்
- பிள்ளையார்பட்டி[2]
- நேமங்கோயில்
- இலுப்பைக்குடி
- சூரக்குடி
- வேலங்குடி[3]
இந்த ஒன்பது கோயில்களும் நகரக் கோயில் என்று அழைக்கப்படும். இவை பாண்டியனால் நகரத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய அளவில் சுட்டசெங்கலால் ஆன கோயிலாக இருந்து வந்துள்ளது. பின்னர் நகரத்தாரால் பெரிய கற்றளி கோயிலாக கட்டப்பட்டுள்ளது.
ஒரு கோயிலை சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இக்கோயிற்களுள் சிலவற்றில் உட்பிரிவுகளும் உண்டு. அவை, இளையாற்றங்குடி கோயில் : ஒக்கூருடையார், பட்டணசாமியார், பெருமருதூருடையார், கழனி வாசல்குடியார், கிங்கிணிக்கூருடையார், பேரசெந்தூருடையர், சிறுசெந்தூருடையர். மாத்துர் கோயில் : உறையூர், அரும்பாக்கூர், கண்ணூர், கருப்பூர், குளத்தூர், மண்ணூர், மணலூர். வைரவன் கோயில்: பெரிய வகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்யானர் வகுப்பு.
நகரத்தார் சமுதாய ஊர்கள்
தொகுநாட்டுக்கோட்டை நகரத்தார் வாழும் 76 ஊர்கள்(ஒரு காலத்தில் 96 ஊராக இருந்தது)பின்வருமாறு.
- அலவாக்கோட்டை
- தேவகோட்டை
- நாட்டரசன்கோட்டை
- அரியக்குடி
- ஆத்தங்குடி
- காரைக்குடி
- கீழப்பூங்குடி
- பலவான்குடி
- பனங்குடி
- ஆவினிப்பட்டி
- உலகம்பட்டி
- கடியாபட்டி என்னும் இராமச்சந்திரபுரம்
- கண்டவராயன்பட்டி
- கல்லுப்பட்டி
- கீழச்சிவல்பட்டி
- குருவிக்கொண்டான்பட்டி
- கொப்பனாபட்டி
- சிறுகூடற்பட்டி
- பனையப்பட்டி
- பொன்புதுப்பட்டி
- மகிபாலன்பட்டி
- மதகுப்பட்டி
- மிதிலைப்பட்டி
- தேனிப்பட்டி
- நற்சாந்துபட்டி
- நேமத்தான்பட்டி
- வலையபட்டி
- வேகுப்பட்டி
- வேந்தன்பட்டி
- பிள்ளையார்பட்டி
- அமராவதிபுதூர்
- சொக்கலிங்கம்புதூர்
- ஆ.தெக்கூர்
- ஒக்கூர்
- கண்டனூர்
- கோட்டையூர்
- செம்மபனூர்
- செவ்வூர்
- பள்ளத்தூர்
- வெற்றியூர்
- பாகனேரி
- கருங்குளம்
- தாணிச்சாவூரணி(சொர்ணநாதபுரம்)
- அரண்மனை சிறுவயல்
- ஆறாவயல்(சண்முகநாதபுரம்)
- உ. சிறுவயல்
- சிறாவயல்
- புதுவயல்
- காளையார்மங்கலம்
- கொத்தமங்கலம்
- பட்டமங்கலம்
- ராயவரம்
- கொத்தமங்கலம் லட்சுமிபுரம்
- க.சொக்கனாதபுரம்
- சோழபுரம்
- நடராஜபுரம்
- நாச்சியாபுரம்
- வி. லட்சுமிபுரம்
- குழிபிறை
- விராமதி
- பில்லமங்களம். அளகாபுரி
- கொல்லங்குடி. அழகாபுரி
- கோட்டையூர். அழகாபுரி
- மேலச் சிவபுரி
- விரையாச்சிலை
- பூலாங்குறிச்சி
- அரிமழம்
- கண்டரமாணிக்கம்
- கல்லல்
- கானாடுகாத்தான்
- கோனாபட்டு
- சக்கந்தி
- நெற்குப்பை
- ஆ.முத்துப்பட்டணம்
- மானகிரி
- இராங்கியம்
நகரத்தார் சத்திரங்கள்
தொகுவட இந்தியாவில்
தொகு- காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்
- அலகாபாத் நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம்
- கயா நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம்
குறிப்பிடத்தகுந்த நகரத்தார்கள்
தொகுஅரசியல் பங்களிப்பாளர்கள்
தொகு- ப. சிதம்பரம், இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர்.
