கௌரிசங்கம் (அணிகலன்)

கௌரிசங்கம் என்பது செட்டிநாட்டுத் திருமண அணிகலன்களுள் ஒன்றாகும். செட்டிநாட்டினர் என அழைக்கப் பெறும் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியினர் திருமணம் அல்லது சாந்திக் கல்யாண (சஷ்டியப்த பூர்த்தி) நாளன்று மணமகன் இந்த அணிகலனை அணிந்து கொள்கிறார்.

உருத்திராட்ச மாலைதொகு

கௌரி சங்கம் என்பது ஒரு உருத்திராட்ச மாலையாகும். இந்த கௌரிசங்கத்தில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள், தொங்கட்டான் (பெண்டன்ட்) போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தத் தொங்கட்டானில் ரிசபாருடர் எனும் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்.[1]

இதையும் பார்க்கதொகு

கழுத்திரு (அணிகலன்)

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரிசங்கம்_(அணிகலன்)&oldid=1147990" இருந்து மீள்விக்கப்பட்டது