- இராஜா சர் முத்தையா செட்டியார்
- கா.சண்முகம் என்கிற காசிவிசுவநாதன் சண்முகம், சட்ட, உள்துறை அமைச்சர், சிங்கப்பூர்.
- ராம நாராயணன்
- பழ. கருப்பையா
கல்வியாளர்கள்
தொகு- இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், நிறுவனர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- ராம. அழகப்பச் செட்டியார், நிறுவனர், அழகப்பா பல்கலைக்கழகம்
- கருமுத்து.தியாகராசன் செட்டியார், நிறுவனர் தியாகராசர் கல்லூரி
- சேவுகன் அண்ணாமலை செட்டியார், நிறுவனர், சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி
- நாகப்பன், துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்
- கதிரேசன், துணைவேந்தர், அண்ணாமலை பல்கலைக்கழகம்.
சட்டத் துறையினர்
தொகு- நீதியரசர் அரு. இலட்சுமணன், தலைவர், இந்திய சட்ட கமிஷன்; இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி.
- நீதியரசர் மெ. சொக்கலிங்கம், மெட்ராஸ் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி.
விளையாட்டுத் துறை
தொகு- மு. அ. சிதம்பரம் செட்டியார், தொழிலதிபர், முன்னாள் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். (சென்னையின் சேப்பாக்கம் கிரிக்கெட் ஆடுகளம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது.)
திரைப்படத் துறையினர்
தொகு- ஏ. வி. மெய்யப்ப செட்டியார், நிறுவனர், ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம்.
- கண்ணதாசன், திரைப்படப் பாடலாசிரியர்.
- எஸ். பி. முத்துராமன், 75-க்கும் மேற்பட்ட ஜனரஞ்சக திரைப்படங்கள் இயக்கியவர்
- இயக்குநர் வசந்த், ஏறத்தாழ 25 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியவர்.
- கரு.பழனியப்பன், இயக்குநர்
- ஏ.எல்.அழகப்பன், தயாரிப்பாளர்
- ஏ. எல். விஜய், இயக்குநர்
- இராம.நாராயணன், இயக்குநர், தயாரிப்பாளர்
- பஞ்சு அருணாசலம், திரைக்கதை ஆசிரியர், கவிஞர், தயாரிப்பாளர்
ஊடகத் துறையினர்
தொகு- சத்தி வை.கோவிந்தன், சத்தி காரியாலயம். தமிழ் பதிப்புலக தந்தை என போற்றக்கூடியவர்.
- தமிழ்வாணன், எழுத்தாளர், கல்கண்டு பொறுப்பாசிரியர்
- கண முத்தையா, தமிழ் பதிப்பகத் துறை முன்னோடி
- சின்ன அண்ணாமலை ,தமிழ் புத்தகாலயம்.
- எஸ். ஏ. பி. அண்ணாமலை, நிறுவனர், குமுதம் வார இதழ்.
- லேனா தமிழ்வாணன், இணை ஆசிரியர், கல்கண்டு இதழ்.
விடுதலைப் போராட்ட வீரர்கள்
தொகு- சின்ன அண்ணாமலை தேவகோட்டை
- ஆர்ச் அண்ணாமலை தேவகோட்டை
- சா.கணேசன், கம்பன் அடிப்பொடி, காரைக்குடி
பிற துறையினர்
தொகு● அருசோ, பொற்கிழிக்கவிஞர்
- ரோஜா முத்தையா செட்டியார்
- சோம வள்ளியப்பன் பொருளாதார நிபுணர்
- நா வள்ளி, நகரத்தாரியல் ஆய்வாளர்
- சு.இராசகோபால், கல்வெட்டு ஆய்வாளர்.
செட்டிநாட்டு நகைகள்
தொகுஅஞ்சல் தலைகள்
தொகு- ராஜா சர் அண்ணாமலை செட்டியார், 1980
- ராஜா சர் முத்தையா செட்டியார், 1987
- அ.மு.மு.முருகப்ப செட்டியார், 2005
- ஏ. வி. எம். மெய்யப்ப செட்டியார், 2006
- வள்ளல் அழகப்ப செட்டியார், 2007
- கவியரசர் கண்ணதாசன், 2013
- மு. வெ. அருணாச்சலம் செட்டியார்
-
ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
-
வள்ளல் அழகப்ப செட்டியார்
-
ராஜா சர் முத்தையா செட்டியார்
-
ஏ. வி. எம். மெய்யப்ப செட்டியார்
-
கவியரசர் கண்ணதாசன்
-
அ. மு. மு. முருகப்ப செட்டியார்
-
மு. வெ. அருணாச்சலம் செட்டியார்]]
இவற்றையும் காண்க
தொகுமேலும் வாசிக்க
தொகு- Rajeswary Brown. (1993). Chettiar capital and Southeast Asian credit networks in the inter-war period. In G. Austin and K. Sugihara, eds. Local Suppliers of Credit in the Third World, 1750-1960. New York: St. Martin's Press.
- David Rudner. (1989). "Banker's Trust and the culture of banking among the Nattukottai Chettiars of colonial South India". Modern Asian Studies 23(3), 417-458.
- David West Rudner. (1994). "Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars". University of California Press.
- Heiko Schrader. (1996). "Chettiar finance in Colonial Asia". Zeitschrift fur Ethnologie 121, 101-126.
- Nishimura, Yuko Gender. (1998). Kinship and Property Rights: Nagarathar Womanhood in South India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564273-2.
வெளியிணைப்புகள்
தொகு- நகரத்தார் மரபும் பண்பாடும் - காணொலி
- Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars, A Research by David W. Rudner submitted to University of California
- Adaikkammai Appathal Padaippu Veedu (Nachandupatti) website is a No.1 website for padaippu veedu
- Nagarathar History Researched and Compiled by PL. Chidambaram பரணிடப்பட்டது 2008-01-22 at the வந்தவழி இயந்திரம்
- PDF FILE - Chettiars in Burma by Sean Turnell a research paper பரணிடப்பட்டது 2012-02-16 at the வந்தவழி இயந்திரம்
- Classic Chettinad: Home Alone by Outlook traveler Dt: JUL 2004 பரணிடப்பட்டது 2007-04-15 at the வந்தவழி இயந்திரம்
- Centenary celebrations of Dr Sir Rajah Muttiah Chettiar by "Daily life" Dt , Nov 25 பரணிடப்பட்டது 2008-11-23 at the வந்தவழி இயந்திரம்
- History of a trading community by "The Hindu" Dt 06/08/2002 பரணிடப்பட்டது 2012-11-10 at the வந்தவழி இயந்திரம்
- Life Sketch of SIR M.Ct. Muthiah Chettiar 1887-1929 in Hindu high school பரணிடப்பட்டது 2009-02-07 at the வந்தவழி இயந்திரம்
- Rituals & Customs - Tamil Chettiar on Shaadi online
- நகரத்தார் உறவுமுறைப்பெயர்கள் - திண்ணை இணைய இதழில் முனைவர் மு.பழனியப்பன் கட்டுரை
- வட அமெரிக்க நகராத்தார் சங்கம்
- ஐக்கிய அரபு நகரத்தார் சங்கம் பரணிடப்பட்டது 2011-09-02 at the வந்தவழி இயந்திரம்
- UK நகரத்தார் சங்கம்
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "நகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்"கட்டுரை பரணிடப்பட்டது 2009-01-24 at the வந்தவழி இயந்திரம்
- காந்திய கிராமங்கள் வலைப்பூவில் வெளியான நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு
- நகரத்தார் குல தெய்வங்கள்
- நகரத்தார் திருப்பணி செய்த கோயில்கள்
- உயர்ந்த மனிதர்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Aline Dobbie (2006). India: The Elephant's Blessing. Melrose Books. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-905226-85-3.
- ↑ "Chettinad's legacy". Frontline (in ஆங்கிலம்). 2018-11-20. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.